

பெயர் : தஞ்சை சீனிவாசன் ஜெயந்தி
படிப்பு : D.C.P., M.A.(TAMIL), (M.PHIL)
பிறந்த தேதி : 29.05.1955
வசிப்பது : சென்னையில் (பிறந்த நாள் முதல் இன்று வரை)
குடும்பம் : அன்பான கணவர், ஆஸ்திக்கொரு ஆண், ஆசைக்கொரு பெண்
தெரிந்த மொழிகள் : தமிழ், ஆங்கிலம், இந்தி எழுதப் படிக்க தெரியும்
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பேசத் தெரியும்
பணி : நேர்முக உதவியாளர், பி. எஸ். என். எல்
விருப்பம் : சமையல், புத்தகம் படிப்பது, கதை எழுதுவது, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது
பிடிக்காதது ; தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது
பிடித்தது : ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி
லட்சியம் : சிறந்த எழுத்தாளர் ஆவது. (ஆங்கிலம் கலக்காமல் தமிழிலேயே எழுதுவது), பி.எச்.டி பட்டம் வாங்குவது.
பலம் : என் குடும்பம், எண்ணிலடங்கா தோழிகள்
பலவீனம் : கோபம் (சும்மா இல்லை, நியாயமான விஷயத்துக்குதான்)
அனுபவம்தான் வாழ்க்கையில் சிறந்த பாடம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்த அனுபவப் பாடங்கள் எல்லாமே சொந்த அனுபவத்தில் இருந்து பெறப்படுவதாக மட்டும் இருந்தால், ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுபவனாகவும், கற்றுக்கொள்பவனாகவும் மட்டுமே இருப்பான். நாம் கேட்டறிந்த, பார்த்தறிந்த மற்றவர்களின் அனுபவங்களையும் தனக்கு பாடமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் நிறைந்த மனிதர்களே, பிரச்சனைகளை களைந்து, சந்தோசமாய் வாழ்வை அனுபவிக்கின்றனர். பொய் சொல்லாதே என்று ஒற்றை வரியில் சொல்லும் அறிவுரை, காதை சென்றடைந்தாலும் மனதை சென்றடைவது இல்லை. அதையே பொய் சொன்னதினால் ஒருவன் அனுபவித்த பிரச்சனைகளை கதையாகவோ, செய்தியாகவோ சொல்லும்போது, அது காதைக் கடந்து மூளையில் பதிகின்றது. மனிதனின் இந்த அடிப்படை இயல்பை ஒட்டித்தான், மனிதன் கடைபிடிக்க வேண்டிய நல்ல நெறிகளை நன்னெறி கதைகளாக கூறும் வழக்கம் காலம் காலமா இருந்து வருகின்றது.
யாரும் எப்படியும் வாழலாம் என்ற எதேச்சை போக்கு அதிகமாகி, மாறி வரும் இன்றைய சமூக சூழலில், நன்னெறி கதைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்தல் அவசியமாகின்றது. சமூகத்தின் நியதிகளாய் மாறி இருக்கும் உருமாற்றப்பட்ட நீதிகளை, சமூக அவலங்களை, இந்த மாற்றங்களால் மனிதன் படும் அல்லல்களை, எளிமையான கதைகள் மூலம் எடுத்துரைத்து, மனித மனங்களை மென்மையாய் இடித்துரைக்கும் ஒரு முயற்சியில், அறுசுவை நேயர்களின் நன்மதிப்பிற்கு பாத்திரமான, அனைவராலும் ஜெ மாமி என்று அன்போடு அழைக்கப்படும் ஜெயந்தி மாமி அவர்கள் இங்கே களமிறங்கி இருக்கின்றார். இன்றைய சமூக நடப்புகளையே கருவாய் எடுத்துக்கொண்டு, எதனால் இன்னல்கள், எங்கே தவறுகள் என்பதை வெளிச்சமிட்டு காட்டும் வகையில், எளிமையான, அதே சமயம் சிந்தனையை தூண்டும் வகையிலான சிறுகதைகளை இங்கே கொடுக்கவிருக்கின்றார். இவரது படைப்புகளை படித்து, உங்களின் கருத்துக்களை மறவாமல் தெரிவியுங்கள்.
12 நிமிடங்கள் 14 sec முன்பு
13 நிமிடங்கள் 38 sec முன்பு
17 நிமிடங்கள் 29 sec முன்பு
23 நிமிடங்கள் 17 sec முன்பு
31 நிமிடங்கள் 32 sec முன்பு
32 நிமிடங்கள் 32 sec முன்பு
41 நிமிடங்கள் 59 sec முன்பு
53 நிமிடங்கள் 11 sec முன்பு
ஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் முன்பு