கொஞ்சம் மூளையை கசக்குங்க-part-2

அன்பார்ந்த தோழர்களே தோழிகளே..இனி உங்களது புதிர்களை இதிலிருந்து தொடங்குங்கள்...

இதற்கு விடை எனக்குத் தெரியும். வேறு யாரேனும் சொல்கிறார்களா என்று பார்ப்போம். இந்த puzzle வெகு நாட்களுக்கு முன் ஆனந்த்விகடனில் கூட வந்திருந்தது. இது என்னுடைய all time favorite puzzle. யார் பதில் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். நன்றி.

அன்புடன்,
இஷானி

நான் யார்? அப்படின்னு கேட்டுற்பானோ?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அந்தப் வாயிலில் வந்த பொண்ணோட அவன் பேசிட்டு இருக்கானே. அவள் யாரு? நு கேட்டிருப்பான்.

Don't Worry Be Happy.

காவலாளியிடம் நீ ஆணா அல்லது பெண்ணா என்று கேட்டிருப்பானோ?

ஹைய்யோ இஷானி... என்னை காப்பாற்ற வந்த தெய்வமே!!! இங்க வந்து உங்க காதை மட்டும் காட்டுங்க ஒரு ரகசியம் சொல்றேன்.

எனக்கு இந்த புதிரோட விடை தெரியாது. ஒரு ஃபிரண்ட் எங்க வீட்டுல இந்த கேள்வியை கேட்டுவிட்டு போயிருக்காரு அவருக்கு நாங்க பதில் சொல்லணுமாம் இல்லைன்னா பதிலுக்கு நாங்க ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமாம், நாங்க எதை கேட்டாலும் அவர் பதில் சொல்லிடறாரு இது எனக்கு முன்னாடியே தெரியுமேன்னு வேற சொல்லறாரு..... அதனால தான் நான் அறுசுவையில ஏதோ பார்த்த மாதிரியிருக்கேன்னு இந்த பக்கமா வந்து இதை இங்கே கேட்டு வச்சேன்.

இங்கே இது சரியா? இது சரியா? ந்னு கேட்கறவங்களுக்கு கண்டிப்பாக நீங்க தான் பதில் சொல்லணும். ஆனால் எனக்கு மட்டும் அதுக்கு முன்னாடி பதிலை இமெயில் பண்ணுங்களேன் ப்ளீஸ்.

இஷானி..............மறக்காம.......செய்யுங்க....ஓகே!!!

மீண்டும் சந்திப்போம்
pops.

ஆமினா, ஜெயலெட்சுமி, கீதாசங்கர் - விடை தவறு. அவன் கேட்ட கேள்விமூலம் கிடைக்கிற ஒரு பதில்னால அவன் தப்பிச்சு வெளிய வந்திடுவான். இன்னும் கொஞ்சம் யோசிங்க.

உமா, உங்க mail -id என்கிட்ட இல்ல. நான் இங்க வேணும்னா பதில் கொடுக்கிறேன்.

அன்புடன்,
இஷானி

இஷானி உங்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளேன். பாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்
pops.


என் பொண்களுக்கே நான் பாட்டியானால் என் அம்மாவுக்கு நான் என்ன உறவு?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி மாமி எப்படி இப்படி எல்லாம யோசிக்கிறேள். நீங்க என்ன ரும் போட்டு யோசிக்கிறேளா?, இந்த மாதிரி எல்லாம் கேக்கப்டாது. அப்றம் அழுதுடுவேன். உங்க பொண்ணுக்கே நீங்க பாட்டி னா உங்க அம்மாக்கு நீங்க என்ன கொள்ளுப்பாட்டியா?

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹலோ மோகனா மேம் நானும் இரண்டு நாளா உங்க பதிவுகளை படிச்சிட்டுவர்றேன் பயங்கர காமெடியா எழுதுறிங்க ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கேள்விக்கு விடை உங்க அம்மாவுக்கு நீங்க பொண்ணுதான்

மேலும் சில பதிவுகள்