இனிப்பு அவல்

தேதி: May 17, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

அவல் - அரை கிலோ
அச்சு வெல்லம் - கால் கிலோ
நெய் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 4
தேங்காய் - ஒரு மூடி


 

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். வெல்லம், ஏலக்காயை பொடி செய்யவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைய விடவும்.
வெல்லம் கரைந்ததும் எடுத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய வெல்லத்தை ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் போதே பொடி செய்த ஏலக்காயை போடவும்.
இரண்டு நிமிடம் கொதித்ததும் அதில் அவலை போட்டு தீயை குறைவாக வைத்து அவல் வேகும் வரை கிளறி விடவும்.
கிளறாமல் விட்டால் அடிப்பிடித்து விடும் இடையில் ஒரு மேசைக்கரண்டி நெய்யை ஊற்றி பின்னர் கிளறவும்.
அவல் நன்கு வெந்ததும் அதில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி விடவும்.
பிறகு மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு அவல் தயார். திருமதி. சீதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த குறிப்பினை வழங்கியுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hello seetha madam, this sweet owl is very nice, iam feeling to eat now, it nice & so everybody like this, so today evening i will make for my daughter, & i will give reply.

regards
manobharathy.