Selvi akka

Selvi akka
செல்வியக்கா என்று அறுசுவை நேயர்களால் அன்புடன் அழைக்கப்படும் திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள், நல்ல மகளாய், பொறுப்பான தாயாய், சிறந்த மாமியாராய், அன்பான பாட்டியாய், வாழ்க்கை பயணத்தில் ஒரு பெண் ஏற்கும் அத்தனை ஸ்தானங்களையும் ஏற்றுள்ளவர். குடும்ப நிர்வாகத்தில் சிறந்த அனுபவம் மிக்கவர் என்பதோடு மட்டுமல்லாமல், 25 வருடங்களுக்கு மேலாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருவதால், தொழில் துறை சார்ந்த நிர்வாகத்திலும் நல்ல அனுபவம் பெற்றவர். இவர் கடந்து வந்த பாதை முழுவதும் ரோஜா படுகைகளால் ஆனது அல்ல. கற்களும் முட்களும் நிறைந்த பாதைகளிலும் இவரது பயணம் தொடர்ந்திருக்கின்றது. அந்த காயங்கள் இவருக்கு வாழ்க்கைப் பாடங்களாக இருக்கின்றன. பிரச்சனைகளை தைரியமாக சந்தித்து போராடி வெற்றி பெற்று வந்தவர் என்ற தகுதி, அறுசுவை மன்றத்தில் பலரது பிரச்சனைகளுக்கு இவர் நல்ல தீர்வு தர உதவியாய் இருந்து வந்திருக்கின்றது. பொது மன்றத்தில் பேசத் தயங்கும் பல பிரச்சனைகளுக்கும், தங்களது பெயர் வெளியிட விரும்பாத நேயர்களின் கேள்விகளுக்கும், அனுபவம் மிக்க செல்வியக்கா இங்கே தனது ஆலோசனைகளை வழங்கவிருக்கின்றார். குடும்ப பிரச்சனைகள், அந்தரங்க பிரச்சனைகள், தீர்வு காண இயலாத பிரச்சனைகள் என பலவித பிரச்சனைகளுக்கும் தனது அனுபவத்தில் தான் கற்றவற்றைக் கொண்டு, இங்கே தனது ஆலோசனையை வழங்குகின்றார். உங்களது பிரச்சனைகளை கீழே உள்ள தொடர்புக்கு பக்கம் வாயிலாக எங்களுக்கு நீங்கள் எழுதி அனுப்பலாம். பெயர் மற்ற விபரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தெரிவிக்கப்படும் சுயதகவல்களின் ரகசியம் நிச்சயம் காக்கப்படும்.

நேயர்களுக்கு எங்களது அன்பு வேண்டுகோள். தயவுசெய்து உங்களது பிரச்சனைகளை கருத்து தெரிவிக்கும் பகுதியில் தெரிவித்து, பதில் கோர வேண்டாம். உங்களது கேள்விகளை எங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கீழே உள்ள தொடர்புக்கு என்ற பக்கம் வாயிலாகவோ அனுப்பி வைக்கவும்.

சிலர் கேள்விகளை ஒன்றிரண்டு வரிகளில் அனுப்புகின்றார்கள். பிரச்சனையை முழுமையாக தெரிவித்தால்தான் அவரால் அதன் ஆழத்தை முழுமையாக உணர்ந்து அதற்கு சரியான தீர்வு தர இயலும். தயவுசெய்து உங்களது பிரச்சனையை முழுமையாக, விரிவாக தெரிவிக்கவும்.

உங்கள் கேள்விகளை தயவுசெய்து தமிழில் அனுப்பவும். தமிங்கிலத்தில் அனுப்பினால் படிப்பதில் சிரமம் இருப்பதோடு, தவறாக பொருள் செய்துகொள்ளவும் வாய்ப்புள்ளது.

உளவியல், குடும்பம் சார்ந்த பிரச்சனைகள், மனக்குழப்பங்கள் போன்றவற்றிற்கு செல்வியக்கா பதில் அளிக்கின்றார்கள். தயவுசெய்து, நான் பி.எஸ்.ஸி படித்திருக்கிறேன். எனக்கு நல்ல வேலை ஒன்று சொல்லுங்கள் என்பது போன்ற கேள்விகள் வேண்டாம். அது போன்ற கேள்விகளை மன்றத்தில் கேட்கவும்.

செல்வியக்கா அவர்களின் மகள் விபத்தில் சிக்கி, சிகிச்சை முடிந்து தற்போதுதான் குணமடைந்து வருகின்றார். இதனால் செல்வி அக்கா அவர்களால் இணையம் பக்கம் வர இயலாத நிலை இருந்தது. அதுமட்டுமின்றி அலுவலகப் பணியும் கூடுதலாக இருந்ததால், அவரால் நேயர்களின் கேள்விகளுக்கு உடனே பதில் அளிக்க இயலவில்லை. இப்போதுகூட கேள்வி கேட்டவர்கள் காத்திருக்கின்றார்களே என்ற எண்ணத்தில், இதற்காக சிரமம் மேற்கொண்டு நேரம் ஒதுக்கி பதில் கொடுத்துள்ளார். விரைவில் அவரது வேலைப்பளு குறைந்து, பழையபடி உங்கள் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் கொடுப்பார். அதுவரை இந்த பகுதியில் கொஞ்சம் தாமதமாக பதில்கள் இடம்பெறும். தயவுசெய்து பொறுத்தருளவும்.

கேள்வி பதில்கள்

இதற்கு மேல் என்ன செய்வது?

உலகமே நரகமாய் தெரிகிறது

நான் என்ன செய்ய வேண்டும்?

நல்லதொரு ஆலோசனை சொல்லுங்கள்

தனிக்குடித்தனம் செல்ல வேண்டும்