பொரித்த சிக்கன் வறுவல்

தேதி: April 12, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (26 votes)

இணையத்தில் இருந்து எடுத்து செய்து பார்த்த கேரள வகை சிக்கன் வறுவல். இப்போது எங்கள் வீட்டில் அனைவரின் ஃபேவரைட் இதுதான்.

 

சிக்கன் - அரை கிலோ
நறுக்கின வெங்காயம் - ஒன்றரை கப்
இஞ்சி, பூண்டு - 2 தேக்கரண்டி (பொடியாய் நறுக்கினது)
பச்சை மிளகாய் - ஒன்று
தக்காளி - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலத்தூள் - ஒரு தேக்கராண்டி
பொடித்த மிளகு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 2
கிராம்பு - 3
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - அரை தேக்கரண்டி + முக்கால் தேக்கரண்டி


 

தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் சிக்கனை சுத்தம் செய்து நடுத்தர அளவு எலும்பில்லாத துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். எல்லா துண்டுகளும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.
சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள், அரை தேக்கரண்டி உப்பு போட்டு பிரட்டி அப்படியே 20 நிமிடம் வைத்திருக்கவும். பிறகு நறுக்கின இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவை மூன்றையும் ஒன்றாய் சேர்த்து அம்மியில் வைத்து தட்டி எடுக்கவும். சட்னியாக அரைத்துவிடக் கூடாது. ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த சிக்கனை எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மொறுமொறு என்று பொரித்துவிடக்கூடாது. சிக்கன் மிருதுவாக ஒரு 90 சதவீதம் வெந்திருக்கும்போதே எடுத்துவிட வேண்டும்.
உருளைக்கிழங்கை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கை போட்டு சிவக்கவிடாமல் வேக வைத்து எடுக்கவும். இதனுடன் வேறு எதையும் சேர்க்கக்கூடாது.
பொரித்த சிக்கன் மற்றும் உருளைக்கிழங்கை எண்ணெய் உறிஞ்சு பேப்பரில் போட்டு எண்ணெய் முழுவதையும் துடைத்து எடுத்திட வேண்டும்.
அடுத்து, பொரிக்க பயன்படுத்திய எண்ணெயில் சிறிது எடுத்து மற்றொரு வாணலியில் ஊற்றி காய விடவும். அதில் பிரிஞ்சி இலை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும். அதில் நறுக்கின வெங்காயம் போட்டு, பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு நசுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டு, மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும். தீயின் அளாவை குறைத்து வைத்து செய்யவும்.
பின்னர் பொடியாக நறுக்கின தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சிறிது உப்பு சேர்த்து பிரட்டிவிடவும்.
அதன் பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றி கிளறி விடவும். அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5, 6 நிமிடங்கள் வேக விடவும்.
6 நிமிடங்களுக்கு பிறகு திறந்து நுணுக்கி வைத்துள்ள மிளகுத்தூளை தூவி, அடுப்பு தீயை குறைத்து வைத்து வேக விடவும். தண்ணீர் வற்றி, மசாலா சிக்கனுடன் நன்றாக சேரும் வரை வேக விடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீரை தெளித்துக் கொள்ளவும். அப்போதுதான் பாத்திரத்தின் அடியில் ஒட்டாது.
வெந்தவுடன் இறக்கி, பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை தூவி விட்டு பரிமாறவும்.
சுவையான பொரித்த சிக்கன் வறுவல் ரெடி.
இந்த பொரித்த சிக்கன் வறுவல் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் சமைத்த உணவுகள் சிலவற்றின் குறிப்புகளை அறுசுவையில் பகிர்ந்து கொள்ள உள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹை!
பார்க்கவே சூப்பராய் இருக்கு பாப்பி!
கட்டாயம் முடிகிறபோது செய்து பார்த்திட்டு பின்னூட்டம் தர்றேன்.

