காடை வறுவல்

தேதி: April 29, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (9 votes)

 

காடை (தொடை பகுதி) - 4
பெரிய வெங்காயம் - 2
தயிர் - அரை கப்
கொத்தமல்லி - 2 கொத்து
புதினா - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி


 

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புதினா மற்றும் கொத்தமல்லித் தழை ஆய்ந்து தண்ணீரில் அலசிக் கொள்ளவும். காடையின் தொடை பகுதியை சுத்தமாக கழுவி விட்டு மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கப் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். பிறகு தூள் வகைகள் மற்றும் வறுப்பதற்கு எண்ணெய் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரம் மசாலா தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்த பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
பிறகு காடையை போட்டு 4 நிமிடம் பிரட்டிய பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பிரட்டவும். பச்சை வாசனை போகும் வரை பிரட்டவும்.
3 நிமிடம் கழித்து மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், உப்பு மற்றும் தயிரை ஊற்றி நன்கு பிரட்டவும். அதன் பின்னர் காடையில் எல்லா மசாலாவும் ஒன்றாக சேரும்படி 4 நிமிடம் நன்கு கிளறி விடவும்.
பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு தட்டை போட்டு மூடி காடையை 12 நிமிடம் வேக விடவும். இடையில் மூடியை திறந்து பிரட்டி விடவும். 12 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றி சுருள வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.
மேலே எலுமிச்சை பழம் சாறு பிழிந்து கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
சுவையான காடை வறுவல் ரெடி.
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு . சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்