கத்தரிக்காய் புளிப்பு கறி

தேதி: May 19, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

 

கத்தரிக்காய் - 2
பெரிய வெங்காயம் - 2
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் வற்றல் - 2
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
கல் உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
பெருங்காயத்துள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
சீனி - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

கத்தரிக்காய் புளிப்பு கறிக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி திக்காக கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய் துண்டுகளை போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
அதில் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை ஊற்றி உப்பு, சீனி, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
பின்னர் அதில் மஞ்சள்தூள் போட்டு நன்கு கிளறி விட்டு, தட்டை வைத்து மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து திறந்து ஒரு முறை கிளறிவிட்டு மீண்டும் மூடி வைக்கவும்.
எட்டு நிமிடம் கழித்து திறந்து ஒன்றுபோல் பிரட்டிவிட்டு கத்தரிக்காய் வெந்ததும் இறக்கி வைத்து விடவும்.
சுவையான இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த கத்தரிக்காய் புளிப்பு கறி தயார்.
இந்த செய்முறையை திருமதி. மங்கம்மா அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நேற்று உங்களின் கத்த்ரிக்காய் புளிப்பு கறி செய்தேன்,சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருந்து.நன்றி மேடம்

s நஸ்ரின்

மதிய உணவுக்கு கத்திரிக்காய் செய்தேன் வித்யாசமாகவும், சுவையாகவும் இருந்தது.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

இன்னைக்கு லஞ்ச்சுக்கு உங்கள் கத்றிக்காய் புளிகறி செய்தேன் நள்ளா இருந்தது நன்றி.