மைதா கார போண்டா

வழங்கியவர் : திருமதி. சரசா சுப்ரமணியன்

தேதி : செவ்வாய், 23/02/2010 - 12:43

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

3.2
5 votes
Your rating: None
 

 

  • மைதா மாவு - அரை கப்
  • அரிசி மாவு - கால் கப்
  • வெங்காயம் - 2
  • எண்ணெய் - ஒரு கப்
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2
  • சோடா உப்பு - ஒரு சிட்டிகை

 

 

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பிசறி உப்பு, சோடா உப்பு சேர்த்து பிசையவும்.

அதில் அரை கப் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றவும். இதை போல 5 கரண்டி ஊற்றவும்.

30 நொடி கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும். ஒரு முறைக்கு 5 போண்டாக்கள் போட்டு எடுக்கலாம்.

எளிதில் செய்யக்கூடிய மாலை நேர சிற்றுண்டி இது. இந்த எளிமையான குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. சரசா சுப்ரமணியன் அவர்கள்.

 







நேற்று நான் இந்த குறிப்பை செய்து பார்த்தேன். super ஆக வந்தது.

Lalitha

good

நானும் இந்த கார போண்டா செய்தேன். நன்றாக இருந்து, இதில் முட்டை சேர்த்து செய்யலாம. நன்றாக வரும்மா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா