கறுப்பு குழம்பு

தேதி: April 19, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (9 votes)

 

சிக்கன் - 300 கிராம்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 8
கசகசா - ஒரு தேக்கரண்டி
சோம்பு - 1 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 3 மேசைக்கரண்டி
பால் - ஒரு கப்
உப்பு - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
பட்டை - 4 துண்டு
கிராம்பு - 3
கொத்தமல்லி தழை - 5 கொத்து
நல்லெண்ணெய் - தேவையான அளவு


 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் பட்டை, கிராம்பு, மிளகு, கசகசா ஆகியவற்றை போட்டு வறுக்கவும். அதில் சீரகம், சோம்பு சேர்த்து வறுத்த பின்னர் மிளகாய் வற்றலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நான்கு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும்.
அதனுடன் நறுக்கின தக்காளியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு அரைத்த விழுதில் அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அதை வதக்கியவற்றில் ஊற்றி கிளறி விடவும்.
அதில் உப்பு சேர்த்து பிரட்டிய பின்னர் கொத்தமல்லித்தூள் சேர்த்து கிளறி விடவும்.
பிறகு கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை அதில் சேர்க்கவும்.
சிக்கன் துண்டுகளை போட்டு கிளறிய பிறகு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும். அதனை 15 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
எண்ணெய் வெளி வந்ததும் ஒரு கப் தேங்காய் பால் அல்லது சாதாரண பால் ஊற்றி பிரட்டி விடவும்.
10 நிமிடம் கழித்து மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கி வைத்து விடவும்.
கறுப்பு கோழிக் குழம்பு தயார். இந்த குறிப்பினை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. ஆர்த்தி அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா.....பார்க்கவே இந்த குழம்பு மிகவும் நன்றாக உள்ளது.
இதை செய்து அனுப்பிய ஆர்த்திக்கு எனது வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

hai arthi akka ur chiken receipi super insa allah i make.thanks for ur cooking.

சிக்கன் கருப்புக் கறி செய்துப் பார்த்தேன். நல்ல ருசியாக இருந்தது. நான் கொஞ்சம் கறிவேப்பிலையும் வறுக்கும் போதுச் சேர்த்தேன். ஆதலால் நல்ல கருப்பாக இருந்தது. அதனுடைய படமும் அனுப்பி வைக்கிறேன்.

Save the Energy for the future generation

all food preparing good