பரங்கிக்காய் இனிப்பு கறி

தேதி: April 22, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 2 (1 vote)

 

பரங்கிக்காய் - கால் பகுதி
தேங்காய் துருவல் - கால் கப்
வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
வெல்லம் - எலுமிச்சை அளவு


 

பரங்கிக்காயை மெல்லியதாக நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் பரங்கிக்காயை போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
காய் நன்கு வதங்கியதும் அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு நன்கு காரம் காயுடன் சேரும்படி பிரட்டி விடவும். மிளகாய் நெடி அடங்கும் வரை நன்கு வதக்கி விடவும்.
அதன் பிறகு ஒரு தட்டை வைத்து மூடி காயை வேக விடவும். 7 நிமிடம் வரை காய் வேக வேண்டும் இல்லையென்றால் சாப்பிடும் போது சற்று அழுத்தமாக இருக்கும்.
7 நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறிய பிறகு அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு ஒன்றாக கிளறி விடவும்.
அதன் பின்னர் வெல்லத்தை தூள் செய்து எடுத்துக் கொள்ளவும். அதை பரங்கிக்காய் வெந்ததும் அதனுடன் போட்டு நன்கு கிளறி விடவும்.
பிறகு வெல்லம் கரைந்து காயுடன் சேர்த்து வெல்ல வாசனை குறைந்து நன்கு கெட்டியான பதம் வரும் வரை 10 நிமிடம் நன்கு கிளறி விடவும்.
பரங்கிக்காய் இனிப்பு கறி ரெடி. இதை வற்றல் குழப்புடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இதை பிராமண இல்லங்களில் விரும்பி சாப்பிடுவார்கள்.இந்தக் குறிப்பினை வழங்கி, இதனை செய்து காட்டியவர் திருமதி. ராஜலெட்சுமி அவர்கள். 25 வருடங்களுக்கு மேல் சமையலில் அனுபவம் வாய்ந்தவர். அனைத்து வகை சைவ உணவுகள் சமைப்பதிலும் சிறப்புத் திறன் வாய்ந்தவர்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்