செவ்வரளி பூ செய்வது எப்படி?

தேதி: May 10, 2010

4
Average: 3.9 (12 votes)

 

ரோஸ் நிற 2 X 1 துணி
பட்டர் பேப்பர்
வெள்ளை கம்
ரோஸ் நிற எம்ப்ராய்டரி நூல்
ஹாஃப் ஒயிட்நிற எம்ப்ராய்டரி நூல்
கம்பி
ரோஸ் நிற அக்ரிலிக் பெயிண்ட்
பச்சைநிற டேப்
வெள்ளைநிற டேப்
சார்ட் பேப்பர்
மார்க்கர்

 

செவ்வரளி பூவின் இதழ் ஒன்றை சார்ட் பேப்பரில் வைத்து ஒரு மாதிரி இதழ் வடிவம் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
இந்த சார்ட் பேப்பர் இதழை துணியின் பின் பக்கம் வரைந்து ஐந்து இதழ்கள் வெட்டி எடுக்கவும்.
கம்பியை படத்தில் உள்ள வடிவத்தில் வளைத்து 5 கம்பிகள் வெட்டி வைக்கவும்.
கம்பியில் வெள்ளை டேப் சுற்றி துணியில் பின் பக்கம் ஒட்டி அதை பட்டர் பேப்பரில் ஒட்டவும்.
இதழ்கள் காய்ந்ததும் பட்டர் பேப்பரோடு சேர்த்து இதழ்களை தனித்தனியாக வெட்டி எடுக்கவும். அதன் நடுப்பகுதியில் இழைகள் பிரித்த ரோஸ் நிற எம்ப்ராய்டரி நூல்களை வெட்டி ஒட்டவும்.
நடுவே வைக்க போகும் கம்பியில் ஹாஃப் ஒயிட்நிற எம்ப்ராய்டரி நூலை இரண்டாக மடித்து வைத்து ஒட்டவும்.
இப்பொழுது கம்பியில் செய்து வைத்திருக்கும் இதழ்களை ஒவ்வொன்றாக வைத்து நூலால் பூ கட்டுவது போல் கட்டவும்.
பின் பக்கம் ஒட்டிய பட்டர் பேப்பருக்கு ரோஸ் நிற அக்ரிலிக் பெயிண்ட் அடித்து கம்பிக்கு பச்சை நிற டேப் சுற்றி ஒட்டவும்.
கம்பியில் கட்டிய இதழ்களை நிஜம் செவ்வரளி பூ போல் வளைத்து முடிக்கவும். சுலபமாக செய்யக்கூடிய அழகிய செவ்வரளி பூ ரெடி. அறுசுவை நேயர்களுக்காக திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள், இந்த செவ்வரளி பூ செய்முறையை வழங்கியுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

செய்த மாதிரியே தெரியவில்லை வனி. அவ்வளவு அருமையாக, நேர்த்தியாகச் செய்திருக்கிறீங்க. பாராட்டுக்கள். இன்னும் நிறையக் குறிப்புகள் கொடுங்க.

‍- இமா க்றிஸ்

குறிப்பை வெளியிட்ட அறுசுவை நண்பர்களுக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா... வழக்கம் போல் உங்க பதிவை கண்டதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா இதை பார்த்ததுமே நீங்கதான் செய்திருப்பீங்கன்னு நினைத்தென்பா .நல்லாயிருக்கு பா

all is well

வனிக்கா superbbb....
ரொம்ப ரியலா இருக்கு....கலக்கறிங்க....

SaranyaBoopathi

வனிதா,
ரொம்ப அழகா, நிஜ பூ போலவே இருக்கு. பாராட்டுக்கள்!

அன்புடன்,
செல்வி.

மதி... தவறாம எல்லா குறிப்பும் பார்த்து பின்னூட்டம் தரீங்க. சந்தோஷமா இருக்குங்க. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரன்யா... மிக்க நன்றி. நீங்களும் முயற்சி செய்து பாருங்க நல்லா வரும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செந்தமிழ் செல்வி... மிக்க நன்றி. பெரியவர்கள் நீங்க சொன்னா ரொம்ப சந்தோஷம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா,

சூப்பரா இருக்கு, அப்படியே தத்ரூபமா, எவ்வளவு அழகா செய்திருக்கிங்க?!! கலக்கிட்டிங்க போங்க! ; ) பாராட்டுக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ... மிக்க நன்றி. லீவ் விட்டதும் நீங்களும் செய்து பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர்....
பூக்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன....

தேன்மொழி... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

kaivali
prema_banu - செவ்வாய், 11/05/2010 - 16:18
sevarali flower is a super
இங்கே போடவேண்டியதை தவறாக அங்கே போட்டுடிங்க பா

all is well

வனிதா, மிகவும் அழகாக இருக்கு. செய்து பார்க்க வேண்டும்.
vaany

ரொம்ப அழகா இருக்கு மேடம்
பாராட்டுக்கள்
நிஜமான பூ போலவே இருக்கு
நிறைய குறிப்பு தாங்க

என்றும் அன்புடன்,
கவிதா

நல்ல புரியறமாதிரி விள்க்கம்.அருமை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் வனிதா,

சூப்பரோ சுப்பர். நல்லாய் அசத்துறீங்க. தொடர்ந்து தாருங்கள்.
இன்னும் எதிர்பார்க்கின்றோம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மதி... வேறு ஏதும் பகுதியில் தோழிகள் இட்ட பதிவா இது??? இங்கே நீங்கள் சேர்த்தமைக்கு மிக்க நன்றி.

பதிவு இட்ட தோழிகளுக்கும் என் நன்றிகள் பல. (kaivali
prema_banu )

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாணி.... மிக்க நன்றி. நிச்சயம் செய்து பார்த்து சொல்லுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா... மிக்க நன்றி. நீங்களும் முயற்சி செய்து பாருங்க.

ஆசியா... மிக்க நன்றி.

யோகராணி... மிக்க நன்றிப்பா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Medam, seivaraLip Poo seiya entha vagaith thuNiyaip payanpaduththuvathu?

ஜெனிஃபர்... 2 X 1 துணி பயன்படுத்துங்க. சரியா இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

i like ur flower hand work

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா