மோஜரில்லா சீஸ் ஸ்டிக்

வழங்கியவர் : seyedkatheeja
தேதி : திங்கள், 22/02/2010 - 01:50
ஆயத்த நேரம் : 10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு : 2 நபர்கள்
- மோஜரில்லா சீஸ் - 200 கிராம்
- மைதா மாவு - 1 கப்
- ரஸ்க் தூள் - 1 கப்
- முட்டை - 2
- பால் - 2 மேசைக்கரண்டி
- மிளகு தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - 1/2 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை - சிறிது காய்ந்தது
- எண்ணெய் - பொரிக்க
- முதலில் சீஸை ஒரு விரல் அளவு நீளத்திற்க்கு கட் செய்துக்கொள்ளவும்.
- பின் கிச்சன் பேப்பர் கொண்டு சீஸில் இருக்கும் ஈரத்தை நன்கு ஒற்றி எடுக்கவும்.
- பின் ரஸ்க் தூளில் மிளகு தூள்,கொத்தமல்லி இலை,உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
- மைதாவையும் ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.
- முட்டையை கலக்கி பால் சேர்த்து நன்கு அடித்து வைக்கவும்.
- பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை குறைத்து வைத்து ஒவ்வொரு சீஸ் துண்டாக எடுத்து முதலில் மைதா மாவில் பிரட்டி,பின் முட்டையில் முக்கி,திரும்பவும் மைதா மாவில் பிரட்டி முட்டையில் முக்கி, ரஸ்க் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரிந்ததும் உடனே எடுத்துவிடவும்.
- இதே போல எல்லா சீஸ் துண்டுகளையும் பொரித்து எடுக்கவும்.
- சுவையான சீஸ் ஸ்டிக தயார். தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.
Note:
இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தீயை குறைத்து வைத்து எண்ணெயில் போட்டு பொரிந்ததும் உடனே எடுத்து விடவும். இல்லை என்றால் சீஸ் உருகி வெளியில் வந்துவிடும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
சுவையாக இருக்கும் என்பது குறிப்பைப் படிக்கும் போதே தெரிகிறது கதீஜா.
இமா
எப்படி இருக்கீங்க.சுவையாக இருக்கும் செய்து பார்த்து சுவைத்த பின் சொல்லுங்க. உங்க கருத்துக்கு நன்றி.
அன்புடன் கதீஜா
மிகவும் வித்தியாசமாக இருந்தது
ட்ரை செய்தேன்
மீதம் இருந்த மாவில் கொஞ்சம் பிரட் சேர்த்து செய்தேன்
அதுவும் நன்றாக வந்தது
கலக்குறீங்க கதீஜா மேடம்
எனக்கு சப்பாத்தி பூரி softa வரவே இல்லை
இங்கே whole wheat flour கிடைக்கிறது
இந்தியன் பிராண்ட்ஸ் எதுவுமே இல்லை
எதாவது டிப்ஸ் சொல்லுங்க ப்ளீஸ்
ஆல் தி பெஸ்ட்
Dream as if you will live forever live as if you will die today
அன்புடன்,
கவிதா
செய்து பார்த்தாச்சா டேஸ்டா இருந்ததா.ரெம்ப நன்றிப்பா. சந்தோஷமா இருக்கு உங்க பின்னூட்டம். குறிப்பு கொடுக்குறதுக்கு பின்னூட்டம் வந்தால் தான் ஒரு எனர்ஜி கிடைக்கும். திரும்ப குறிப்பு கொடுக்கவும் ஆர்வமாக இருக்கும். உங்க கருத்துக்கு மிக்க நன்றி.சப்பாத்திக்கு டிப்ஸ் திவ்யா சூப்பரா கொடுத்திருந்தாங்க அப்படி ட்ரை செய்து பாருங்க.
எனக்கு பில்ஸ்பெர்ரி கிடைக்கும். சில சமயம் whole wheat flour அதில் சிறிது உப்பு,சீனி.3 மேசைக்கரண்டி நெய் ஊற்றி கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து 1/2 மணி நேரம் கழித்து மாவு வளாக்கும் போது மாவு சேர்த்து வளர்த்து பின் எண்ணெய் பூசி மடித்து வைக்கவும். எல்லா மாவையும் இதே போல செய்து விட்டு பின் வளர்த்து சுடவும் தேவையானால் சுடும் சமயம் எண்ணெய் சுற்றிலும் ஊற்றலாம். இல்லைன்னா அப்படியே 2 பக்கமும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும் தீயை சுமாராக வைக்கனும். இல்லன்னா சப்பாத்தி பிஸ்கட் போல ஆகிவிடும்.
சுட்ட பிறகு 3 சப்பாத்திகளாக வைத்து 2 கைகளாலும் நன்கு தட்டி விட்டு வைக்கவும் அப்பொழுதுதான் நீண்ட நேரம் சாப்ட்டாக இருக்கும்.நான் இப்படி தான் செய்வது.ட்ரை செய்துட்டு சொல்லுங்க.
அன்புடன் கதீஜா.
எனக்கு இங்கே pillsburry, ashirvaad கிடைப்பது இல்லை
திவ்யா மேடம் சொன்னது போல் செய்யலாம் என நினைக்கிறன்
நீங்க சொன்னதையும் எடுத்துக்கிறேன்
என் மகளுக்கு தான் சப்பாத்தி பூரி இதெல்லாம் பிடிக்கும்
அவளுக்கு சரியானதும் முதல் வேலை இதுதான்
அன்புடன்,
கவிதா