வாழைப்பூ இறால் பொரியல்

தேதி: May 14, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

வாழைப்பூ - ஒன்று
இறால் - 15
பச்சை மிளகாய் - 2
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சின்ன வெங்காயம் - 9
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரிசி களைந்த தண்ணீரில் போடவும். தண்ணீரில் இருந்து வாழைப்பூவை பிழிந்து எடுத்து உப்பு போட்டு நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீரில் போட்டு வைத்தால் கருக்காமல் இருக்கும். உப்பு போட்டு நன்கு பிசைவதனால் துவர்க்காமல் இருக்கும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு நன்கு பிரட்டி விடவும்.
பிறகு இறாலை போட்டு மேலே ஒரு சிட்டிகை உப்பு தூவி ஒரு நிமிடம் நன்கு பிரட்டி விடவும்.
அதில் வாழைப்பூவை போட்டு இடையில் 6 நிமிடம் நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.
6 நிமிடம் கழித்து தேங்காய் துருவலை மேலே தூவி ஒரு முறை கிளறி இறக்கவும்.
சுவையான வாழைப்பூ இறால் பொரியல் ரெடி. இந்த குறிப்பினை நமக்கு செய்முறை விளக்கப்படங்களுடன் வழங்கியவர் திருமதி. கமர் நிஷா அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ஹமர் நிசா! உங்கள் வாழைப்பூ இறால் பொரியல் பார்க்க நன்றாக இருக்கின்றது.
எங்கள் அம்மாவும் இப்படித்தான் செய்வார்.
எனக்கு இவ்விடம் வாழைப்பூ கிடைப்பது கஷ்டம்.கிடைக்கும் போது செய்து பார்க்கலாம் என்று இருக்கின்றேன்.
நல்ல ரேசப்பி தந்தமைக்கு நன்றி சகோதரி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அருமையான குறிப்பு
பார்க்கும் போதே செய்யணும் போல இருக்கு
இதுவரை இறாலோடு வாழைப்பூ சேர்த்ததே இல்லை
எனக்கு இங்கே வாழைப்பூ கிடைப்பது இல்லை
கண்டிப்பாக அம்மாவிடம் சொல்லி செய்து பார்க்க சொல்கிறேன்

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா