Cooking lessons

சமையல் தெரியுமா என்ற கேள்விக்கு "சுடுதண்ணீர் வைக்க தெரியும்" என்று பலர் கிண்டலாக பதில் சொல்ல கேட்டிருக்கின்றோம். சுடுதண்ணீர் வைப்பது எளிதான விசயம் என்றாலும், அதிலும் நாம் கவனித்து செய்ய வேண்டிய விசயங்கள் எத்தனையோ உள்ளன. சமையல் எளிதான கலையானாலும், எல்லா கலைகளையும் போல் இதிலும் நல்ல அனுபவம் இருந்தால் மட்டுமே சிறந்த பெயர் வாங்க இயலும். நல்ல அனுபவம் என்பது வெறும் அனுபவத்தில் இருந்து வேறுபட்டது. நான் பத்து வருடங்களாக சமைத்து வருகின்றேன் என்று சொல்பவர்கள்கூட சிறு சிறு தவறுகள் செய்து பலநேரங்களில் சொதப்பிவிடுவார்கள். இதற்கு காரணம் அடிப்படை விசயங்களில் அனுபவம் இல்லாமை.

Selvi akka
அறுசுவையில் 600க்கும் அதிகமான சமையல் குறிப்புகள் கொடுத்து, நேயர்களின் மத்தியில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ள திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள், சமையல் என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கும் உதவிடும் வகையில், சமையல் கலையின் அ, ஆ வினை இங்கே பயிற்றுவிக்க இருக்கின்றார். அட அப்படியா..!! என்று நீங்கள் ஆச்சரியப்படும் பல பாடங்களுடன், இதென்ன பெரிய விசயமா என்று நீங்கள் நினைக்கும் பாடங்களும் இங்கே இடம்பெறலாம். அப்படி ஒரு கேள்வி மனதில் எழுந்தால், இந்த விசயம்கூட தெரியாத பலர் இருக்கின்றார்கள் என்ற பதிலை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ள வேண்டும். சுடு தண்ணீர் வைப்பது எப்படி என்ற அடிப்படையில் ஆரம்பித்து, சுடச்சுட பிரியாணி தயாரிப்பது எப்படி என்பது போன்ற கடினநிலை பாடங்களையும் இங்கே விவரிக்க இருக்கின்றார். சமையலே தெரியாத பேச்சுலர்ஸ்ல் இருந்து, சமையலில் பல வருட அனுபவம் வாய்ந்த பலருக்கும் இந்த பகுதி உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சமையல் அரிச்சுவடி பாகம் - 4

சமையல் அரிச்சுவடி பாகம் - 3

சமையல் அரிச்சுவடி பாகம் - 2

சமையல் அரிச்சுவடி பாகம் - 1