குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் - தளிகா

குழந்தை உணவு

இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.

என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் "கொஞ்சமாக கொடுங்கள்" என்பார்கள், சிலர் "எல்லாமே கொடுக்கலாம்" என்பார்கள். 'கொஞ்சமாக' என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

என்ன உணவு கொடுக்கலாம்?

குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.

குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.

பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.

திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.

குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.

வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.

பலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.

முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்

வாழைப்பழம் - ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.

ஆப்பிள் - ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.

அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.
அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.

பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.

சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.

வேக வைத்து மசித்த காய்கறிகள்:

பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.

இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.

ஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.

எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.

ஒவ்வாமை

குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.

குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.

உணவு சாப்பிட மறுத்தால்

சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.

சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.

நன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.

குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.

அடுத்த பாகத்தில் சந்திக்கலாம்.

Comments

i have a daughter,she have always vomiting.they said do'nt worry it stops after 6 month.now 6 month started.she looks 4 month baby. but she is always normal activities.how to i manage it.

குழந்தை பால் குடித்ததும் தோளின் மீது சாய்த்துக் கொண்டு தட்டிக்கொடுங்கள்
குழந்தை ஏப்பம் விடும். அப்போது கொஞ்சம் பாலைக் கக்கும், அது இயல்பானது.
பாலைக் குடிக்கும் போது காற்றையும் சேர்த்துக் குழந்தை விழுங்கிவிடும்.
குழந்தை பாலுக்காக‌ நிறைய‌ நேரம் அழுதால் காற்றை நிறையக் குடித்து விடும.பிறகு பால் குடிக்கும்போது முன்னால் வயிற்றில் நிறைந்துள்ள‌ காற்று
வெளியே வருவதால் பாலைக் கக்கும். நீங்கள் தாய்ப்பால் தருவதானால்
உங்கள் உணவில் சுக்கு, பெருங்காயம், இஞ்சி இவற்றை சற்று கூடுதலாகச்
சேர்த்துக் கொள்ளவும்.
ஓமத்தை வறுத்து வெந்நீரில் போட்டு கொதிக்கவைத்துக் கொள்ளுங்கள்.
அந்தத் தண்ணீரை ஒரு நாளைக்கு மூன்று வேளை அரை தேக்கரண்டி அளவு
பாலாடையில் சற்று தேன் கலந்து புகட்டுங்கள். பிறகு எப்படி இருக்கிறது
என்று பாருங்கள். ஓமம் காரமானது. அதனால் தேன் சேர்க்கவும்.
ஓமம் எல்லாவிதமான‌ செரிமானக் கோளாறுகளையும் நீக்க‌ வல்லது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Dear Poongothai Kannammal.

Thanks for your great advice.

Henceforth we will be start the practice as per your advice.

Now my kid 6 Month old, the weight 5.30 Kgs. Is it correct weight?

At the time of birth weight 3.30 Kgs. My baby birth date 01.04.2015.

We are planning go to Guruvayur ( Kerala ) for Annaprasannam Next month 8th or 9th October 2015.

Do you have any idea about that?

I am waiting for your reply.

Once again thank you.

Regards,
Vadivu Senthil Kumar.

yaaravathu keralala irukikala naaga next month guruvayur (annaprasana for my 6 month old baby)plan panni irukom yaaravathu poi irunthalum atha pathi sollunga please.

என் குழந்தைக்கு 6 மாதம் நடந்து கொண்டுள்ளது என்ன உணவு கொடுக்கலாம். இப்போது பிஸ்கட் பாலில் குளைத்து த௫கிறேன்.வேற உணவு என்ன கொடுக்கலாம்?

வணக்கம்
எனக்கு திருமணம் ஆனதும் சென்னை க்கு தனியாக வந்துவிட்டோம்.சமயல் கூட சரியாக தெரியாது.உறவுகல். தூரம் இருக்க அருகிலும் யாரும் பலகமுமில்லை.3 மாத இடையில் consive ஆனென்.யெதும் தெரியாத போது அறுசுவை மூலம் நிறைய தெரிந்து கொண்டென்
இது மிகவும் பயன் உள்ள பகுதி அறுசுவை தொடர்ந்த அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி .அதில் இம்மா அம்மா குறிப்பு எனக்கு மிக உதவியது.இன்னும் தோழிகள் நிறைய குறிப்பு கல் கொடுத்து இருந்தது உதவியது
இப்போது எனக்கு அழகான பென் குழந்தை பிறந்து 65 நாள்கள் ஆனது.குழந்தைக்கு 4 நாட்கலாய் லூசு மோசன் போகுது hospital போய் வந்தாகிவிடது.சரி ஆகல.இரவு சரியான அழுகை.உதவுங்கல் தோழிகலே.

எதை நினைத்தும் கலங்க வேண்டாம்.உண்மையான பாசம் உடன் இருக்கும்..

வணக்கம்
எனக்கு திருமணம் ஆனதும் சென்னை க்கு தனியாக வந்துவிட்டோம்.சமயல் கூட சரியாக தெரியாது.உறவுகல். தூரம் இருக்க அருகிலும் யாரும் பலகமுமில்லை.3 மாத இடையில் consive ஆனென்.யெதும் தெரியாத போது அறுசுவை மூலம் நிறைய தெரிந்து கொண்டென்
இது மிகவும் பயன் உள்ள பகுதி அறுசுவை தொடர்ந்த அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி .அதில் இம்மா அம்மா குறிப்பு எனக்கு மிக உதவியது.இன்னும் தோழிகள் நிறைய குறிப்பு கல் கொடுத்து இருந்தது உதவியது
இப்போது எனக்கு அழகான பென் குழந்தை பிறந்து 65 நாள்கள் ஆனது.குழந்தைக்கு 4 நாட்கலாய் லூசு மோசன் போகுது hospital போய் வந்தாகிவிடது.சரி ஆகல.இரவு சரியான அழுகை.உதவுங்கல் தோழிகலே.

எதை நினைத்தும் கலங்க வேண்டாம்.உண்மையான பாசம் உடன் இருக்கும்..

//அதில் இம்மா அம்மா குறிப்பு எனக்கு மிக உதவியது.// படித்ததும் சந்தோஷமாக இருந்தாலும் கூடவே கொஞ்சம் கில்டியாகவும் இருந்துது. :-) நகைச்சுவையாக எழுதுவதாக நினைத்து யாரையாவது மனம் நோக வைத்துவிடுவேன். எத்தனை நினைத்தாலும் இந்தக் குறும்புக் குணத்தை மாற்ற முடியவில்லை. ;(

ஹொஸ்பிட்டலில் என்ன சொன்னார்கள்? என்ன கொடுக்கச் சொன்னார்கள்?

‍- இமா க்றிஸ்

வாங்க வந்து சுகந்திக்குப் பதில் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

‍- இமா க்றிஸ்

Woodward 's கொடுங்கப்பா.இல்லையென்றால் மாதுளை தோலை அரைத்து கொஞ்சம் சாறு குடுங்க .நின்று விடும்.போகப்போக குறைந்து தான் நிற்கும்.

அன்பு தோழி. தேவி

புதிய தாய்மார்களுக்கு அறுசுவை தான் ஒரு தாய்....

அன்பு தோழி. தேவி

ரொம்ப நன்றி இம்மா அம்மா மற்ற பதில் அளித்த தோழிகலுக்கும் நன்றி .darlolac ,2 வேலை. taxim o,-2 வேலை கொடுக்க சொன்னார் இப்போது சிறிது பரவாயில்லை அனால் இரவு முழுவதும் உரங்காமல் அழுது கொண்டே இருந்தால்.இப்போது அமைதியாக படுத்து இருக்கிறாள்.யெனகு தான் கன்னை கட்டுகிரது. கில்ட்டி ஆக நினைக்க வேண்டாம் அம்மா மற்றவர்கள் மீதான உரிமை பாசத்தின் வெளிப்பாடு அது.

எதை நினைத்தும் கலங்க வேண்டாம்.உண்மையான பாசம் உடன் இருக்கும்..

நன்றி தேவி Woodward கொடுக்க கூடாது Dr சொலிவிட்டார்.அதற்கு பதில் விட்டாசியம் 2 வேலை 5 சொட்டு கொடுக்க சொன்னார் கொடுக்கிறேன்.மாதுளை தோல் ஆ கொடுக்கிறேன் தேவி அதோடு night ஆனதும் 2 கால்களும் அடித்து அழுவால்.அப்போது எண்ணெய் ஆசனவாய்ல் வைதால் அமைதியா இருப்பா.பூச்சி கடிக்கும்மா? யென்ன செய்ய.உதவுங்கள்

எதை நினைத்தும் கலங்க வேண்டாம்.உண்மையான பாசம் உடன் இருக்கும்..

நீங்கள் கொடுக்கும் மருந்து தான் என் பையனுக்கு கொடுத்தேன் லேட்டாகும் குணமாக. ..வயிற்றில் வசம்பு கிழங்கை தடவுங்கள்.நெருப்பில் வசம்பு கிழங்கை சுட்டு கார்த்திகைச்சுட்டியில் உரசி உச்சித்தலை, ஒரு கை, ஒரு கால், வயிற்றில் தடவிவிடுங்கள் வயிறு வலியென்றால் சரியாகிவிடும். வுட்வட்ஸ் வேணாம்..வயிறு வலிக்கு சரியாகிவிடும். பூச்சி கடிப்பதற்கு டாக்டரிடம் மருந்து வாங்கி கொடுங்கள். எண்ணெய் வைத்தால் அழுகாமல் தூங்குவாங்க..

அன்பு தோழி. தேவி

தேவி வணக்கம்
நேற்று இரவும் என் பொன்னு தூங்கவில்லே.சுத்தமா மில்க் குடிக்கல அழுதுகிட்டே இருந்தா குட்டி தூக்கம் தான் நீங்கள் சொன்னது போல இன்னும் சரியாகல.நா பாக்குர Drஇப்ப லீவ் நாளை தான் காட்ட முடியும் அதுகு முன்னாள் நீங்கள் சொன்னத செய்து பாக்குரென்.உச்சி தலை ல எவ்வளவு தடவ? லேசா போதுமா

எதை நினைத்தும் கலங்க வேண்டாம்.உண்மையான பாசம் உடன் இருக்கும்..

லேசா தடவினால் போதும்ப்பா...பிள்ளைகள் வளர வளர ஒவ்வொன்று செய்யும் பயப்படாதே.எது பண்ணாலும் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். கை வைத்தியமும் செய்யலாம். .

காது மடலை தடவி பாருங்கள் காது வலியாக இருந்தால் தெரியும். வயிறு சூடாக இருந்தால் வயிறு வலி,

அன்பு தோழி. தேவி

புளிப்பு பிடிக்காவிட்டால் உதட்டை சுற்றி பருக்கள் தோன்றும் என்றால் புளிப்பு இருந்தால் அப்படி தோன்றுமா? Alathu epad enaku vilakam koora mudiyuma plz imma madam.

//புளிப்பு பிடிக்காவிட்டால் உதட்டை சுற்றி பருக்கள் தோன்றும்// எங்காவது நான் இப்படிச் சொல்லியிருந்தேனா! எதற்காக இந்தக் கேள்வியை என்னை நோக்கி வைத்திருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. தலை கிர்ர்ர்ர்.. :-) எங்கே சொன்னேன் என்று சொல்ல முடியுமா? இங்கே இதற்கு முன் உள்ள பக்கங்களிலுள்ள என் பதில்களில் நான் இப்படி எதுவும் சொல்லவில்லை. தேடிப் பார்த்துவிட்டேன். லிங்க் & பக்கம் கொடுங்கள். பார்த்துச் சொல்கிறேன்.

எனக்கு... பச்சை கீவி, ஆவகாடோ, றால், நண்டு போன்ற சில உணவுப் பொருட்கள் சாப்பிட்டால் உதட்டைச் சுற்றிலும் அப்படி வரும். பருக்கள் போல் தெரிந்தாலும் பருக்கள் அல்ல அவை. சற்று சிவந்து இருக்கும். இது அலர்ஜிக் ரியாக்க்ஷன். உடனே ஆன்டிஹிஸ்டமைன் எடுக்காவிட்டால், மெதுவே இடைவெளி நிரம்பி உதடு வீங்கும். விஷயம் பிடிபட்ட பின்னால் வீக்கம் வரும் அளவுக்கு விட்டதில்லை நான்.

//புளிப்பு பிடிக்காவிட்டால்// சுவை பிடிக்காத உணவுகளுக்கு அப்படி வராது. //புளிப்பு இருந்தால் அப்படி தோன்றுமா?/ கேள்வி விளங்கவேயில்லையே! வயிற்றுப் புளிப்பா பால் புளித்து இருப்பதா? எந்த வயது ஆட்களுக்கு! கேள்வியைக் ஒழுங்காகக் கேட்காவிட்டால் இனி பதில் சொல்ல மாட்டேன். :-) நான் தேவையில்லாத விஷயத்தைச் சொல்லப் போக, அது யாரையாவது வீணாக யோசிக்க வைக்கப் போகிறது. :-)

‍- இமா க்றிஸ்

தவறாக நினைக்க வேண்டாம். kulanthaiku unavu pakathil ipad koduthulathu, athan keten,நான் உங்களிடம் கேட்ட காரணம் தாங்கள் பல பகுதியில் அனைவருக்கும் பதில் சொல்லும் விதம். மற்றும் தஙகள் அனுபவம் அதனை காரணம் காட்டி மட்டுமே தஙகளிடம் கேட்டேன thavaru enral manipu ketu kolkiren. Imma madam. Manithu vidungal

:-) நான்தான் எங்கேயோ சொல்லியிருந்தேனோ என்று யோசித்தேன். தவறு ஒன்றும் இல்லை கண்ணா.

//பல பகுதியில் அனைவருக்கும் பதில் சொல்லும் விதம்.// அவ்வ்!! :-)

//தஙகள் அனுபவம்// ;)) அதை இதுவரை அறுசுவையில் நான் யாரோடும் முழுமையாகப் பகிர்ந்ததில்லை. :-) என் அனுபவங்கள் இன்றைய காலத்திற்கு ஒவ்வாது. நீங்கள் இருப்பது மருத்துவ வசதிகள் நிறைந்த அருமையான காலம். இந்தத் தலைமுறை... அதிஷ்டம் செய்தவர்கள். (ஆனால் சிந்திக்காமல், இணையத்தில் கண்டதையும் பகிர்ந்து, படித்து குழம்பிக் கொள்வதுதான் கவலையான விடயம்.) ;(

//thavaru enral manipu ketu kolkiren.// கர்ர்ர்... ;) தவறு ஒன்றுமே இல்லை. நான் கொஞ்சம் குழம்பிப் போய்ட்டேன், அவ்வளவுதான். யோசிக்காதீங்க நீங்க. :-)

நீங்கள் பெயர் போட்டுக் கேட்க, ஒரு வேளை இமா அந்தச் சமயம் லீவில் இருந்தால்!!அல்லது இமாவுக்குப் பதில் தெரியாமலிருந்தால்!! :-)
பெயர் சொல்லிக் கேட்காமல் கேள்விகளைப் பொதுவாக வைப்பது உங்களுக்கு லாபம். :-)

அந்த madam வேணாமே! :-)

‍- இமா க்றிஸ்

யாராவது விக்னேஷ் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்களேன். எனக்குத் தெரியவில்லை.

கேள்வி குழந்தை தொடர்பானது. //புளிப்பு பிடிக்காவிட்டால் உதட்டை சுற்றி பருக்கள் தோன்றும் என்றால் புளிப்பு இருந்தால் அப்படி தோன்றுமா?//

இப்போதே... நன்றி. :-)

‍- இமா க்றிஸ்

ஐ நம்மட தளி அருமையா சொல்லி வச்சிருக்கா .விக்னேஷ் புளி ஒத்து வராவிட்டால் மட்டுமே பருபோல சிவந்து வரும் .ஒவ்வாமை என்ற ஒன்று வந்து விட்டால் எந்த உணவுக்கு வரும் என்று சொல்லமுடியாது .இவ்வாறான பருக்கள் மூலம் கண்டறிந்து அந்த உணவை தவிர்க்க வேண்டும் .தவிர குழ ந்தைகளுக்கு சத்துதான் முக்கியம் புளிப்பாக கொடுக்க வேண்டும் என்றில்லை .எனக்கு விளங்கியதை வைத்து பதில் கூறியியாயிற்று .

Nanri

Hai friends
En paiyanuku 10 month running. Avanuku
Sweet potato Kudukalama?
Apdiyae vega vaithu Kudukalama? Or Vera ethum
Add Pananuma?

சிறிது உப்பு நீரில் அவித்து, தோலுரித்து மசித்துக் கொடுக்கலாம். குழந்தை வேண்டாமென்றால் விட்டுருங்க‌. சர்க்கரை, பால் சேர்த்து மசித்தாலும் இதன் சுவை குழந்தைகளுக்குப் பெரிதாகப் பிடிக்குமா என்பது சந்தேகம்.

‍- இமா க்றிஸ்

Thanks madam.

en babykku 4 month 20 nala loose motion . one daykku 7 time yellow , green colourla pora . doctor virus infection enru antibiotic thanthar. but ennum sariyakala. nattu marunthum koduthuchu sariyagala. 2 1/2 month pods vendiya oosiyum ethanala boda mudiyala . neenga ungaluku therintha medicine sollunga pls

இதை படித்து பாருங்கள்.. எப்போது என்ன கொடுக்கலாம் என தெளிவாக சொல்லியிருப்பாங்க..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

படித்து விட்டேன் அபி
ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கின்றது. தளிகா அக்கா சொன்னது போலவே என் குட்டிமா க்கு தரப்போகிரேன்.

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

hai na eppo tha intha arusuvai la join pana. yanaku marriage adi 4 years aguthu.one time baby ninuchu. but heart beet illanu doctor abotion pana solitanga.then 9 months agiduchu.doctor kita treatment yaduthunu irukom.yanaku irregular peroid. doctor karu muthai valara 3injection pothanga.aparam adu vedika 1 injection potanga. yanaku november10th peroid achu.epo nalaiku 10 varapothu.but yanaku romba stomach pain iruku.so yanaku bayama iruku. intha thadava yanaku kulanthai nikuma ? please yaravathu yanaku help panunga. unga yarukavathu teringa solunga pa plese. na unga advice ku kathunu iruka....