இறால் வடை

வழங்கியவர் : திருமதி. செல்வி செந்தில்

தேதி : வியாழன், 25/02/2010 - 16:56

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

3
3 votes
Your rating: None
 

 

  • இறால் - ஒரு கப்
  • பொட்டுகடலை - கால் கப்
  • தேங்காய் துருவல் - அரை கப்
  • சின்ன வெங்காயம் - அரை கப்
  • மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - ஒரு தேக்கரண்டி

 

 

இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பொட்டுகடலை, தேங்காய் துருவல் சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சுத்தம் செய்த இறாலையும் நன்கு மையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு தேங்காய் விழுதுடன் அரைத்த இறால், மிளகாய் தூள், சோம்பு தூள், மஞ்சள் தூள், உப்பு, நறுக்கின வெங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி கையில் வைத்து தட்டி எண்ணெயில் போடவும்.

இரு பக்கமும் வெந்ததும் எண்ணெயை வடித்து விட்டு எடுக்கவும்.

சுவையான இறால் வடை தயார். இந்த வடை குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக விளக்கப்படங்களுடன் செய்து காட்டியவர் திருமதி. செல்வி செந்தில் அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.

 







ரொம்ப ஈசியாக ருசியாக செய்து அசத்திட்டீங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆவலைத் தூண்டுகிறதே.. ;)

இமா