என் சமையல் அறையில் - திருமதி. வானதி

வானதி சமையலறை

அறுசுவையின் நீண்ட நாள் உறுப்பினரும், யு.எஸ்.ஏ வில் வசித்து வருபவருமான திருமதி. வானதி அவர்கள், "என் சமையல் அறையில்.." சிறப்பு பகுதிக்காக தனது இல்லத்து சமையல் அறையின் படங்களையும், அதன் சிறப்புகளையும் இங்கே கொடுத்துள்ளார். அத்துடன் சமையல் அறையை பராமரிக்க அவர் கையாளும் சில டிப்ஸ்களையும் வழங்கி இருக்கின்றார்.

எனது சமையலறை - வானதி (Vinne)

இது கொஞ்சம் பழைய மாடல் கிச்சன்தான். இங்கு பெரும்பாலான இல்லங்களில் உள்ள சமையலறையில் இது போன்ற கேபினட் பொருத்தப்பட்டு இருக்கும். கேபினட் இருப்பது நல்ல வசதி. சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்கள் எல்லாவற்றையும் கேபினட்டின் உள்ளே வைத்து விடலாம். இதனால் பாத்திரங்கள் சுத்தமாகவும், பொருட்கள் இறைந்து கிடக்காமல் கிச்சனும் பார்ப்பதற்கு நீட்டாக இருக்கும்.

my kitchen
 

சமைப்பதற்கு எலக்ட்ரிக் ஸ்டவ் வித் அவன். இப்போது இதுபோன்ற ஸ்டையின்லஸ் ஸ்டீல் உபகரணங்கள்தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.

my kitchen
 

இந்த ஜன்னல் எனக்கு மிகவும் பிடிக்கும், வேடிக்கை பார்த்துக் கொண்டே பாத்திரம் கழுவ இதுதான் சிறந்தது :-) ஒவ்வொரு கிச்சனிலும் இது போல் ஒரு ஜன்னல் இருப்பது மிகவும் அவசியம். நல்ல காற்றோற்றமாகவும் இருக்கும். ஃப்ரீயாகவும் சமைக்க முடியும்.

my kitchen
 
இந்த இடத்திற்கு Breakfast nook என்று பெயர். இங்கு நிறைய வீடுகளில் கிச்சனுள்ளே இது போல் காலை உணவு சாப்பிட ஒரு இடம் இருக்கும்.
my kitchen
 

இதற்கு Kitchen pantry என்று பெயர். இது ஒரு பெரிய ஷெல்ஃப். மளிகை சாமான்களை ஸ்டோர் செய்ய பயன்படுத்த படுகிறது. இவ்வாறு கதவு போட்டு மூடி விடுவதால் தூசி படியாமல் இருக்கும். கிச்சன் பான்ட்ரியினுள் இது போல் பெரிய ப்ளாஸ்டிக் கன்டயினர்களில் பொருட்களை அடுக்கி வைத்தால் நமக்கு உபயோகிக்க எளிதாக இருக்கும்.

my kitchen
 

ஸ்பூன்களை இது போல் ஒரு ட்ரேயில் அடுக்கி வைத்தால் உபயோகிக்க எளிதாக இருக்கும். கேபினட்டில் டிராயரினுள் இந்த ட்ரேயை வைத்து விடலாம். கிளிப்புகள், மற்ற சிறிய பொருட்களை சிறிய கன்டெயினர்களில் போட்டு வைக்கலாம். பெரிய கரண்டிகளை அடுக்கவும் இது போல் ட்ரே கிடைக்கிறது.

my kitchen
 

சில டிப்ஸ்:

குப்பை கூடையையும் சிங்கிற்கு கீழ் உள்ள கேபினட்டில் வைத்து விடலாம். அப்படி வைப்பதால் ஸ்மெல் எதுவும் வராமல் இருக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவை கொட்டி குப்பை கூடைக்கு பக்கத்தில் வைத்து விட வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்ற வேண்டும்.

கிச்சன் தரையை சுத்தம் செய்ய, நான் ஒரு புக்கில் படித்ததை பின்பற்றுகிறேன். அரை கப் அளவு வினிகர், கால் கப் அளவு பேக்கிங் சோடா, இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் (அளக்க வேண்டியது இல்லை, தோராயமாக செய்யலாம்) இது மூன்றையும் கலந்து கொண்டு எப்போதும் போல் தரையை துடைக்கலாம். தரை சுத்தமாக இருக்கும். எந்த கெமிக்கல்ஸ்ஸும் இல்லாததால் உடல் நலத்திற்கும் கேடு இல்லை.

Comments

சரண்யா, அம்முலு,lutha yunusse

தாமதமான பதிவிற்கு முதலில் மன்னிக்கவும். உங்கள் பாராட்டிற்கு மிக நன்றி.

lutha yunusse,நீங்கள் செய்து பார்த்து, உங்களுக்கு திருப்தி என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. வீடு முழுவதையும் இவ்வாறு க்ளீன் செய்யலாம். டைல்ஸ்-ல் கூட செய்யலாம். உங்களுக்கு அப்படி சந்தேகமாயிருந்தால், ஒரு மூலையில் சிறிதளவு துடைத்துப் பார்த்து டெஸ்ட் செய்து பிறகு செய்யலாம்

வானதி அக்கா எப்படி இருக்கீங்க நலமா? கிச்சன் மிக அருமையாக இருக்கு. உங்க டிப்ஸ் மிக அருமை

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

for tips..vanathi akka unga kitchen very super i like it

cleaning tips super. thanks

Unga kitchen old nu sollave mudiyadhu so neat and looking very good.
Kitchen cupboard inside and outside pisu pisuppu and smell illama irukka yedhu use pannina nalla irukum pls can u help me? kitchen aduppu ku mela nera cup board irukku so cook pannum podhu adhula irundhu varra aavi cup board outside la padum so pisu pisu nu irukku dettol pottu clean panninalum pogala. what do i do to clean it?

SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.