வெஜ் பனீர் சாண்விட்ச்

தேதி: May 4, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (3 votes)

அறுசுவையில் ஏராளமான சமையல் குறிப்புகள் கொடுத்துவரும் திருமதி. செய்யது கதீஜா அவர்களின் தயாரிப்பு இந்த வெஜ் பனீர் சாண்விட்ச். சுவையான இந்த சாண்விட்ச்சை செய்து பார்த்து உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

ப்ரெட் ஸ்லைஸ் - 6
கேரட் - 1 1/2
உருளைக்கிழங்கு - 1 1/2(சுமாரானது)
வெங்காயம் - 15 (சிறியது)
பச்சைமிளகாய் - ஒன்று (தேவையானால்)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி, பூண்டு விழுது - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
பனீர் - ஒரு கப்
எண்ணெய் - தாளிப்புக்கு
பட்டர் - ப்ரெட்டில் தேய்பதற்கு


 

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் பனீர், கேரட், உருளைக்கிழங்கை தனி தனியாக துருவிக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு நாண்ஸ்டிக் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பின்னர் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி விட்டு கறிவேப்பிலை, நறுக்கின பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதன் பிறகு கேரட் மற்றும் உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்கி விடவும்.
அதனுடன் துருவிய பனீரை சேர்த்து வதக்கி விட்டு சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.
காய்கறிகள் வெந்ததும் இறக்கி வைத்து ஆற விடவும். கறிவேப்பிலை, பச்சை மிளகாயை எடுத்து விடவும்.
ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு பட்டர் தேய்த்துக் கொள்ளவும்.
பட்டர் தேய்த்த ப்ரெட்டின் ஒரு புறத்தில் பனீர் கலவையை வைத்து மற்றொரு ப்ரெட் கொண்டு மூடி சாண்ட்விச் மேக்கரில் வைத்து எடுக்கவும். சுவையான பனீர் சாண்ட்விச் தயார்.

காய்கறிகள், வெங்காயம் சாப்பிட அடம் செய்யும் குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் எதுவும் தெரியாது. பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்தால் கண்டிப்பாக கடைசியில் அதனை நீக்கி விட்டு ப்ரெட்டில் பனீர் கலவையை வைக்கவும். இல்லை என்றால் குழந்தைகள் சாப்பிடும் பொழுது வாயில் கடிப்பட்டால் சாப்பிட மாட்டார்கள். விருப்பப்பட்டால் கொத்தமல்லி இலையை கடைசியில் சேர்த்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன் கதீஜா.

கதீஜா! உங்கள் சான்ட்விச் நன்றாக இருக்கிறது.
நானும் (எனது பிள்ளைகளுக்கு) சண்ட்விச் செய்வேன்.ஆனால் உங்கள் முறை வித்தியாசமானது.
இதுவும் நல்லாய்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.நன்றி நல்ல ரேசப்பி தந்தமைக்கு.
அன்புடம் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

உங்க கருத்துக்கு நன்றி. என் பையனை சாப்பிட வைப்பது ரெம்ப கஷ்டம் அதனால் இப்படி வித்தியாசமாக செய்து அவனை சாப்பிட வைத்து வெற்றியும் அடைந்திருக்கேன். செய்து பார்த்துட்டு வந்து சொல்லுங்க.

அன்புடன் கதீஜா.

கதீஜா அவர்களே எப்படி இருக்கீங்க..?
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இதே முறையில் நானும் செய்வேன் ஒரே வித்தியாசம் பனீர் சேர்த்தது இல்லை அதுதான்.
என் பைய்யனுக்காக நானும் முயன்று பார்ப்பது தான்.என்ன ஒரு நாள் முட்டை,ஒரு நாள் கேப்சிகம் என மாற்றி கொடுத்து பார்ப்பேன்.
இப்போது அந்த லிஸ்ட்டில் பனீரையும் சேர்க்க வேண்டியதுதான்.
உங்கள் அசத்தல் ஐடியாவிற்க்கு மிக்க நன்றி கதீஜா.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நான் நல்லா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க. உங்க கூட பேசியது எனக்கும் சந்தோஷம்.உங்க கருத்துக்கு நன்றி.

அன்புடன் கதீஜா

கதீஜா, உங்கள் சான்ட்விச் நன்றாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் பிள்ளைகளுக்கு காய்கறிகள் இதுபோல் செய்துக் கொடுத்தால் தான் சாப்பிடுகிறார்கள். நானும் இதுபோல் செய்வேன் ஆனால் பனீர் சேர்க்க மாட்டேன். அடுத்தமுறை பனீர் சேர்த்து செய்து பார்க்கிறேன்.

Save the Energy for the future generation

உங்க கருத்துக்கு நன்றி. செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

அன்புடன் கதீஜா.

டியர் கதீஜா மேடம்,
சண்ட்விச் maker என்னிடம் இல்லை எப்படி செய்வது என்று ஐடியா தாருங்கள்
ப்ளீஸ்

என்றும் அன்புடன்,
கவிதா

கதீஜா மேடம் எனக்கு பர்கரில் உள்ள கட்லெட் வெஜ்ல ஆலு போட்டு செய்வது எப்பிடின்னு சொல்லமுடியுமா? அதை ஓவனில் வைப்பது பற்றியும் முடிந்தால் சொல்லுங்கலேன்

all is well