அரிசி கேசரி

தேதி: April 27, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.1 (8 votes)

 

பச்சரிசி - ஒரு கப்
முந்திரிப்பருப்பு - 12
சீனி - 2 கப்
நெய் - 6 மேசைக்கரண்டி
ஏலக்காய் - ஒன்று
கேசரி கலர் பவுடர் - 2 சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை


 

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் அரிசியை போட்டு அதன் மேல் இரண்டு மேசைக்கரண்டி நெய் ஊற்றி நன்கு வறுக்கவும். அரிசி நன்கு பொரிந்து நிறம் சற்று மாறியதும் எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆறவைக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
அதே வாணலியில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் கலர் பவுடரை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போது ஏலக்காய் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.
அரிசி ஆறியதும் மிக்ஸியில் அரிசியை போட்டு ரவை பதத்திற்கு பொடிக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் பொடித்த அரிசியை கொட்டி கொண்டே கிளறி விடவும். கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
அரிசி வெந்த பிறகு சீனியை சேர்த்து கிளறி விடவும். அதில் வறுத்த முந்திரியை போட்டு மூன்று மேசைக்கரண்டி நெய் ஊற்றி ஐந்து நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்.
கெட்டியான பதம் வந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கவும். தேவைப்பட்டால் மேலும் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
சுவையான அரிசி கேசரி ரெடி. இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. லதா முருகன் அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான குறிப்பு ...நிச்சயம் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

madam can i try this with basmati rice
can we use it with the same measurements because i get only basmati rice at my place please reply me

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப நல்லா இருக்கு கேசரி,அருமை

லதா உங்கள் கேசரி நல்லாய் இருக்கே.
நான் ரவையில்தான் கேசரி செய்வேன், இது புது முறையாக இருக்கின்றது.
பார்க்கவும் நன்றாக இருக்கின்றது.
செய்வதும் சுலபம்போல் தெரிகின்றது..
இந்த வீக்கென்ட் செய்து பார்த்திட வேண்டியதுதான்.
நன்றி நல்ல ரேசப்பி கொடுத்தமைக்கு.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

hello mam,

whether rice should be washed before

enjoy everyday

nan idai samaithu parthen en kanavar chakkara pongal nalla irukkunnu sonnar

Slave of God