பாகற்காய் பொரியல்

தேதி: May 8, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (8 votes)

திருமதி. இந்திரா அவர்கள் தன் தோழியிடம் கற்றுக் கொண்ட இந்த கசப்பில்லாத பாகற்காய் பொரியல் குறிப்பினை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

 

பாகற்காய் - 250 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி + பூண்டு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 2 சுண்டைக்காய் அளவு
எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு


 

பாகற்காயை மெல்லிய வட்டவில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
நறுக்கி வைத்திருக்கும் பாகற்காய் வில்லைகளை எண்ணெய்யில் போட்டு நிறம் மாறும் வரை பொரித்து எடுக்கவும். பொரித்த பாகற்காயை டிஸு பேப்பரால் ஒற்றி எண்ணெயை எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் எல்லா வகை பொடிகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
வதக்கியவற்றுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி வெல்லம், உப்பு சேர்த்து மூடி போட்டுக் கொதிக்க விடவும்.
கலவை கறிபதத்திற்கு வந்தவுடன் வறுத்து வைத்துள்ள பாகற்காயை சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
சுவையான கசப்பில்லாத பாகற்காய் பொரியல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என் இந்தக் குறிப்பை வெளியிட்ட மதிப்பிற்குறிய அட்மின் அவர்களுக்கு நன்றி

Save the Energy for the future generation

ஹாய் இந்திரா...,உங்கள் குறிப்பு தொடர்ந்து நன்றாகவே உள்ளது.
செய்து சாப்பிட சும்மா அப்படி இருக்கும்....
அப்படின்னு சொல்லதோணுது.ம்ம்ம் இன்னும் நிறைய அசத்துங்க...
எனது வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இந்திரா அடுத்த மெனு பாவற்க்காய் பொரியல் ம்ம்ம்......அசத்துங்க.

life is short make it sweet.

என்னங்க தொடர்ந்து கலக்கறீங்க...மகிழ்ச்சியாக இருக்கு..நேற்று லுலு ஃபுட் ஃபெஸ்டிவல் போயிருந்தேன்...உங்கள் நினைவுதான்...நல்ல குறிப்பு..:-
பாராட்டுக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இந்திரா! உங்கள் பாகற்காய் பொரியல் இன்று செய்து பார்த்தேன். நன்றாக வந்தது.நல்ல ரேசப்பி தந்தமைக்கு நன்றி
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

டியர் அப்சரா, உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. நிச்சயமாக எனக்கு தெரிந்ததை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.
டியர் கீதா , உங்கள் பாராட்டுக்களுக்கு மிக மிக நன்றி.
டியர் இளவரசி,
புட் வெஸ்டிவல் இங்கும் நடக்கிறது. ஏதாவது புதிய சமையல் குறிப்பை கற்றுக் கொண்டீர்களா? உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
டியர் ராணி,
பகற்காய் பொரியலை செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.

Save the Energy for the future generation

இன்று உங்கள் பாகற்காய் பொரியல் செய்தேன்..அருமை...மிக்க நன்றி

nanriyudan

ஹாய் இந்திரா இன்று மதியம் பாகற்க்காய் பெரியல் பண்ணினேன் ரியலி வெரி taaty.

எங்கள் வீட்டில் அனைவருக்குமே பாகற்காய் என்றால் ரொம்பவே பிடிக்கும். பொரியல், வறுவல், மசாலா, கார குழம்பு என்று தான் செய்திருக்கிறேன்....இப்படி இஞ்சி பூண்டு மசாலா சேர்த்து செய்ததில்லை....வித்தியாசமான குறிப்பு.....வெள்ளம் மட்டும் சேர்க்கவில்லை....எங்களுக்கு கசப்பாய் இருந்தால் தான் பிடிக்கும். வாழ்த்துக்கள்.

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உங்க குறிப்பில் இருந்து,பாகற்காய் பொரியல் செய்தேன்.இஞ்சி-பூண்டு சேர்த்து செய்வது இதுவே முதல் முறை.சுவை எனக்கு ரொம்ப பிடிச்சது.குறிப்புக்கு நன்றி.