அரிசி மாவு புட்டு

தேதி: May 12, 2010

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

அரிசி மாவு - 1 1/2 கப்
தேங்காய் பூ - 1/2 கப்
சீனி - தேவைக்கு
பதனி வட்டு(அல்லது புட்டு) - பாதி
ஏலம் - 2


 

முதலில் அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து உதிராக உதிர்த்து வைக்கவும்.

5 நிமிடம் கழித்து ஒரு சட்டியில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி ஸ்டீமரில் இந்த அரிசி மாவு கலவையை வைத்துமூடி போட்டு ஆவியில் வேகவிடவும். 10 நிமிடம் கழித்து வெந்ததும் இறக்கி தேங்காய் பூ,பொடித்த ஏலம், சீனி, வட்டை இடித்து போட்டு கிளறி பரிமாறவும்.

சுவையான அரிசிமாவு புட்டு தயார்.

காலை டிபனுக்கு இதை அப்படியே சாப்பிடலாம். இல்லைன்னா ஒரு வாழைபழம் போட்டு பிசைந்து சாப்பிடலாம் டேஸ்டாக இருக்கும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.


அரிசிமாவில் தண்ணீர் நிறைய ஊற்றி பிசையக்கூடாது புட்டு வீணாகிவிடும்.தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து உதிர்த்து வைக்கனும். அதே போல் வேகவைக்கும் போதும் தண்ணீர் அதிகமாக பாத்திரத்தில் வைக்க கூடாது தண்ணீர் மேலே வந்து விட்டால் புட்டு நல்லா இருக்காது. இட்லி வேக வைக்கும் போது எப்படி வைப்போமோ அப்படி அளவா தண்ணீர் வைத்து வேகவிடனும். மூடியை போட்டு வேக வைக்கனும். மூடியை திறக்கும் போதும் அந்த மூடியில் உள்ள தண்ணீர் புட்டு மாவில் விழுந்து விடக்கூடாது ருசி மாறிவிடும்.

இதில் புட்டு செய்யும் போது இனிப்பு சேர்க்காமல் வேகவைத்த பின் தேங்காய் பூ மட்டும் சேர்த்து தக்காளி பருப்பு வைத்து இந்த புட்டில் ஊற்றி சாப்பிடலாம் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பதனி வட்டு என்றால் என்ன?
கொஞ்சம் சொல்லுங்க

என்றும் அன்புடன்,
கவிதா

this puttu method is wrong. srilanka.specially in jaffna pittu is very tasty.

make pittu with hit water. mix hot water with salt water. then mix with the pittu flour.then mix it well. then by using cub or anything make the pittu as small pieces. then mix the cocount with this. then put it in the steamer and steam it. with in 15 mins pittu ready.

அன்பு மாலினிஸ்ரீ,

எந்த உணவுப் பதார்த்தத்துக்கும் இடத்துக்கு இடம், வீட்டுக்கு வீடு தயாரிப்பு முறை வேறுபாடு இருக்கத்தான் செய்யும். நீங்கள் சொல்லி இருக்கும் முறை சரிதான். அதற்காக இங்கு குறிப்பிட்டுள்ள முறை தவறு என்று சொல்லுவது எப்படி? ;)

இது வேறு விதமான குறிப்பு. கொத்தாமல் அழகாக உதிரியாகப் பிட்டு குழைக்கலாம். சுவை, தெரிவு செய்யும் மாவிலும் இருக்கிறது. தேங்காய்ப்பூ சேர்த்து அவித்தால் சுவைதான் இல்லையா! ஆனால் பிட்டு தனியாக அவித்து எடுத்து வைத்தால் அவரவர் தேவைக்குத் தேங்காய்ப்பூ சேர்த்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. ஆரோக்கியம் கருதி அதனைத் தவிர்க்க விரும்புவர்கள் வேறு எதாவது ஒரு கறியோடு சாப்பிட்டு விடுவார்கள்.

ஒருமுறை இதுபோல் சமைத்துச் சாப்பிட்டுப் பாருங்களேன். சுவை வேண்டுமானால் வித்தியாசப்படலாம். நிச்சயம் குறிப்பில் தவறில்லை சகோதரி.

அன்புடன் இமா

நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய உதவுவதற்காக - http://www.arusuvai.com/tamil_help.html

‍- இமா க்றிஸ்

பதனி வட்டு அப்டினா என்ன யாராவது சொல்லுங்க பா

அன்புடன் அபி