ஈஸி பரோட்டா

வழங்கியவர் : appufar

தேதி : திங்கள், 22/02/2010 - 11:09

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

4.17647
34 votes
Your rating: None
 

 

  • மைதா மாவு - அரைக் கிலோ
  • பால் - ஒரு கப்
  • பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
  • சீனி - 2 தேக்கரண்டி
  • உப்பு - 1 1/2 தேக்கரண்டி
  • நெய் - கால் கப்
  • எண்ணெய் - 100 மி.லி

 

 

கொடுத்திருக்கும் தேவையானப் பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவை எடுத்துக் கொள்ளவும். பாலில் சீனி, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கரைத்து மாவில் ஊற்றி பிசறிய பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும். பிசைந்த மாவு கையில் சிறிதும் ஒட்டாமல் மிருதுவாக இருக்க வேண்டும். இதுவே சரியான பதம்.

பிறகு ஒரு ஈரத் துணியை கொண்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை நன்கு மூடி அதற்கு மேல் மூடி போட்டு முக்கால் மணி முதல் ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கவும்.

கையில் சிறிது நெய் தடவி கொண்டு மாவிலிருந்து சப்போட்டா அளவிலான உருண்டை உருட்ட தேவையான மாவை எடுத்து அழுத்தி நான்கு பக்கம் மடித்து பின் உருண்டை உருட்டினால் உருண்டை ஸ்மூத்தாக இருக்கும். அந்த உருண்டையின் மேல் நெய் முழுவதும் தடவி வைக்கவும்.

மீதமிருக்கும் மாவு முழுவதும் இதேப்போல் செய்யவும். (மொத்தம் ஒன்பது உருண்டைகள் வரும்). அதையும் ஈர துணி கொண்டு மூடி அதன் மேல் தட்டு போட்டு மூடி குறைந்தது இரண்டு மணி நேரம் வைத்திருக்கவும்.

ஒரு மீடியமான மரவை எடுத்து அதில் நன்கு எண்ணெய் தடவிக் கொள்ளவும். சப்பாத்தி உருட்டும் கட்டையிலும் எண்ணெய் தடவி கொண்டு மாவு உருண்டையை அதில் வைத்து எவ்வளவு மெல்லியதாக தேய்க்க முடியுமோ அவ்வளவு மெல்லியதாக மாவை தேய்த்து வைக்கவும்.

பிறகு விரலால் எண்ணெய் எடுத்து தேய்த்து வைத்திருக்கும் மாவில் தெளித்து விட்டு அதை முன்னும், பின்னும் மாறி மாறி மடிக்கவும் அல்லது ஒன்று சேர்த்து சுருட்டி அதன் மேலே எண்ணெய் தொட்டு வைக்கவும்.

இதேப்போல் எல்லா உருண்டைகளையும் செய்து வைக்கவும்.

அடுப்பில் தவாவை வைத்து சூடுப்படுத்தி முதலில் சுருட்டிய உருண்டையை சப்பாத்தி உருட்டும் கட்டையால் ரொம்ப மெல்லியதாகவும், மொத்தமாகவும் இல்லாமல் திட்டமாக தேய்த்து சூடேறிய தவாவில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

லேசாக தூக்கி பார்த்து சிவந்ததும் பரோட்டாவை திருப்பி போட்டு ஒரு தேக்கரண்டி நிறைய எண்ணெயை சுற்றிலும் ஊற்றி எல்லா இடத்திலும் படுமாறு செய்யவும்.

மீண்டும் லேசாக பரோட்டாவை தூக்கி பார்த்து நன்கு சிவந்திருந்தால் மறுபடியும் திருப்பி போட்டு சிவந்ததும் தவாவை விட்டு எடுத்து மரவையில் வைத்து இரண்டு கைகளால் பரோட்டாவை உள்நோக்கி மூன்று முறை அடிக்கவும்.

