பேப்பர்கப் பெல் செய்வது எப்படி?

தேதி: February 22, 2010

4
Average: 3.8 (5 votes)

 

பேப்பர்கப் - 2
சம்கி தூள் - கோல்டன்நிறம்
ஃபேப்பரிக் பெயிண்ட் - சிவப்பு
கோல்டுநிற பெயிண்ட்
ரிப்பன் லேஸ் - ஆரஞ்சு, மஞ்சள் நிறங்கள்
சலங்கைகள் - 2
கோல்டன்நிற கம்பி

 

பேப்பர்கப் பெல் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பேப்பர்கப்பின் வெளிப்புறம் முழுவதும் கோல்டுநிற பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.
அந்த பெயிண்டின் ஈரம் காய்வதற்கு முன்னர் மற்றொரு ப்ரஷால் கோல்டன்நிற சம்கி தூள்களை தொட்டு அந்த கப்பில் அடித்துக் கொள்ளவும்.
மற்றொரு கப்பில் சிவப்புநிற பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.
முன்பு செய்தது போன்று சிவப்புநிற கப்பிலும் சம்கித் தூள்களை அடித்துக் கொள்ளவும்.
இதுப்போல் இரண்டு கப்பிலும் பெயிண்ட் செய்து காயவிடவும்.
20 செ.மீ அளவுள்ள கோல்டன்நிற கம்பிகளை இரண்டு எடுத்துக் கொண்டு அதில் சலங்கைகளை கோர்த்துக் கொள்ளவும்.
பெயிண்ட் செய்திருக்கும் கப்பின் அடிவழியாக சலங்கை கோர்த்த கம்பியை விட்டு மேல் வழியாக இழுக்கவும். மேல் வழியாக இழுக்கும் போது கம்பி நடுவில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
பிறகு வெளியில் நீட்டியிருக்கும் கம்பிகளை ஒன்றாக சேர்த்து சிறிய வளையம்போல் செய்துக் கொள்ளவும்.
அந்த வளையத்தில் மெல்லிய நூல் போன்ற லேஸை தேவையான அளவு எடுத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். கோல்டு நிற கப்பில் கம்பிகளும், லேஸும் இணையும் இடத்தில் சிவப்புநிற பெரிய லேஸை கொண்டு போவ் போன்று கட்டிக் கொள்ளவும்.
மேலே கோர்த்த மெல்லிய லேஸின் அளவைவிட கால் பாகம் குறைவாக எடுத்துக் கொண்டு, அதை மற்றொரு கப்பில் உள்ள கம்பியின் துளையில் கோர்த்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். இப்போது சிவப்புநிற கப்பில் மஞ்சள்நிற ரிப்பன் லேஸை கொண்டு போவ் போல் கட்டிக் கொள்ளவும்.
பிறகு இரண்டு கப்களில் உள்ள நூல்களை ஒன்றாக சேர்த்து ஒரு நூலில் கோர்த்து முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். இப்பொழுது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய அழகிய பேப்பர்கப் பெல் தயார். இதை கிறிஸ்மஸ் போன்ற விஷேசதினங்களில் வீட்டில் கட்டி அழகுப்படுத்தலாம்.
இந்த பேப்பர்கப் பெல் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் செண்பகா மேடம்,இந்த பெல் ரியலி சுப்பர் கண்டிப்பா நானும் டிரைப்பன்றேன்

Mohana

'பெல்' அழகா இருக்கு பாப்பி, பாராட்டுக்கள்.
கப் எல்லாம் சேர்த்து வைப்பீங்களா? :)

வருட இறுதியில் என் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அருமையான பேப்பர்கப்பெல். எளிமையான செய்முறை. வாழ்த்துக்கள்!!!!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

dear shenbaga,
you have done a good work
i hav tried this and i think it l help me in my kolu
keep giving more tips
all the best

என்றும் அன்புடன்,
கவிதா

Hi Shenbagam Madam paper cup bell is very mam.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta