எனது சமையலறை - இந்திரா (ஐக்கிய அரபு அமீரகம்)

இந்திரா சமையலறைஎன்னுடைய சமையலறையைப் பற்றி சொல்ல முதல் காரணம், அதில் உள்ள பாதுகாப்பு வசதிகள். தற்போது நம் நாட்டில் மிகவும் குறைவான இடத்தில், நன்றாகத் திட்டமிட்டு, மிக அழகாக,பயனுள்ளதாக சமையலறை அமைக்கின்றார்கள். ஆனால் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வீடு கட்டப் போகும் அல்லது சமையலறையை மாற்றியமைக்க எண்ணும் நம் அறுசுவை நேயர்களுக்கு உதவியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த குறிப்புகளை தருகின்றேன்.

எனது சமையலறை - இந்திரா (ஐக்கிய அரபு அமீரகம்)

எனது சமையல் அறையின் அளவு 10'X10' தான். ஆனால் நன்றாகப் வடிவமைத்துப் பயன்படுத்தியுள்ளார்கள். எல்லா சுவர்களிலும் டைல்ஸ் ஒட்டியுள்ளார்கள். இதனால் தோற்றம் சிறப்பாக இருப்பதோடு, சுத்தம் செய்வதும் எளிதாக இருக்கின்றது. நான் சின்ன குளிர் சாதனப் பெட்டி தான் வைத்துள்ளேன். இதில் அதிகப் பொருட்கள் வைக்கமுடியாது. இதனால் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவது குறைவு.

my kitchen
 

என்னுடைய சமையலறையில் எனக்கு மிகவும் பிடித்தது அதனுடைய வெளிச்சம். எப்பவுமே வெளிச்சமாக இருக்கும். (இரவில் தெரு விளக்கின் புண்ணியம்). அதற்கு முக்கிய காரணம், இந்த பெரிய ஜன்னல். இதை முழுவதும் திறக்க இயலாது. அது ஒரு பெரிய பாதுகாப்பு. அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு இந்த பாதுகாப்பு மிகவும் அவசியம். இந்த இடத்தில் நின்றால் வெளியே நன்றாக தெரியும். பாத்திரம் கழுவும் போது, காய்கறி நறுக்கும்போது வேலைப் பளுவே நமக்குத் தெரியாது. அதைவிட தனியாக தேநீர் அருந்தும் போது, தனியாக சாப்பிடும் போது நமது தனிமையைப் போக்கிவிடும்.

my kitchen
 

இந்த சமையலறையில் உள்ள காபினெட்டுக்கு உட்புறம் லாமினேட் செய்யப் பட்டு உள்ளது. இதனால் அதை சுத்தப்படுத்துவது மிகவும் சுலபம். குக்கிங் ரேஞ்சுக்குப் பக்கத்தில் உள்ள காபினெட் பக்கங்களும் லாமினேட் செய்யப்பட்டுள்ளது. நாம் சமைக்கும் போது எதாவது கறை படிந்தாலும் சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.

my kitchen
 
முதலில் எரிவாயு ஸ்விட்சை ஆன் பண்ணிய பிறகு தான் ஸ்டவ்வை ஆன் செய்யவேண்டும். சிறு பிள்ளைகள் தெரியாமல் ஸ்டவ்வை ஆன் செய்து விட்டால் அதன் பிறகு இந்த சமையல் எரிவாயு ரெகுலேட்டர் குமிழை (Knob) கடிகாரத் திசையில் திருப்பினால்தான் ஆன் ஆகும். இது ஒரு பாதுகாப்பு வசதி.
my kitchen
 

அடுத்து தீ எச்சரிக்கை மணி(Fire Alarm). கொஞ்சம் புகை வந்தாலும் இது ஒலி எழுப்ப ஆரம்பித்து விடும். முழு கட்டிடத்திலும் எச்சரிக்கை ஒலி கொடுக்கும். அதன் பிறகு கட்டிடப் பாதுகாப்பாளர் வந்த பிறகுதான் நிறுத்த முடியும். இதுபோக கையால் இயக்கும் ஒரு தீயணைப்பு உபகரணம் சமையலறையில் உள்ளது. இதை உபயோகிக்கும் முறையும் இங்கே நமக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சமையலறையில் கழிவுநீர் குழாய் உள்ளது. வேண்டுமென்றால் தண்ணீர் விட்டு கழுவி விடலாம்.

my kitchen
 

இந்த சாப்பாட்டு மேஜையை நமக்குத் தேவையான சமயத்தில் நிமிர்த்தி வைத்துக் கொள்ளலாம். தேவையில்லாத சமயங்களில் மடித்து வைத்துக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்கள் மட்டும் இருக்கும் சமயத்தில் சாப்பாட்டு அறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அளவில் சிறியதாக இருந்தாலும், போதுமான பாதுகாப்பு வசதிகளுடன் தேவைக்கேற்ப இருப்பதால், எனது சமையல் அறையை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்திரா - ஐக்கிய அரபு அமீரகம்

my kitchen
 

Comments

nan kuwait la apukolifa enra edathil ullen plz help me

Kitchen window superuh irruku. i like very much