இப்போது சுவையான மிருதுவான ஈஸி பரோட்டா ரெடி. இந்த சுவையான குறிப்பினை திருமதி. அப்சரா அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்

 

பரோட்டா என்றால் விசுறுவது என்பது தான் சிறப்பு. அப்படி இல்லாமல் இப்படியும் செய்யலாம் நன்றாகவே வரும் என்று செய்து காட்டி உள்ளேன். இது முதன் முதலில் சமைக்க கற்று கொள்பவர்களுக்காக விரிவாக சொல்லி உள்ளேன் இந்த முறை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செய்வதற்கு எளிமையாக இருக்கும். அதே போல் ப்யூர் வெஜ் சாப்பிடுபவர்கள் முட்டை இல்லாமல் செய்வதை தான் விரும்புவார்கள். இது போல் என் ஃப்ரண்டுக்காக நான் முட்டை இல்லாமல் முயற்சி செய்து அது நன்கு வரவே இப்போது முட்டை சேர்க்காமல் தான் செய்கிறேன். இது கடை பரோட்டா போல் இருக்கும். எனவேதான் நிறைய தோழிகளுக்கு இது பயன்பெறும் என்று இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.







Mohana ஹாய் அப்சரா மேடம் இந்த பரோட்டா பார்ப்ப்தற்கே மிகவும் சுப்ப்ரா இருக்கு,கண்டிப்பா டிரை பண்ணிட்டு சொல்றேன் .

Mohana

அப்சரா எப்படி இருக்கிங்க நம்ம ஊர் பரோட்டாவ சூப்பர். அப்புரம் யாரும் சீனி துவைபோட வில்லை என்று நினைக்கிறேன் நீங்க போடவும்.

சுவைக்கத்தூண்டும் பரோட்டா.சூப்பர்.படம் அருமை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

குமாரி அவர்களே....,எப்படி இருக்கீங்க....?
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

ஹாய் ரெய்ஹானா,நன்றாக இருக்கின்றீர்களா....?
தங்கள் கருத்து கண்டு எனக்கு மிகவும் சந்தோஷம்.
ஆமாம் ரெய்ஹானா....சீனி துவை செய்யலாம் தான்.
ஆனால் எல்லொரும் அதை விரும்புவார்களா...?
அதான் ஒரு சின்ன சந்தேகமாக உள்ளது.உங்களுக்காக செய்து அனுப்ப முயற்ச்சி செய்கிறேன்.
கருத்துக்கு மிக்க நன்றி.

ஆசியா மேடம் எப்படி இருக்கீங்க....?
வீட்டில் அனைவரும் நலம் தானே ...?
ஒவ்வொறு முறையும் உங்கள் பின்னூட்டத்தை பார்க்கும் போது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.
மிகவும் நன்றி.
அப்புறம் இன்னொரு விஷயம்...,பரோட்டா பக்கத்தில் இருப்பது என்ன தெரியுமா....உங்கள் கை வண்ணமான எம்டி சால்னா தான்.அது எங்கள் வீட்டு பிடித்தமான ஒன்றாக அல்லவா ஆகி விட்டது.
அதற்க்கும் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் அல்லவா...?
மிகவும் நன்றி ஆசியா மேடம்.

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அப்ச‌ரா,
ப‌ரோட்டா செய்முறையும், ப‌ட‌ங்க‌ளும் சூப்ப‌ரோ சூப்பர்!. என‌க்கு இப்ப‌வே சாப்பிட‌னும்னு ஆர்வமா இருக்கு :) இத்த‌னை அழ‌காக‌ ஸ்டெப் பை ஸ்டெப்பாக‌ விள‌க்கி இருப்ப‌து ரொம்ப‌வும் சிற‌ப்பு. முடியும்போது கட்டாயம் முயற்சித்து பார்க்கிறேன். ந‌ன்றி!
கூட‌வே ஆசியா அக்காவின் எம்டி சால்னா குறிப்பை (சுவையான இந்த குறிப்பு‍, ‍எப்படியோ என் கண்ணில் படவே இல்லை) அடையாள‌ம் காட்டிய‌த‌ற்கும் ஒரு எக்ஸ்ட்ரா ந‌ன்றி! :)

