சில்வர் வால் ஹேங்கிங்

தேதி: February 25, 2010

5
Average: 4.3 (7 votes)

 

பழைய செய்தித்தாள்
டூத்பேஸ்ட் பாக்ஸ்
சில்வர்நிற பேப்பர்
சிவப்புநிற ரிப்பன் லேஸ்
சிறிய செயற்கை ரோஜாக்கள்
பெவிக்கால்
கத்தரிக்கோல்

 

மேற்சொன்ன தேவையான பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உங்களுக்கு எந்த அளவிற்கு வால் ஹேங்கிங் செய்ய வேண்டுமோ அந்த அளவிற்கு செய்தித்தாளை கிழித்து எடுத்துக் கொள்ளவும். பேப்பர் என்பதால் தடிமனாக செய்தால் தான் நன்கு வழுவாக இருக்கும். ஒரு பேப்பரை எடுத்து இரண்டாக கிழித்து அதிலும் பாதி எடுத்து முதலில் ஏதாவது ஒரு பக்கத்தினை மெல்லியதாக இரண்டு முறை மடக்கிக் கொள்ளவும். அதனை அப்படியே நெருக்கமாக சுருட்டவும்.
நன்கு சுருட்டி குச்சி போன்று கொண்டுவர வேண்டும். கடைசியாக பேப்பர் முடியும் இடத்தில் பெவிக்கால் தடவி ஒட்டி விடவும்.
இதைப்போல் 12 குச்சிகள் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சில்வர்நிற பேப்பரை செய்து வைத்திருக்கும் பேப்பர் குச்சிகளின் நீளத்திற்கேற்றவாறு இரண்டு செ.மீ அகலத்தில் 12 பேப்பர்கள் நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
பேப்பர் குச்சிகளின் மேல் இந்த சில்வர்நிற பேப்பரை கம் தடவி ஒட்டி விடவும். முதலில் 6 குச்சிகளை மட்டும் சமமான இடைவெளியில் அடுக்கிக் கொள்ளவும்.
அதன் மேல் மீதமிருக்கும் 6 குச்சிகளை சமமான இடைவெளியில் வைத்து பெவிக்கால் கொண்டு ஒட்டி விட்டு நன்கு காய விடவும்.
பழைய பேஸ்ட் டப்பாக்கள் போன்று ஏதாவது ஒரு டப்பாவை எடுத்து கொள்ளவும். அதை இரண்டாக நறுக்கி எடுத்து கொண்டு அதில் ஒரு டப்பாவில் மட்டும் சில்வர்நிற பேப்பரை சுற்றிலும் ஒட்டி வைத்துக் கொள்ளவும்.
அதை செய்து வைத்திருக்கும் ப்ரேமில் கீழ் பகுதியில் படத்தில் உள்ளது போல் ஒட்டிவிட்டு நன்கு காயவிடவும்.
காய்ந்ததும் எடுத்து அதன் ஓரங்களில் மட்டும் சிறிய ரோஜா பூக்களை ஒட்டி அலங்கரிக்கவும். அந்த பாக்ஸின் நடுவில் சிவப்பு நிற ரிப்பனைக் கொண்டு அழகிய போவ் போல செய்து பெவிக்கால் வைத்து ஒட்டி காயவிடவும்.
பின்னர் அதில் சில பூங்கொத்துக்களை வைத்து அலங்கரிக்கவும். மிகவும் எளிமையாக செய்யக்கூடிய அழகிய சில்வர் வால் ஹேங்கிங் தயார். சில்வர்நிற பேப்பர் பதிலாக கிப்ட் பேப்பரிலும் இந்த வால் ஹேங்கிங் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகாக இருக்கிறது
யார் செய்த அற்புதம் இது....

எனக்குத் தெரியும் தேன்.;) கண்டு பிடித்துவிட்டேன், ஆனால் சொல்ல மாட்டேனே. ;)

அழகா இருக்கு - ஐடியா,
அழகா இருக்கு - வால்ஹாங்கர்,
அழகா இருக்கு - அதைச் செய்த கைகள். ;)

பாராட்டுக்கள்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

வால் ஹேங்கிங் அருமையாக இருக்கு.யாரு இமா,நானும் ஒருதரை கெஸ் பண்றேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான்தான் சொல்ல மாட்டேன் என்று முதலிலேயே சொல்லிவிட்டேனே ஆசியா. ;) நிச்சயம் நானில்லை.

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta