அவரைக்காய் கூட்டு

தேதி: May 12, 2010

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

அவரைக்காய் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
மசாலாதூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கு
தேங்காய் விழுது- 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - தாளிப்புக்கு
கருவேப்பிலை - சிறிது
தேங்காய் பால் - 3 மேசைக்கரண்டி


 

முதலில் அவரைக்காயை சுமாரான அளவில் நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.சிறிது தாளிப்புக்கு எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய அவரைக்காய்,வெங்காயம்,மசாலாதூள்,மஞ்சள் தூள்,உப்பு,தேங்காய் விழுது சேர்த்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம்,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பின் அவரைக்காய் கலவையை சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.காய்கறி வெந்ததும், தேங்காய் பாலை ஊற்றி தீயை குறைத்து 3 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

இதை மீன் குழம்பு,ப்ளெயின் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


தேங்காய் விழுது, தேங்காய் பால் அவரவர் விருப்பத்திற்க்கு கூட்டி குறைத்து சேர்த்துக்கலாம். வரட்டிய இரால் இருந்தால் 4 சேர்த்தால் இதன் ருசிய கூட்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

thank u