முட்டை ஃப்ரை - 2

தேதி: May 5, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (8 votes)

 

முட்டை - 4
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - 3/4 தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி
இஞ்சி - அரை அங்குலத்துண்டு
பூண்டு - 5 பல்
தேங்காய்த்துருவல் - கால் கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி


 

முட்டை ஃப்ரை செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை வைத்து முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து மேல் ஓட்டை நீக்கி கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய்த்துருவல், சீரகம், மிளகு, சோம்பு, பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும்.
பிறகு அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து மசாலா போல் கலந்து வைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த முட்டையை நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும். மசாலாக் கலவையில் நறுக்கி வைத்திருக்கும் முட்டையை போட்டு நன்கு பிரட்டி வைக்கவும்.
வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா தடவிய முட்டையை போட்டு இரண்டு நிமிடம் கழித்து திருப்பி விட்டு மசாலா முட்டையுடன் சேர்ந்தாற் போல் வந்தததும் மூன்று நிமிடம் கழித்து எடுத்து விடவும்.
சுவையான முட்டை ஃப்ரை தயார். இந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. ராஜேஸ்வரி அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மசாலா சார்ந்து முட்டை பார்க்கவே ருசியாக இருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

it looks very nice. we too used to do the same. but will fry those eggs in thava in low flame.. i will try in your method next time for sure..