ஹெல்தி சாண்ட்விச்

தேதி: May 6, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (8 votes)

இந்த ஹெல்தி சாண்ட்விச் குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. இந்திரா அவர்கள் செய்து காட்டியுள்ளார்.

 

பன் - ஒன்று
க்ரீன் சட்னி - 2 தேக்கரண்டி
சீஸ் ஸ்பெரெட் - 2 தேக்கரண்டி
வெள்ளரிக்காய் துண்டுகள் - 2
காரட் துருவல் - ஒரு தேக்கரண்டி
தக்காளி கெட்சப் - ஒரு தேக்கரண்டி
க்ரீன் சட்னி செய்ய:
கொத்தமல்லி இலை - அரை கட்டு
புதினா - அரை கட்டு
கறிவேப்பிலை - 5 ஆர்க்கு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 2 இன்ச் அளவுள்ள துண்டு
புளி - சிறு எலுமிச்சை அளவு
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

க்ரீன் சட்னி செய்முறை : கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை இலைகளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இந்த மூன்று கீரைகளையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி அரைத்து விட்டு, அதனுடன் பச்சைமிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். கடைசியில் தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து எடுக்கவும். க்ரீன் சட்னி தயார். இந்த சட்னியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டு 2 - 3 நாட்களுக்கு உபயோக்கிலாம்.
சாண்ட்விச் செய்முறை : பன்னை இரண்டாக நறுக்கி வைக்கவும். பன்னின் ஒரு பக்கத்தில் க்ரீன் சட்னியும், மற்றொரு பன்னில் சீஸ் ஸ்பெரெட்டைத் தடவி வைக்கவும்.
க்ரீன் சட்னி தடவிய பன்னில் காரட் துருவலை பரப்பவும். சீஸ் ஸ்பெரெட் தடவிய பன்னில் வெள்ளரிக்காய் வைத்து அதன் மேல் தக்காளி கெட்சப்பை வைக்கவும்.
இரண்டு பன்னையும் ஒன்றாக சேர்த்து மூடிவிடவும். சுவையான ஹெல்தி சாண்ட்விச் ரெடி. வளரும் குழந்தைகளுக்கு கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போன்ற கீரை வகைகள் மிகவும் நல்லது. துவையல் போல செய்து அவர்களுக்கு பிடிக்கும் வகையில் கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என் இந்த சமையல் குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

Save the Energy for the future generation