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் அப்சரா சீனி துவை நான் சூப்பர செய்வென். இது நம்ப தோழிகளுக்கு. நன்றி

எம்டி சால்னா செய்து கருத்தும் தெரிவித்து பரோட்டாவுடன் பரிமாறியமைக்கு மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எம்டி சால்னா செய்து கருத்தும் தெரிவித்து பரோட்டாவுடன் பரிமாறியமைக்கு மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அப்சாரா, உங்கள் பரோட்டா பார்க்கும் போதேச் செய்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது. செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் தருகிறென்.அது என்ன சீனி துவை? the Energy for the future generation

Save the Energy for the future generation

அப்ஸரா, பரோட்டா சூப்பரா வந்ததுங்க..ஈசியான மெதட்ல ஒரு சூப்பர் ரெசிப்பி கொடுத்ததற்கு நன்றி!
அன்புடன் ,
மகிஅருண்

Easy Barotta Receipe. I love it. and I will prepare it.

ஹாய் மகி... எப்படி இருக்கீங்க....?
செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்க்கு மிகவும் நன்றிங்க.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் சாம்...,நலம் தானே..?
தங்கள் பின்னூட்டத்தை கண்டு மிக்க மகி்ழ்ச்சி.நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா... பரோட்டா சூப்பர்!!! இன்னைக்கே செய்துடலாமா இல்லை நாலை செய்யலாமா'னு தான் இப்போ யோசிக்கறேன் ;). கூடவே ஆசியா சால்னா'வும் செய்துடணும்.... இருங்கோ... இந்த வாரத்துக்குள்ள ஒரு நாள் நிச்சயம் இரண்டையும் செய்து நல்லா சாப்பிட்டு பதிவு போடுறேன். சுப்பரா இருக்கும்'னு பார்த்தாலே தெரியுது. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்சரா... பரோட்டா செய்து சாப்பிட்டேன்.
//இது கடை பரோட்டா போல் இருக்கும்//
கடை பரோட்டா போல் இருக்கும்'னு ஏன் பொய் சொன்னீங்க????

உண்மையில் கடை பரோட்ட இந்த பரோட்டா கிட்ட நிக்க முடியாது!!! :) அவ்வளவு சூப்பரா இருந்தது உங்க பரோட்டா. பயந்துட்டீங்களா???? ஹஹஹா.... very very tasty.... very very soft!!! வீட்டில் அத்தனை பேருடைய பாராட்டு மழையில் நனைந்துட்டு இப்போ தான் வரேன்.... ;) ரொம்ப நன்றி ஈஸியான சூப்பரான குறிப்பு குடுத்தமைக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி...,
எம்மாடியோ.....என்னது பயந்துட்டீங்களாவா...
இப்படி என்னை பயமுறுத்திட்டீங்களே....ஹய்யோ...ஹய்யோ...
பரவாயில்லை அடுத்த வரியை படிச்சுபுட்டுதான் நிம்மதியாச்சு.
செய்து பார்த்து உடனே தெரிவித்தமைக்கு எனது நன்றிகள் பல.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அப்சரா, நலமா, நீங்க துபாயில் எங்கு இருக்கீங்க, நானும் துபாயில் தான் இருக்கிறேன், உங்கள் குறிப்புக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. நன்றி, உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன். உங்களைப் பற்றி சொல்லுங்க. உங்க இ-மெயில் id இருந்தா குடுங்க. என்னோட id spram2005@gmail.com

அப்சரா,
பார்க்கவே ஆசையாக இருக்கிறது. விரைவில் செய்து பார்த்து விட்டுப் பின்னூட்டத்தோடு வருகிறேன்.

