ட்ரெண்டி ஹென்னா டிசைன்

தேதி: May 3, 2010

5
Average: 4.1 (35 votes)

 

ஹென்னா கோன்

 

கையின் முன்பக்கத்தில் படத்தில் உள்ளது போல் ஒரே அளவாக இடைவெளிவிட்டு இரட்டை கோடுகளாக வரைந்துக் கொள்ளவும்.
இரண்டாவதாக உள்ள இரட்டைக் கோடுகளில் நடுவில் உங்களுக்கு விருப்பமான டிசைன் அல்லது படத்தில் உள்ளது போல் பூவும், கொடியுமாக வரையவும்.
முதலில் வரைந்த டிசைனே எல்லா இரட்டை கோடுகளுக்கு நடுவிலும் வரையவும். இங்கு இன்னும் ஒரு டிசைன் கொடுப்பதற்காக வேறு டிசைன் வரையப்பட்டுள்ளது.
இரட்டை கோடுகளின் முடிவில் படத்தில் உள்ள டிசைனை வரைந்து கொள்ளவும்.
இப்போது வரைந்த டிசைனுக்கு மேலுள்ள கோடுகளின் நடுவே உள்ள இடைவெளியில் படத்தில் இருப்பது போல் வளைவுகள் வரையவும்.
இதுப்போன்ற வளைவுகளை அந்த கோடுகள் முழுவதும் வரைந்து முடிக்கவும். இந்த டிசைன் ஒரு கோட்டில் வரைவதையே எல்லா இடத்திலும் வரைவதால் மிகவும் எளிமையானது. இங்கு 3 இரட்டை கோடுகள் வரைந்திருப்பது போல் மேலும் 2 இரட்டை கோடுகள் வரைந்து டிசைன் செய்தால் கை முழுவதும் மெகந்தி போட்டது போல் இருக்கும்.
இது போல் கறுப்பு ஹென்னாவில் வரைந்து கல் வைத்து அலங்கரிக்கலாம். பார்ட்டி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நன்றாக இருக்கும். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை கொடுத்து கொண்டிருக்கும் திருமதி. வனிதாவில்வாரணிமுருகன் அவர்கள், இந்த ட்ரெண்டி ஹென்னா டிசைனை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வனித்தா மேடம், நான் ஹென்னா போட்டால் எப்படியும் டிசனைக் கம்பிலீட் செய்யமாட்டேன். அருமையா சொல்லிக்கொடுத்திருக்கீங்க.படித்து முடிசவுடனேயெ பதில் போடும்போதுதான் நீங்கப்போட்டதுன்னு தெரியும்.

Don't Worry Be Happy.

வனித்தா மேடம், நான் ஹென்னா போட்டால் எப்படியும் டிசனைக் கம்பிலீட் செய்யமாட்டேன். அருமையா சொல்லிக்கொடுத்திருக்கீங்க.படித்து முடிசவுடனேயெ பதில் போடும்போதுதான் நீங்கப்போட்டதுன்னு தெரியும்.

Don't Worry Be Happy.

ஹாய் வனிதா உங்க மெகந்தி டிசைன் சூப்பர். ரொம்ப அழகா போட்டு காண்ப்பிச்சிருக்கீங்க. வனிதா கறுப்பு ஹென்னா கோன்ன இதுப்போல வரைஞ்சி டிசைன் செய்யலாமுனு சொல்லிருக்கீங்க. சாதாரண மெகந்தி கோனுக்கும், கறுப்பு ஹென்னா கோனுக்கும் என்ன வித்தியாசம்? இந்த கறுப்பு ஹென்னாவ நாமே வீட்டுல தயாரிக்கலாமா?

குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு மிக்க நன்றி. :) ஹேமா, ரேவதி... உங்களை தான்... நிச்சயம் பதிலே வராது உங்ககிட்ட இருந்து இருந்தாலும் மனசு கேக்கல... நான் எல்லாத்துலையும் பதிவு போடுறேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெயலக்ஷ்மி... மிக்க நன்றி. இந்த முறை டிசைனை முழுசா முடிச்சு படம் அனுப்பிடுங்க அறுசுவை'கு.... :) சரி தானே???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வினோஜா... மிக்க நன்றி :). கறுப்பு ஹென்னா வீட்டில் தயாரிக்கலாம். ஆனால் எனக்கு சரியான முறை தெரியாது :(. கறுப்பு மட்டும் நான் கடையில் வாங்கும் கோன் தான் அதிகம் பயன்படுத்தி இருக்கேன். நம்ம உமா (பாப்ஸ்), தேவா மேடம் கேட்டா சரியா சொல்லுவாங்க. கறுப்பு சாதாரண ஹென்னா போல் ரொம்ப நாள் இருக்காது. கொஞ்ச நேரத்திலே போயிடும். பொதுவா எனக்கு கறுப்பு போட விரும்புறது இல்லை... கெமிக்கல் என்பதால். ஆனால் பலருக்கும் கறுப்பு பிடிக்கும். நீங்க விரும்பினா முயற்சி செய்யுங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Very nice, Vanitha.

vaany

வாணி... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

enaku heena poduwathu romba pidikum very nice.innum neraiya kattru koduga madam

ஹாய் வனி,எப்படி இருக்கீங்க..?
மறுபடியும் அசத்தலான மெஹந்தி டிசைனோடு வந்து இருக்கீங்க.
அசத்தலா இருக்கு போங்க.அதுவும் உங்க கைக்கு ரொம்ப அழகாவே இருக்கு.
நேர்த்தியா டிசைனை வரைந்து தள்ளுவதில் வனிக்கு நிகர் வனியே...
என்னுடைய வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் வனி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சஹ்லா.. மிக்க நன்றி. :)

அப்சரா... மிக்க நன்றி. என் கை அழகா இருக்குன்னு சொன்னதுக்கும் ஸ்பெஷல் நன்றி... ;) ஹிஹிஹீ (நான் அப்படி சொல்லலயேன்னு நீங்க பொலம்பர்து கேக்குது... ரகசியமா பொலம்புங்க அறுசுவைக்கு கேக்காம.)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நான் நிஜமாவே உங்க கையை தான் அழகா இருக்குன்னு சொன்னேன்.
சரி சரி அதுக்குன்னு வராத வெக்கத்தையெல்லாம் வரவழைக்க கூடாது.
வீட்டில் அப்புறம் எல்லாரும் ஆச்சரியமா பார்க்க போறாங்க.(ஹீ....ஹீ....)

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அழகா இருக்கு ;)
//கல் வைத்து அலங்கரிக்கலாம்.// கொஞ்சம் விபரிக்க முடியுமா வனி! (பேர் சரியா?) ;)

‍- இமா க்றிஸ்

good design.... good job!!!!!!

God bless you all... by SHERIN

ஹாய் வனிதாக்கா...
எப்படி இருக்கீங்க....நீங்க போடுற மெஹந்தி desings எல்லாம் ரொம்ப சுலபமாவும் அழகாவும் இருக்கு.... எனக்கு மெஹந்தி போட்டுக்க ரொம்ப பிடிக்கும்....நீங்க போட்டு இருக்க desing கண்டிப்பா ட்ரை பண்ணி பாக்றேன்...

SaranyaBoopathi

ஹாய் வனிதா,
இதற்கு முந்தைய டிசைன்ஸை போலவே இந்த மெஹந்தி டிசைனும் சூப்பரா இருக்கு வனி!. ரொம்ப அழகா போட்டு காண்பிச்சிருக்கிங்க. நிறைய மெஹந்தி கோன்ஸ் வாங்கிட்டுவந்து அப்படியே சும்மா தூங்குது, வீக்கென்ட்ஸ் நேரமே கிடைக்காததால்..., எப்படா சம்மர் ஹாலிடேஸ் ஆரம்பிக்கும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்!. இந்த டிஸைனை கட்டாயம் போட்டு பார்த்து சொல்கிறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ரசிச்சிட்டேன்,வனி,எப்ப உங்க கைகளில் போட்டு அனுப்ப போறீங்கன்னு மட்டும் கேட்கக்கூடாது ஆமா....

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வனிதா உங்கள் மெஹந்தி டிசைனி மிகவும் நன்றாக இருந்தது.

life is short make it sweet.

இமா.... மிக்க நன்றி. பேரை சரியா போட்டதுக்கும் சேர்த்து தான்... ஹிஹிஹீ. ;) கடைசி படம் பாருங்க நான் ஒட்டி காட்டி இருக்கேன்... பொட்டு போல் கடைகளில் சின்ன கல் பாடி ஆர்ட், நெத்தியில் வைக்க என்று கிடைக்கும். அதை தான் பயன்படுத்தி இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//அதுக்குன்னு வராத வெக்கத்தையெல்லாம் வரவழைக்க கூடாது.
வீட்டில் அப்புறம் எல்லாரும் ஆச்சரியமா பார்க்க போறாங்க// - ச ச.... அப்சரா நம்ம கைய சொல்லிருக்கங்கன்னு கொஞ்சம் சந்தோஷபட்டா பின்னாடியே கவுத்துட்டீங்களே.....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குட் ஃபிரென்ட்... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரன்யா... மிக்க நன்றிங்க. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க. படமும் அறுசுவைக்கு அனுப்புங்க.... பார்க்க நாங்க காத்திருக்கோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆசியா... நீங்க விடாம என் பதிவுகளில் எல்லாம் ஊக்கபடுத்தும் விதமா பதிவு போடுறீங்க பாருங்க... அதுவே எனக்கு மிக பெரிய சந்தோஷத்தை தருது. மிக்க நன்றி ஆசியா. வாய்ப்பு கிடைச்சா ஒரு முறை உங்க கைல நான் மருதாணி போடுறேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஸ்ரீ... உங்களைவிட அதிகமா நான் தான் உங்களுக்கு எப்போ லீவ் கிடைக்கும்'னு பார்த்துட்டு இருக்கேன். சீக்கிரம் போட்டு அனுப்புங்க... :) மிக்க நன்றி சுஸ்ரீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கீதாஜீ.... எப்படி இப்படிலாம்???!!! அம்மாடியோ நம்ம கீதாஜீ'யா தமிழில் பதிவு போட்டிருக்காங்கன்னு திரும்ப திரும்ப பேரை பார்த்தேன்... மிக்க நன்றி... பதிவு போட்டதுக்கும் அதை தமிழில் போட்டதுக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vanitha u r always welcome :)
enakkum mehenthi podurathula romba interest...

God bless you all... by SHERIN

உங்க பேரு ஷெரின்?? நல்லா இருக்கு. :)

உங்களுக்கும் விருப்பம் இருந்தா நீங்களும் உங்க டிசைன்ஸ் போட்டு அறுசுவைக்கு அனுப்புங்க. இங்க எல்லாருக்கும் பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, உங்க மெகந்தி டிசைன் ரொம்ப நன்றாக உள்ளது. எனக்கு போட்டுக்க ரொம்ப பிடிக்கும். கையிலே எப்பவும் இருக்கணும் போல இருக்கும். உங்க கைக்கு ரொம்ப அழகாக இருக்கிறது.

Save the Energy for the future generation

thank u vanitha
unga name um nalla irukku madam...
enakku mehenthi eppadi inga podurathunu theriyathu madam
neenga solli koduthingana naan poduren madam
god bless u

God bless you all... by SHERIN

இந்திரா... மிக்க நன்றி. :) எனக்கும் முன்பெல்லாம் தொடர்ந்து கையில் மருதாணி வைத்திருக்கும் பழக்கம் இருந்தது. இப்போ குழந்தைகள் கூடவே நேரம் போயிடுது.... போட முடியல. போட்டு பார்த்து படம் அனுப்புங்க. :)

ஷெரின்... அறுசுவை'கு எப்படி அனுப்புறதுன்னு தானே கேட்டிருக்கீங்க??? ரொம்ப சுலபம்... டிசைன் வரையும் போது ஸ்டெப் ஸ்டெப்பா படம் எடுங்க, அதை விளக்கத்தோடு arusuvaiadmin@gmail.com முகவரிக்கு அனுப்புங்க. அறுசுவை அட்மின் குழு அதை வெளியிடுவாங்க. :) சரியா?? புரியல என்றால் கேளுங்க சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

enaku oru sandegam idula naanga kooda post pannalama?

பவித்ரா.... நிச்சயம் நீங்க அனுப்பலாம். யார் வேண்டுமானாலும் குறிப்பு அனுப்பலாம். arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு குறிப்பை அனுப்புங்க, அவங்க அதை வெளியிடுவாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தாங்க்ஸ் வனி. அடுத்த தடவை போட்டுப் பார்க்கிறேன்.

இப்பவும் சந்தேகம் இருக்கு. சரி ஸ்டிக்கர் என்றாலும் எவ்வளவு நாள் / நேரம் கைல இருக்கும்!! இல்லாவிட்டால் வேற ஸ்பெஷல் க்ளூ யூஸ் பண்றீங்களா?

‍- இமா க்றிஸ்

இமா... நான் ஸ்டிக்கர் மாதிரின்னு சொன்னது ஒட்டும் வகை பொட்டு தான்... அவை பொதுவாக ஒரு நாள் முழுக்க இருக்கும்.. எடுத்து வைத்து விட்டு மீண்டும் கூட பயன்படுத்தலாம். ஸ்பெஷல் க்ளூ தேவை இல்லை. சந்தேகம் போயிட்டுதா??? இல்லை என்றால் உங்களுக்கு ஸ்டிக்கி ஸ்டோன்ஸ் பார்சல் அனுப்பறேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழிக்கு
தாமதமான பதிவிற்க்கு மன்னிக்கவும்.
Mehendi எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று பார்ப்பதற்க்கு mehndi-யோடு கைகளும் அழகாக உள்ளது.
.
மேலும் mehndi-யில் COLORS கொடுக்க முடியுமா?நான் MEHNDI ல் COLORS FILL UP செய்த PHOTOS பார்த்தேன்.என் தங்கையின் திருமணத்திற்க்கு போட மிகவும் ஆசையாக உள்ளது. அது எப்படி என்று நீங்கள் சொல்ல வேண்டும்.நன்றி

