ரிச் கேசரி [குழந்தைகளுக்காக]

வழங்கியவர் : seyedkatheeja
தேதி : ஞாயிறு, 07/03/2010 - 20:21
ஆயத்த நேரம் : 5 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு : 5 குழந்தைகள்
- ரவை - 1 கப்
- சீனி - அரை கப்
- மில்க் மெய்டு - 3 மேசைக்கரண்டி
- கேசரி கலர் - தேவைக்கு
- பாதாம் - 5
- பிஸ்தா - 5
- முந்திரி - 5
- நெய் - 3 மேசைக்கரண்டி
- பால் - அரை கப்
- பால் - 1 தேக்கரண்டி மற்றும் 3 மேசைக்கரண்டி
- முதலில் ரவையை வெறும் வாணலியில் போட்டு வறுத்துக்கொள்ளவும்.
- பாதாம்,பிஸ்தாவை தோல் நீக்கி,முந்திரியுடன் சேர்த்து 3 மேசைக்கரண்டி பால் ஊற்றி மிக்ஸியில் மை போல் அரைத்துக்கொள்ளவும்.
- பின் ரவையில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து தண்ணீர் வற்றியதும் பால் சேர்த்து வேகவிடவும்.
- பால் வற்றி வரும்
- சமயம் சீனியை சேர்த்து கிளறவும்.
- பின் 1 தேக்கரண்டி பாலில் கேசரி கலரை கரைத்து ரவை கலவையில் ஊற்றவும்.
- பின் அரைத்த கலவையை ஊற்றி கிளறவும்.
- பின் மில்க் மெய்டு ஊற்றி கிளறவும்.மில்க் மெய்டு, முந்திரி கலவையை ஊற்றியபின் அடி பிடிக்க ஆரம்பிக்கும் அதனால் கைவிடாமல் கிளறவும்.பின் நெய் ஊற்றி கிறவும்.
- நன்கு கேசரி பதம் வந்ததும் இறக்கிவிடவும்.
Note:
சீனி, நெய் அவரவர் தேவைக்கு கூட்டி குறைத்து கொள்ளலாம். நட்ஸ்.பால் குடிக்காத குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுக்கலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
2 sec முன்பு
3 நிமிடங்கள் 55 sec முன்பு
18 நிமிடங்கள் 4 sec முன்பு
15 நிமிடங்கள் 41 sec முன்பு
19 நிமிடங்கள் 30 sec முன்பு
20 நிமிடங்கள் 27 sec முன்பு
23 நிமிடங்கள் 27 sec முன்பு
23 நிமிடங்கள் 34 sec முன்பு
27 நிமிடங்கள் 23 sec முன்பு
29 நிமிடங்கள் 56 sec முன்பு