கைமா(கீமா) சேமியா

தேதி: April 17, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

 

சேமியா - 1 பாக்கெட்
கொத்துக்கறி - 150gm
தக்காளி - 2(சிறியது)
புதினா - 7,8 இலைகள்
கொத்தமல்லிதழை - சிறிதளவு
இஞ்சி - 1/2tsp
பூண்டு - 1/2tsp
தனியா தூள் - 1tsp
மிளகாய் தூள் -1tsp
கேசரி பவுடர் - சிறிதளவு
நெய் - 50gm
எண்ணெய் - 1sp
வெங்காயம் - 1
பட்டை,கிராம்பு,ஏலக்காய் - 1
கரம் மசாலா பவுடர் or சிக்கன் மசாலா - 1/2tsp
உப்பு தேவையான அளவு


 

வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.
புதினா கொத்தமல்லிதழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
கொத்துக்கறியை தண்ணீரில் சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய்,நெய் ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து சிவக்க தாளிக்கவும்.
பிறகு இஞ்சி ,பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசணை போனவுடன் கொத்துக்கறி,தனியாதூள்,மிளகாய் தூள்,கேசரி பவுடர்,கரம் மசாலா பவுடர் or சிக்கன் மசாலா போட்டு வதக்கவும்.
2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.உப்பு சேர்க்கவும்.மேலும் 1 கிளாஸ் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.ஏனென்றால் ஒவ்வோரு சேமியா சீக்கிரம் வெந்துவிடும் ஆனால் சில சேமியாவிற்கு நிறைய தண்ணிர் தேவைப்படும்.
தண்ணீர் வற்றியதும் tightஆ மூடி போட்டு மேலே weightஆன சாமான் வைத்து சிம்மில் வைக்கவும்.
5mts கழித்து கிளறி இறக்கவும்.


இதை மாலை snacksஆகவும் சாப்பிடலாம்,party போன்றவற்றிலும் பரிமாறலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

ரிஸ்வானா மேடம்,
என்னோட அத்தை இது போலவே பாஸ்மதி அரிசி போட்டு செய்வாங்க
ஆனா சொல்லி தர மாட்டாங்க பாஸ்மதி அரிசி போட்டு இதை செய்யலாமா ?
அப்புறம் நான் இருக்கும் இடத்தில கீமா கிடைக்காது.. மட்டன் தான் use பண்ணனுமா? சிக்கன் use பண்ணலாமா? ப்ளீஸ் சொல்லுங்க உடனே செய்து பார்க்கணும்

என்றும் அன்புடன்,
கவிதா

ரிஸ்வானா மேடம்,
என்னோட அத்தை இது போலவே பாஸ்மதி அரிசி போட்டு செய்வாங்க
ஆனா சொல்லி தர மாட்டாங்க பாஸ்மதி அரிசி போட்டு இதை செய்யலாமா ?
அப்புறம் நான் இருக்கும் இடத்தில கீமா கிடைக்காது.. மட்டன் தான் use பண்ணனுமா? சிக்கன் use பண்ணலாமா? ப்ளீஸ் சொல்லுங்க உடனே செய்து பார்க்கணும்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவிதா எப்படி இருக்கிங்க?சாரிபா இப்போதான் உங்களுடைய பின்னூட்டம் பார்த்தேன்.தாரளமாக basmathi riceல் செய்யலாம் என்னுடைய மட்டன் பிரியாணி ரெசிபி இந்த லிங்கில் உள்ளது http://arusuvai.com/tamil/node/15010.அதில் கறிக்கு பதில் கொத்துக்கறி சேர்த்துக்கொள்ளலாம்.அந்த அளவிற்கு 200gm கீமா சேர்த்துக்கொள்ள்லாம்.அப்புரம் boneless chickenஐ பொடியாக நருக்கி கூட சேர்த்துக்கொள்ள்லாம்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL