பன்னா மீன் பொரியல்

தேதி: April 24, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

பெரிய மீன் - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்


 

மீனை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீன் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், உப்பு போட்டு பிசறி 10 நிமிடம் வைத்திருக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த மீனை போடவும்.
தீயை மிதமாக வைத்து 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேக விடவும்.
3 நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து விடவும். சுவையான மீன் பொரியல் ரெடி. இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர், திருமதி. கமர் நிஷா அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்