எலந்தைவடை(ப்ரூன்ஸ்)

தேதி: April 20, 2010

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

ப்ரூன்ஸ் - 10
வறுத்து இடித்த மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
இடிப்பதற்கு சின்ன உரல் (Mortar & Pestle)


 

முதலில் வறுத்த காய்ந்த மிளகாயை இடித்து அதன் தூள் ஒரு ஸ்பூன் அளவு இருக்குமாறு எடுத்துக் கொள்ளவும்.
ப்ரூன்ஸ் கொட்டைகளை நீக்கவும். கொட்டைகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
உரலில் ப்ரூன்ஸ் தவிர மற்ற பொருட்களை போட்டு நன்றாக இடிக்கவும். இதற்கு 2-3 நிமிடங்கள் ஆகும்.
கலவை நன்றாக சேர்ந்து வந்த பிறகு ப்ரூன்ஸ் போட்டு நன்றாக மசியுங்கள். 2 நிமிடங்கள் போன்று மசித்துக் கொண்டிருங்கள்.
இப்போது 5 கொட்டைகளை மட்டும் சேர்த்து ஒன்றும் பாதியுமாக இடியுங்கள்.
இதனை ஒரு பாலிதீன் கவரில் தட்டி வெயிலில் காய வைத்து உபயோகிக்கலாம் (அந்த அளவு பொறுமை இருந்தால்) அல்லது அப்படியேவும் வைத்திருந்து சாப்பிடலாம். புளி சேர்த்திருப்பதால் கெடாது.


கொட்டை உள்ள Prunes தான் எலந்தைவடை போன்றே இருக்கும். தேவைக்கேற்ப காரத்தை வேண்டுமானால் கூட்டிக் கொள்ளலாம். அதற்கேற்ப உப்பு ஒரு சிட்டிகை அதிகம் போட்டுக் கொள்ளலாம். கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. ப்ரூன்ஸ் ஃபைபர் சத்து நிறைந்தது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. வாந்தி வராமலும் தடுக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த ரெசிபி எனக்கு ரெம்பவும் பிடிக்கும். குறிப்பு தர்றேன்னு நீங்க சொன்னது நினைவு இருக்கு இப்பதான் கொடுத்து இருக்கீங்க. குறிப்புக்கு மிக்க நன்றி. வீட்டில் ப்ரூன்ஸ் இருக்கு நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்துட்டு சொல்றேன்.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கீங்க? உங்க வீட்டு குட்டீஸ் எப்படி இருக்காங்க? இது அப்படியே எலந்தை வடை டேஸ்ட்டில்தான் இருக்கும். செஞ்சுப் பார்த்துட்டு சொல்லுங்க. உங்க பதிவு பார்த்து மகிழ்ச்சி.

எப்படி இருக்கீங்க பையன் நலமா?நான் நல்லா இருக்கேன். குட்டீஸும் நல்லா இருக்காங்க.உங்க கூட பேசி நீண்ட நாள் ஆகுது. உங்க இலந்தை வடை செய்தேன் சூப்பராக இருந்தது சின்ன வயசுல சாப்பிட்டது இப்ப தான் ஆசை நிறை வேறியது குறிப்புக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

i am Neeladevi.intha prunes fruit enga kidaikum

வெளிநாடுகளில் எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும். ட்ரை ப்ரூட்ஸ் வைத்திருக்கும் இடங்களில் கிடைக்கும். இந்தியாவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்காவிட்டால் நாட்டு மருந்து கடைகளில் நிச்சயம் கிடைக்கும்.