இமா

இந்த பரோட்டா செய்ய allpurpose மாவு உபயோகிக்கலாமா?
நான் நாளை இதை செய்யலாம் என்று இருக்கிறேன்.
நன்றி

ஹாய் ஜெயந்தி,நன்றாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
நான் ஆனால் இதுவரை அதில் செய்தது இல்லை.வேண்டுமானால் பால் கால் டம்ளர் கூட சேர்த்து அதற்க்கேற்றார் போல் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைத்து விடுங்கள்.நிச்சயம் நன்றாகவே இருக்கும்.செய்து பார்த்துட்டு சொல்லுங்க...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

you can make parotto. dough mix in little lose. dont make like chappati's dough. you want very soft. 1 or2 egg with 2tabspoonoil mix well then ad dwater and atta

உங்க எம்டி சால்னா எங்க(link) இருக்கு.pls சொல்லுங்க

ஹசீன்

"இறைவன் கொடுப்பதை தடுப்பவர் எவருமில்லை,

இறைவன் தடுப்பதை கொடுப்பவர் எவருமில்லை"

அப்சரா எனக்கு பரோட்டா என்றால் உயிர் .என் பையனுக்கும் ரொம்ப பிடிக்கும் .
இன்றுதான் உங்களின் குறிப்பு பார்த்தேன் .கண்டிப்பாக செய்துவிட்டு சொல்கிறேன்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்ஸலாமு அலைக்கும் ஹசீனா...,நலமா?
ஸாரிங்க இப்பதான் உங்க கேள்வியை பார்க்கிறேன்.
ஆசியா மேடம் அவர்களின் எம்டி சால்னாவின் லிங்க் இதோ...
http://www.arusuvai.com/tamil/node/11301
ரொம்ப நல்லா இருக்கும் செய்து பாருங்க.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அஸ்வதா..... நிச்சயம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

really really superb receipe... yesterday i made easy parotta as u mentioned.it comes too good. and make with salna that is awesome.i am totally crazy about ur receipes.. what a women u r.. fantastic.. keep up ur good work.. thankz a lot for ur mouth watering receipes...

"The best way to cheer yourself up is to try to cheer somebody else up."

வாங்க வாங்க கைகுடுங்க;) ரொம்ப நன்றி சூப்பரான பரோட்டா உங்க தயவால நானும் செஞ்சேன். அனைவரது பாராட்டும் பெற்றேன். என்னாலையும் பரோட்டோ செய்ய முடிஞ்சதுன்னு (அதுவும் சூப்பரா) நானும் கொஞ்சம் குதிச்சேன் சந்தோஷத்துல;-) அப்புறம் ரெசிப்பி கொடுத்த உங்கள பாராட்டாம இருக்க முடியுமா அதான் இந்தப் பதிவு.

மேலும் மேலும் பல குறிப்பு தர வாழ்த்துக்கள்;-)

{ஆசியா சால்னாவும் சான்சே இல்லை சூப்பரா இருந்தது.;-)}

Don't Worry Be Happy.

தாங்கள் செய்து பார்த்து உடனே அதனை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி லட்சுமி.... தங்கள் பாராட்டுக்கும் மிக மிக நன்றி...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் ஜெயா வாங்க.... செய்து பார்த்தீங்களா...?மிகவும் சந்தோஷம்.
நீங்க சந்தோஷத்தில் குதித்ததை படித்ததும் எனக்கு குதிக்கணுனு தோணுச்சு...
உங்கள் சந்தோஷத்தை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி....
உங்கள் பாராட்டுக்கும் மிகவும் நன்றி......

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நலமா அப்சரா? உங்கள் ஈசி பரோட்டா சூப்பர் .நேற்று செய்தேன்
நல்ல சுவை மொறுமொறுன்னு சாப்பிட சுவையாக இருந்தது
வாழ்த்துக்கள் அப்சரா..

வாழு, வாழவிடு..