really nice definetly i try that. thank u

ஹாய் வனி எப்படி இருக்கீங்க...?
சும்மா சொன்னேன் நம்ம வனியை நானே கவிழ்ப்பேனா.....
அப்புறம் ஆசியா மேடத்துக்கு மட்டும் தான் போட்டு விடுவீங்களா...?
எனக்கு போட மாட்டீங்களா வனி...ப்ச்ச்...
ஓ...கே....நீங்க போட்டதே நான் போட்ட மாதிரின்னு நினைச்சிக்கிறேன்.
சரியா.....?(எப்படீ....)

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சாந்தி.. மிக்க நன்றி. :) நிச்சயம் கலர்ஸ் குடுக்கலாம். கடைகளில் "ஹென்னா க்லிட்டர்ஸ்" என்று கேளுங்கள். அதுவும் கோன் தான். எல்லா நிறமும் கிடைக்கும். கருப்பு ஹென்னா போட்டு ஆங்காங்கே கலர் க்லிட்டர்ஸ் பயன்படுத்தலாம். இல்லை என்றால் முழுவதுமே கலர்ஸ் கொண்டே போடலாம். திருமணம், பார்ட்டி போன்றவைக்கு அழகாக இருக்கும். முயற்சித்து பார்த்து சொல்லுங்கள். உங்கள் தங்கை'கு என் அன்பும், வாழ்த்துக்களும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சங்கீதா.. மிக்க நன்றி. முயற்சித்து பார்த்து அறுசுவைக்கு படமும் அனுப்பி வைங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி.
India சென்றதும் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்

design romba nalla irrukku.unga kaikalil nanraga sivandhu ulladhu.enakku henna design poda romba pidikkum.readymade cone enakku nanraga sivakkavillai.homemade cone enakku nanraga ulladhu.ungal design simple&super b,ellorum easyaha podumpadi ulladhu.

hi vanitha madam.. h r u? i m newly joined arusuvai . i like hennas.. i saw ur designs. its really so nice. i like it. i ill try...thank u. by sasiarun.

தோழி.. மிக்க நன்றி. ஒவ்வொருவர் உடல் வாகுக்கு ஒவ்வொன்று ஒத்து வரும்... உங்களுக்கு வீட்டு தயாரிப்பு பிடித்திருந்தால் அப்படியே செய்து பாருங்கள். படம் அனுப்ப மட்டும் மறந்துடாதிங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சசிஅருண்... மிக்க நன்றி. நான் நலம். நீங்க நலம? நிச்சயம் முயற்சித்து பாருங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா மேடம்,

உங்க டிசைன்ஸ் எல்லாமே சூப்பர். எனக்கும் மெஹந்தி போடுவது ரொம்ப பிடிக்கும். என் கல்யாண‌துக்கு போட்டது. 8 மாசம் ஆச்சு. US ல எங்க கோன் கிடைக்கும்னு தெரியல. தலைக்கு போடுற‌ ஹென்னா பவுடர் வாங்கி வச்சிருக்கேன். அதை வைத்து மெஹந்தி போட முடியுமா?எப்படி தயாரிக்கணும்னு சொல்லுங்களேன் பிளீஸ்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

ஹாய் கமலகிர்திகா (பெயர் சரியா???)... மிக்க நன்றி. புதுசா கல்யாணம் ஆனவரா.... வாழ்த்துக்கள். :) தலைக்கு போடுவது என்றே கிடைக்கும் மருதாணி சரியா வராதுங்க (விருப்பம் இருந்தா 1 ஸ்பூன் பவுடரை தயார் செய்து கையில் வைத்து பாருங்க... எப்படி இருக்குன்னு. நல்லா வந்தா பயன்படுத்தலாம்.). சாதா மருதாணி தான் என்றால் நம்ம பாப்ஸ் உமா குறிப்பு (http://www.arusuvai.com/tamil/node/13526) இருக்கு எப்படி தயாரிக்கணும்'னு அதை செய்யலாம். இல்லை என்றால் வெறும் எலுமிச்சை சாரு விட்டு சுத்தம் செய்த மருதானி பவுடரை கலக்கி கோனில் போட்டு பயன்படுத்தலாம். முயற்சி செய்து பாருங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hello Vanitha Madam,

Im the new user in this website. your mehandi design was simply superb. Pls tell us many more design like that.

Thanking U

Devivasu

தேவி வாசு... வருக வருக. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா உங்க மெஹந்தி டிசைன் ரொம்ப நல்லாஇருக்கு

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவர்ணா... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா