குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் - தளிகா

குழந்தை உணவு

இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.

என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் "கொஞ்சமாக கொடுங்கள்" என்பார்கள், சிலர் "எல்லாமே கொடுக்கலாம்" என்பார்கள். 'கொஞ்சமாக' என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

என்ன உணவு கொடுக்கலாம்?

குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.

குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.

பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.

திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.

குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.

வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.

பலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.

முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்

வாழைப்பழம் - ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.

ஆப்பிள் - ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.

அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.
அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.

பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.

சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.

வேக வைத்து மசித்த காய்கறிகள்:

பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.

இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.

ஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.

எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.

ஒவ்வாமை

குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.

குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.

உணவு சாப்பிட மறுத்தால்

சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.

சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.

நன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.

குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.

அடுத்த பாகத்தில் சந்திக்கலாம்.

Comments

unga kutti ponnu super.. en name thana...unga tips super... en paiyanukku 9 months akuthu... ana nalla sapdurathu illa.. enna foods kodukkalam.. sollunga..

Anbudan,
Naveena.

அந்த குட்டி பொண்ணு பெயரும் நவீனா தான். தமிழில் எழுதுங்க பா. அப்ப தான் நிறைய பேர் உங்களுக்கு பதிவு போடுவாங்க.

கீழே தமிழ் எழுத்துதவி இருக்கிறது. அதிலேயே எல்லா விளக்கங்களும் இருக்கிறது. முயற்சி செய்யுங்கள்!

வாழ்த்துக்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நாம்ப பேசி ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கீங்க? 2 குழந்தைகளையும் எப்படி சமாளிக்கறீங்க?எந்த த்ரெட்டில் உங்களுடன் பேசலாம். இங்கு அரட்டை அடிக்க விருப்பமில்லை. தயவு செய்து பதில் சொல்லுங்கள்.
அன்புடன்
ஜெமாமி

ரூபி பச்சை வாழைப்பழம்னா நம்ப ஊரில்(?!) மோரிஸ், ரொபெஸ்டா இந்த பெயரில் எல்லாம் சொல்லுவோமே அந்த பழம்தான் பச்சை வாழைப்பழம். இப்போ சொல்லுங்க குழந்தைக்கு கொடுக்கலாமா வேனாமான்னு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

romba thanx ennoda keliviku neenga than correct ah pathil podenga neenga sonnatha na try panni pathu tu ungaluku solren pa.tata avan kaya pudichu than solli kudukren solla matran.neenga unga kulanthaiku andha month la tata solli kuduthenga?thanx for ur reply.

thalika unga native athu?ungala pathi konjam solunglen.

ஹாய் நவீனா

குட்டி அட்மினின் பொண்ணு..ஆனால் என பைய்யனுக்கும் இதே வயது இதே முகசாயல் தான்.இதில் கொடுத்துள்ள எல்லா வகை உணவுகளும் ட்ரை பன்னுங்க..நீங்களா ஊட்டுவதையும் தவிற அதிகம் கைய்யில் எல்லாமே கொடுங்க...பசிக்காத பிள்ளைகள் இல்லை ஆனால் அதன் மேல் ஈர்ப்பு இல்லாதது தான் காரணம்..தானாக ஒவ்வொன்றாக சாப்பிட தான் ஒரு இன்டெரெஸ்ட் வரும்.பழங்கள்,வேக வைத்த காய்கறிகள் கூட கைய்யில் கொடுங்க.

cute babay and cute information
thk u pa

VERY USEFUL TO US. THANK U.

ரொம்ப நல்லா இருக்கு.. பாப்பா ரொம்ப அழகா இருக்கு.

nan vealaiku pogiraval eanaku 1 vayadu kulanthai irukiradu aval nandraga than irundal annal ipodu udal mealindu karuthu poivital eanaku romba varuthamaga irukiradu en kulantahien arogiyathirku eathavadu vali solungal please.

bye
sophnababi

its very useful to me and other girls. thanks for giving this information to me. i follow this here after to my child

வணக்கம் புதிய தாய்மார்களே..

சில சமயங்களில் குழந்தைகள் காரணமே இல்லாமல் அழும். அப்போது அவர்களை ஏசாமல் ; அடிக்காமல் அவர்களைத் தூக்கி கன்னத்தில் நிறைய உம்மா.. கொடுத்துப் பாருங்கள்..அழுகை நின்று சிரிப்பு மலர்ந்து விடும்.குறிப்பாக தூங்கி எழுந்தவுடன் குழந்தைகள் அழத் தொடங்கி விடுவார்கள். இதற்கு என் பாட்டி சொன்ன காரணம்.. அவர்கள் கனவுலகில் வெகு தூரம் சென்று தன் தாயைக் காணவில்லையே என்று தேடுவார்களாம்..அதனால் எழுந்தவுடன் தாய் தன் அருகில் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்களாம்.. எனக்கு இந்த வழி சரியாக வேளை செய்கிறது...try..

உங்களது இந்த பகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.எனக்கு சந்தேகம் என்னவென்றால், பழவகைகள் சளி இருக்கும் நேரதிலும் கொடுக்கலாமா? Multi vitamine ட்டானிக் நார்மலாக இருக்கும் குழந்தைக்கும் கொடுக்கலாமா?அவகோடா பழம் மில்க் ஷேக் மாதிரி கொடுக்கலாமா? mutton soup எப்படி கொடுக்க வேன்டும்? மேலும் நான் என் குழந்தைக்கு கொடுக்கும் உணவு முறை சரியா?

என் மகனுக்கு 1 வயது ஆகிறது(9.5 kg).அவனுக்கு நான் காலை 9 மனி அளவில் செரெலக் ,11 மனி அளவில் சத்து மாவு கஞ்சியும் ,2 மனிக்கு சாதம் ( பருப்பு ,காய்,கீரை) பின்னர் 5 மனிக்கு செரலக், 7.30 மனிக்கு ராகி கஞ்சி தருகிரென்.இடையில் தாய் பாலும் தருகிரென்.நான் கொடுக்கும் இந்த உனவு முரை சரியா? இட்லி தொசை,சப்பாதி இதெல்லம் சாப்பிடமருக்கிறான். வேரு என்ன வகை உனவு கொடுக்க்கலாம்..பேரீச்சை பழம் கொடுக்கலாமா?? ஆப்ப்பில் ஆரஞ்ச் ஜுஸ் தருகிரென்.
thanks, padma:)

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

தளீகா அக்கா உங்கள் குறிப்புகள் மிக நன்றாக உள்ளது என் மகள் 5மாதம் சப்போட்டா பழம் தரலாமா ப்ளிஸ் சொல்லுங்கள் அக்கா எனக்கு என்ன குடுக்க என்று தெரியவில்லெ
bye
parimala

HI TO ALL,
YEN KULANTHAIKKU 1YEAR AGUDHU.15 NALA YEN PAYYANNUKKU ADHIGA SALI.DOCTOR KITTA KAMICHU MARUNDHU SAPIDUGIRAN. AANALUM INNUM SALI IRUKKU. ENNA SEIYALAMMNU SOLLUNGA.PLSS.PIRANDHA PODHU 3 K.G IRUNDHAN. AANNA IPPO 7.5 KG MATTUMAE IRUKKAN. ENNA SAPADU THARALAMNNU SOLLUNGA PLSS.

arusuvai.com is reallly super. all of u simply super including ladies special

arusuvai.com is reallly super. all of u simply super including ladies special

I have a 6 years old female kid. She never eats fruits and vegetable. She eats some selected items only. I try to give nutritious item in many ways like telling some stories, the value of food items, through by her school staffs and so on. But she doesn't accept any fruits & vegetables. How to solve this problem. Please give some ideas.

நீண்ட நாள் கழித்து எட்டி பார்க்கிறேன் மண்ணிக்கவும்.;-).எல்லோருக்கும் ரொம்ப நன்றி.பாமா நல்ல விஷயத்தை சொல்லியிருக்கீங்க எனக்கும் இது புது விஷயம் தான்.
பத்மா நீங்க எப்பவோ கேட்டீங்க இப்பவே குழந்தையே பெரிசாகியிருக்கும்.நல்ல சத்தான ஆகாரம் சாப்பிடும் குழந்தைகளுக்கு இந்த மைல்டிவைடமின் எல்லாம் தேவையில்லைன்னு சொல்லலாம்..ஆனால் பல குழந்தைகளும் அப்படியில்லை அதனால் கொடுக்கலாம்.மட்டன் சூப் அறுசுவையிலேயே கூட குறிப்பு இருக்கு..அதில் காரம் மற்றும் இதர மசாலாப் பொருட்கள் குறைத்து செய்யலாம்.பேரீச்சம்பழம் குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்காமல் வேக வைத்து அரைத்து கொடுக்கலாம்.அதுவும் ஒண்ணு போதும்

பரிமளா உங்க குழந்தைக்கு என்ன கொடுக்கன்னு தெரியலைன்னு சொல்றீங்க மேல அதான் எழுதியிருக்கேன் படிச்சு பாருங்க.சப்போட்டா சீக்கிரம் சளி பிடிக்கும் ஒரு 7 மாசம் போல் கொடுத்துக்கலாம்

மனீஷ் உங்களுக்கும் தான் நானே முடிந்தவரை எல்லா உணவு முறைகளையும் சொல்லி விட்டேன் ப்லீஸ் படிச்சு பாருங்களேன்.

நன்றி தமிழ்செல்வி

கஸ்தூரி என் மகளும் அதே கதை தான்.நாமளும் உக்காந்து கூட தினமும் கண்ணு முன்னாடி சாப்பிடனும் தினமும் இதை கவனிக்கையில் சில சமயம் சில பொருள் மீது ஆர்வம் வரலாம்.இப்போ தான் ஆப்பில் க்ரேப்ஸ் உருளை கேரட் மட்டும் சாப்பிட தொடஙியிருக்கிறாள்

ஹாய் தளிகா மேடம் ...மல்டி வைட்டமின் சிரப் பற்றி தங்களது கட்டுரையில் படித்தேன் ...அது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை .....உண்ணும் உணவே அனைத்து சத்து நிறைந்ததாக கொடுப்பது நல்லது ... தாங்கள் தண்ணீர் கோடைகாலம கொடுக்கலாம் என்றதையும் தங்களது கட்டுரயில் படித்தேன் அனால் முதல் 6 மாதம் காலம் குழந்தைக்கு தண்ணீர் தேவைபடாது .....தாய் பாலில் 80 சதம் தண்ணீர் உள்ளது ...ஆகையால் தண்ணீர் கொடுப்பது அவசியம் இல்லை...7 மாதம் முதல் வைட்டமின் c உள்ள உணவை கொடுப்பது அவசியம்(ஆரஞ்சு ,காரட் )பழச்சாறுகள் கொண்டு திட உணவை தொடங்கலாம் ... ...

BRIGHT INFO TECH, KARAIKAL, PUDUCHERRY.GOVT REGD CONCERN -HOME BASED COMPUTER TYPING PROJECT OUTSOURCING (PROJECT PROVIDER). WE ARE HAVING MORE THAN 250 CLIENTS ALLOVER INDIA FOR THE PAST 5 YEARS SERVICE IN DATA ENTRY FIELD. NO ACCURACY / NO ERROR PROBLEM / PERMANENT JOB AND GENUINE MONTHLY PAYOUT DIRECTLY TO YOUR BANK ACCOUNT (MIN.RS.9000/- PM OFFLINE SIMPLE DATA ENTRY JOB)FROM OUR CONCERN TO ALL WELL DOING CLIENTS. 24 HRS ONLINE AND OFFLINE SUPPORT AVAILABLE. CONTACT ME THROUGH TELEPHONE : 9150618622 / 9150278775 OR THROUGH EMAIL : BRIGHTINFO2K@GMAIL.COM. WE HEARTILY INVITES YOU TO JOIN AND GROW WITH US.

என் மகனுக்கு 9 மாதம் நடக்கிறது .அவனுக்கு எந்த நேரத்தில் என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று ஒரு அட்டவணை கூறவும்.

கோடை காலத்தில் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. 1 வயது குழந்தையோடு நிறுத்தி விட்டீர்களே. அடுத்த பாகம் எப்போது? உணவு பழக்கம் போலவே குழந்தைகளுக்கு பழக்க வேண்டிய பல பழக்கங்கள் எப்படி பழக்குவது? (Like potty training, brushing, sleeping and eating by herself). Please tell us. என்னை போல் வெளிநாட்டில் தனியாக இருக்குப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றி, அபி.

வாழ்க வளமுடன்

என் குழந்தைக்கு 7 மாதம் துவங்கியுள்ளது. என்னென்ன உணவு கொடுப்பது, மற்றும் கொடுக்க வேண்டிய நேரம் பற்றிய time chart கொடுத்தால் எனக்கு உதவியாக இருக்கும். pls

em ponnukku 9 masam ayychu entha masathula erunthu nadakka aarampipanga reply pls

வணக்கம். எனக்கு 1 வயதில் மகன் இருக்கிறான். அவனுக்கு நீங்க சொன்னதுபோலல்லாம் நாங்க உணவு கொடுத்தது இல்லை. அவனுக்கு சீக்கிரமா ஜீரணிக்கிற சக்தியில்லாததால எதுவுமே கொடுக்கல. இப்போ தான் சாப்பாடு சாப்பிடுறான் அதுவும் மசித்து கொடுப்போம். எந்த பழங்களையும் இதுவரைக்கும் கொடுத்ததில்லை. ஏன்னா அவனுக்கு அடிக்கடி சளி பிடிச்சிட்டு இருக்கும். லாக்டோஜென் 2 தான் கொடுத்துட்டு இருக்கோம். தாய்ப்பால் இரவு வேளையில் குடிப்பான். மாமிசம் மற்றும் முட்டை உணவுகளும் கொடுத்ததில்லை. மேரி பிஸ்கட் மற்றும் லாக்டோஜென் சாப்பிடுவான் காலையில் 1 இட்லி மதியம் பருப்பு சாதம் மாலையில் பிஸ்கட் மற்றம் லாக்டோஜென் பால் இரவில் சாதம் இதுதான் கொடுத்துட்டு இருக்கோம். மேல இரண்டு பற்களும் கீழில் இரண்டு பற்களும் வந்திருக்கு நல்ல ஆக்டிவா இருப்பான். வேறே ஏதாவது உணவு வழங்கலாமா இல்லை எப்படி என்று நீங்க சொல்லுங்க!

ஹாய் தீபிபாபு.தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்..ஆமாம் சத்தான உணவுக்கு ஈடுஇணை எதுவுமில்லை..ஆனால் பத்தில் இரண்டு குழந்தை தான் அப்படி சத்தான சாப்பாடாக சாப்பிடும் மீதம் எட்டுமே காய்கறி பழங்கள் என்றால் ஓடும் குழந்தைகள் தான்.அதனால் தான் மல்டிவிட்டமின் அவசியமாகிறது என்று மருத்துவரும் சொல்கிறார்.
தண்ணீரும் அப்படி தான் ..தேவையே இல்லை என்று தான் பெரியவங்க சொல்லியும் கேட்காமல் என் முதல் குழந்தையை வளர்த்தினேன் அனுபவம் தந்த பாடம் பின்னாளில் தண்ணி கொடுங்க கொடுங்கன்னு டாக்டர் சொல்லியும் கொடுத்து பழக்க ரொம்ப சிரமப்பட வேண்டியதா போச்சு..தண்ணிக்கு தண்ணி தான் கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்..இரவில் சின்ன குழந்தைகள் அழும்போது கூட கொஞ்சம் தண்ணி கொடுத்து பாருங்க அழுகை நிறுத்திடும் அப்போ தான் அவங்களுக்கு தாகம் எடுக்குமென்று புரிந்தது..கொடுக்காமல் விட்டு 6 மாதம் போன பின் தண்ணி கொடுத்து பழக்க ரொம்ப ரொம்ப கஷ்டம்

அப்படி அட்டவனை எதுவும் பார்க்க தேவையில்லை என்பது என் கருத்து..குழந்தைக்கு தினம் 4 வேளையா பிரித்து மேலே சொன்ன உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம்..சாப்பிடாத குழந்தைக்கு இன்னும் 6 வேளையா கூட கொடுக்கலாம்..நம்மை போலவே கோடைக்கு குழந்தைக்கும் தண்ணீர் அதிகம் குடிக்க கொடுப்பது நல்லது.மோர் கலந்த உணவு அதிகம் கொடுத்து தயிறை அறவே தவிர்க்கலாம்.