வழங்கியவர் : திருமதி. பானுமதி குமரப்பன்
தேதி : வெள்ளி, 19/02/2010 - 16:16
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- ப்ரெட் - 4
- இட்லி மாவு - ஒரு கப்
- கொத்தமல்லித்தழை - 2 கொத்து
- உப்பு - அரை தேக்கரண்டி
- மிளகு - ஒரு தேக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
![]() |
கொத்தமல்லித்தழையை ஆய்ந்து தண்ணீரில் அலசிக் கொள்ளவும். மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாக பொடி செய்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். |
![]() |
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ளவும். பிறகு அதன் மேல் அலசிய கொத்தமல்லித் தழையை தூவி கலந்துக் கொள்ளவும். |
![]() |
பின்னர் அதனுடன் பொடி செய்த மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும். |
![]() |
கரைத்து வைத்திருக்கும் மாவில் ஒரு ப்ரெட் ஸ்லைஸை எடுத்து மாவில் வைத்து ப்ரெட்டின் இரண்டு புறங்களிலும் மாவு படரும்படி நன்கு தோய்த்துக் கொள்ளவும். |
![]() |
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி காய வைக்கவும். காய்ந்ததும் தோய்த்து வைத்திருக்கும் ப்ரெட்டை போட்டு மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். |
![]() |
2 நிமிடம் கழித்து வெந்ததும் திருப்பி போட்டு மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். பிறகு மீண்டும் 2 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து எடுத்து விடவும். |
![]() |
ப்ரெட் ஊத்தாப்பம் தயார். மிக எளிதில் செய்ய கூடிய மாலை நேர சிற்றுண்டி. இதை சாஸுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும். |
![]() |
இந்த எளிமையான குறிப்பை நமக்காக செய்து காட்டியவர் திருமதி. பானுமதி குமரப்பன் அவர்கள். பழமையும், புதுமையும் கலந்த புதுவகை சமையல்கள் செய்வதில் திறன் வாய்ந்தவர். கணவர் மருத்துவர் என்பதால், இவரது தயாரிப்புகளில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். |
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்








பார்த்தவுடன் சாப்பிடனும்னு தோணுது,இரண்டும் வீட்டில் இருப்பதால் உடனே செய்து பார்த்திடவேண்டியது தான்,அவசரத்திற்கு செய்து அசத்திட அருமையான டிபன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ரொம்ப அருமையாக இருக்கு
Jaleela
Thanks for ur different recipe.
Its very nice.
நம்பிக்கை, பொறுமை
Ramyasen