இனிப்பு புட்டு செய்வது எப்படி??????

தோழிகளே....
இனிப்பு புட்டு செய்வது எப்படி.....இந்தியாவில் ஒரு மாமி எனக்கு சீமந்ததுக்கு செய்து கொடுத்தாங்க.அது brown coloura இருந்தது.வெல்லமோ,கருபட்டியோ போட்டு செய்திருந்தார்கள்.ரொம்ப டேஸ்டா இருந்துச்சு. யாராவது அதன் செய்முறை தெரிந்தால் சொல்லுங்களேன்..

செய்முறை தெரிந்தால் சொல்லுங்களேன்........

Kalai

கலா... இன்னும் யாரும் பதில் சொல்லவில்லையா???? சரி... ப்ரவுன் கலர்???? கேப்பை மாவு புட்டா??? இனிப்பு புட்டு அரிசி மாவு, கேப்பை மாவு, கோதுமை மாவு அனைத்திலும் செய்யலாம்.... உங்களுக்கு எந்த குறிப்பு வேண்டும்??? சொல்லுங்க... எங்க அம்மா செய்முறை நான் சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ வனிதா...
யாழினி,குமரன் நல்லாருக்காங்கதானே....புட்டு அரிசிமாவு புட்டுதான்,ஆனா கருப்பட்டியா,வெல்லமானு தெரியல அத காய்ச்சி அதுல புட்டு போட்டு கிண்டுவாங்கனு நினைக்கிறேன் சரியா தெரியல...

Kalai

என்னப்பா யாருக்குமே இனிப்பு புட்டு செய்ரது எப்படினு தெரியாதாப்பா......

Kalai

ஹாய் கலா, இனிப்பு புட்டு செய்யறது ரொம்ப சுலபம். தமிழ்நாட்டில் கொலு, மஞ்சள் நீராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் இந்த வகை புட்டு செய்வார்கள். தேவையான பொருட்கள் புட்டு அரிசி மாவு ( ரெடிமேடாக கிடைக்கிறது), தேங்காய் முற்றியது (சின்ன சைஸ் துண்டுகளாக வெட்டியது), வெல்லம், ஏலக்காய், முந்திரிப்பருப்பு, 2 சிட்டிகை உப்பு. அரிசி மாவை வெறும் வாணலியில் 5 நிமிடம் போல வறுத்துக் கொள்ளுங்கள். வாணலியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் அதே அளவில் வெட்டிய தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். வெல்லத்தோடு சிறிது தண்ணீர் ஊற்றி இளம் பாகு பதத்தில் காய்ச்சி, அதில் பொடித்த ஏலக்காய், உப்பு, அரிசி மாவு, வறுத்து வைத்த முந்திரி, தேங்காய் சேர்த்து நன்றாக கிண்டுங்கள். உதிரி ஆகும்வரை கிண்டுங்கள். இப்போது புட்டு, பவுடர் போல கட்டியில்லாமல் இருக்கும். இதனை வாரக்கணக்கில் கூட வெளியில் வைத்திருந்து உபயோகிக்கலாம். கெட்டுப் போகாது. மாவை தனியாக வேக வைத்து சலித்து சேர்க்க வேண்டியதில்லை. அளவுகளோடு சமையல் குறிப்பில் சீக்கிரமே சேர்க்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

ரொம்ப நன்றி தேவா மேடம்...நான் இதை நாளைக்கே செய்து பார்க்கிறேன்.....மீண்டும் என் நன்றிகள்....

Kalai

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மேலும் சில பதிவுகள்