கொஞ்சம் மூளையை கசக்குங்க-part-2

அன்பார்ந்த தோழர்களே தோழிகளே..இனி உங்களது புதிர்களை இதிலிருந்து தொடங்குங்கள்...

1ம்,3ம், சரியான விடை.2 க்கு காலங்கள்,நேரங்களை சரியாக கூற முடியாது.அதன் விடை "கால் தடங்கள்"
என் பெயர் கோகிலா என் கணவரின் பெயர் மோகன்தாஸ்.
அஷ்மா உங்களை பற்றி தெரிந்துகொள்ளலாமா?

ஒரு மந்திரவாதி தனது வித்தைகளை சபையில் காட்டிக்கொண்டிருந்தான்.அப்போது, தான், தண்ணீருக்குக் கீழே முப்பது நிமிடங்கள், எந்தவித உபகரணங்களும் இல்லாமல் இருந்து காட்டமுடியும் என்றும், யாராவது இதுபோல் செய்யமுடியுமா? என்றும் சவால் விட்டான். அப்படி செய்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதாகவும் கூறினான். உடனே, ஒரு சிறுவன் எழுந்து தான் 40 நிமிடங்கள் தண்ணீருக்குக் கீழே இருக்க இயலும் என்று கூறவே மந்திரவாதியும் அதற்குச் சம்மதித்தான்.
அந்தச் சிறுவன் தான் கூறியதுபோலவே தண்ணீருக்குக் கீழே 40 நிமிடங்கள் இருந்து பரிசைப் பெற்றுச் சென்றான்.?
கேள்வி:.......அந்தச் சிறுவன் அந்தச் சாதனையை எப்படிச் செய்ய முடிந்தது?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஏதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை தன் தலையில் சுமந்திருப்பான்

ஓரு அப்பாவும் பையனும் காரில் சென்று கொண்டு இருக்கும் போது ஆக்ஸிடெண்ட். தந்தை ஸ்பாட் அவுட். மகனை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்கிறார்கள்.அவசர அவசரமாக அவனுக்கு ஆப்ரேஷன் செய்யவரும் டாக்டர்
அந்த பையனை பார்த்து அதிர்ச்சியாகிறார். ‘இவ்ன் என் மகன்!’ என்கிறார்.....
இது எப்படி??????????????????

டாக்டர் அந்த பையனின் அம்மா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஒருவருக்கு இப்போது என்ன வயதோ, அதைப்போல் 4 மடங்கு இன்னும் 30 வருடத்தில் ஆகும்.
இப்போது அவருடைய வயது என்ன??????????????

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

செந்தில்

7 1/2 வயது சரியா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்கள் விடையின் படி,
இப்போது 7.5 வயது என்றால் 30 வருடத்தில் 37.5 அல்லவா

7.5 X 4 = 30 is not equal to 37.5 ok வா!!

சரியான பதிலை சொல்லட்டுமா????

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

என் மூளைக்கு எட்டுனது அவ்வளவு தான். பதிலை சொல்லுங்க பார்க்கலாம். அடுத்தவர்கள் வரட்டும் என்று சிறிது நேரம் காத்திருந்தாலும் சுவாரசியமாக இருக்கும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வழிமுறை:

"X" x 4 = "X"+30

"X" = என்ன??????
எளிதான அல்ஜிப்ரா கணக்குதான்.

கணக்கிட்டு சரியான வயதைக் கூறுங்கள்

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

மேலும் சில பதிவுகள்