ஹாய் செண்பகா எப்படி இருக்கீங்க,,,?
உங்கள் குறிப்பு வித்தியாசமாக உள்ளது.
பார்க்கும் போதெ செய்து பார்க்க தோன்றுகின்றது.
முடியும் போது நிச்சயம் செய்து பார்க்கின்றேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எப்படி இருக்கீங்க பொண்ணு நலமா. உங்க குறிப்பு வித்தியாசமா இருக்கு ட்ரை செய்துட்டு சொல்றேன்.இன்னும் இது போல நிறைய வித்தியாசமான குறிப்புகள் கொடுக்கவும்.

செண்பகா அருமையாக இருக்கு.சமையல் குறிப்பு எப்ப கொடுக்க ஆரம்பித்தீங்க.நிறைய வித்தியாசமான குறிப்புக்களை எதிர்பார்க்கிறேன்.அட்மின் வீட்டு சமையலறையின் மணம் தூள் கிளப்புது.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கீதா அக்கா, அப்சரா, கதீஜா, ஆசியா அம்மா அனைவரும் நலமா? பாராட்டியதற்கு ரொம்ப நன்றி. கொஞ்சம் வித்தியாசமான ரெசிபிதான் நல்லா இருந்தது. நீங்கள் செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் கொடுங்க.

senbagababu

ரொம்ப நன்றாக இருந்தது.
குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டனர்.
குழந்தை நலமா?

செண்பகா... விரத காலத்தில் இப்படிலாம் குறிப்பு குடுத்தா நான் எப்படி செய்து சொல்றது?? நியாயமா?? சரி.... குடுத்த குற்றத்துக்காக நீங்க இன்னும் சில நாட்கள் காத்திருக்கணும், அடுத்த மாதம் தான் செய்து சொல்வேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி தேன்மொழி. நவீனா ரொம்ப நல்லா இருக்கா. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க பெயர் ரொம்ப நல்லா இருக்கு.

என்ன வனிதா விரதமா? பரவாயில்லை விரதம் முடிந்ததும் செய்து பாருங்க. நான் உங்க பின்னூட்டத்துக்காக காத்திருக்கிறேன்.

senbagababu

செண்பகா உங்களேட பொரித்த சிக்கன் வறுவல் ரெசிப்பி இன்று பண்ணினேன்,சூப்பர் .நன்றி.

ரொம்ப நன்றி

senbagababu

பொரித்த சிக்கன் வறுவல் செய்துப் பார்த்தேன். அருமை. என் பையனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. சாப்பத்தியுடன் நன்றாக இருந்தது.

Save the Energy for the future generation

எப்படி இருக்கீங்க? ரெண்டு நாளா நெட் ரொம்ப பிரச்சனையா இருந்துச்சு அதான் உடனே பதில் போட முடியவில்லை. என்னுடைய குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு ரொம்ப நன்றி இந்திரா.

senbagababu

very nice. tnx a lot

gods gift

ITS VERY NICE TO SEE, I NEVER EAT THIS TYPE OF CHICKEN, NOW I AM FASTING, THEN ALSO I LIKE TO MAKE IMTELY, OK I WILL WAIT FOR 20 DAYS, THEN I WILL REPLY.

பொரித்த சிக்கன் வறுவல் செய்தேன் ரொம்ப நல்லாஇருந்தது

அன்புடன் நஸ்ரின் கனி

patty65 உங்க பின்னூட்டத்துக்கு நன்றி.

senbagababu

ஹாய் பாரதி எப்படி இருக்கீங்க? என் குறிப்பை பாராட்டியதற்கு நன்றி. உங்க விரதம் முடிந்ததும் செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் கொடுங்க.

அன்புடன்
செண்பகா பாபு

senbagababu

செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் கொடுத்தமைக்கு ரொம்ப நன்றி.

அன்புடன்
செண்பகா பாபு

senbagababu

hai i tried ur receipe this sunday. It was coming very nice. Everyone in my home says dat it was nice..

There is no substitute for hardwork

VERY NICE AND TASTY CHICKEN.