நண்டு குழம்பு சமையல் குறிப்பு - படங்களுடன் - 14923 | அறுசுவை


நண்டு குழம்பு

வழங்கியவர் : திருமதி. சாந்தா
தேதி : வெள்ளி, 07/05/2010 - 13:49
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
3.85
20 votes
Your rating: None

 

 • நண்டு - 7
 • சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
 • மிளகு - ஒரு மேசைக்கரண்டி
 • தேங்காய் துருவல் - கால் கப்
 • சின்ன வெங்காயம் - 10 + 4
 • கல் உப்பு - 1 1/2 மேசைக்கரண்டி
 • சின்ன தக்காளி - 2
 • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
 • மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
 • புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
 • பூண்டு - 4 பல்
 • கடுகு - அரை தேக்கரண்டி
 • முருங்கைக்காய் - ஒன்று
 • பச்சை மிளகாய் - 2

 

நண்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். 4 சின்ன வெங்காயத்தை மட்டும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கவும். முருங்கைகாயை 2 இன்ச் அளவு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய் துருவலுடன், மிளகு, சோம்பு, பூண்டு சேர்த்து ஒரு முறை அரைத்து விட்டு பிறகு அதனுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து விழுதாக அரைக்கவும்.

புளியுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். மேலும் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும். புளிக்கரைசலுடன் அரைத்த விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கின சின்ன வெங்காயத்தை போட்டு அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

வெங்காயம், தக்காளி வதங்கியதும் அதில் நண்டை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

பின்னர் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி மேலும் அரை கப் தண்ணீர் சேர்த்து, அதில் முருங்கைக்காய் துண்டுகளை போடவும்.

15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். பின்னர் குழம்பு சற்று கெட்டியாக ஆனதும் இறக்கி விடவும்.

சுவையான நண்டு குழம்பு தயார்.

இந்த நண்டு குழம்பு குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. சாந்தா அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..Thanks

Santha sister,

Vanakkam. I have tried to prepare the Crab curry. It is very delicious. I was followed your procedures. Thank you verymuch!

Best regards,
Veerasekar

நண்டு குழம்பு

நண்டு குழம்பு நல்லாய் இருக்கின்றது சாந்தா.
நானும் இந்த முறைப்படிதான் சமைப்பேன். ஆனால் முருங்கைகாய் சேர்ப்பதில்லை.

எங்கள் வீட்டில் நண்டு குழம்பு என்றால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் முறைப்படியும் சமைக்கலாம் என்று இருக்கின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

nandu kulambu super

nandu kulambu super

நன்டு குழம்பு

நன்டு குழம்பு supper