சேப்பங்கிழங்கு கட்லெட்

தேதி: April 5, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேப்பங்கிழங்கு - அரை கிலோ
பொட்டுக்கடலை - 200 கிராம்
மசாலா பவுடர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரித்தெடுக்க 300 மில்லி
ரஸ்க் தூள் - 100 கிராம்


 

சேப்பங்கிழங்கை வேக வைத்து பின் அதன் தோல் நீக்கி கைகளினால் நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பொட்டுக்கடலையை சுத்தம் செய்து அதனை மிக்ஸியில் இட்டு நன்றாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சேப்பங்கிழங்கு மசித்தது, பொட்டுக்கடலை மாவு, மசாலாபவுடர், உப்பு, வெண்ணை சேர்த்து நன்றாக பிசைந்து பின் அதனை சிறு உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, நன்றாக சூடாகியதும் முன்பு செய்து வைத்திருக்கும் உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து மற்றொரு கையால் அதனை அழுத்தி தட்டையாக செய்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
அதனை ரஸ்க் பவுடரில் இருபுறகும் புரட்டி எடுத்து தட்டில் வைத்து பரிமாறலாம். சேப்பங்கிழங்கின் பிசுபிசுப்பில்லாமல் நன்றாக கரகரமொறுமொறு வென்று இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்