மூவர்ண நட்ஸ் கடல்பாசி

தேதி: May 20, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (10 votes)

 

கடல் பாசி - 15 கிராம்
சர்க்கரை - அரை டம்ளர்
பாதாம் பிளேக்ஸ் - ஆறு தேக்கரண்டி
நன்னாரி சிரப் - ஒரு குழிக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் - இரண்டு துளி
பாதாம் எசன்ஸ் - இரண்டு துளி
தண்ணீர் - 3 3/4 டம்ளர்


 

கடல்பாசி செய்வதற்கு மேற்சொன்ன தேவையானப் பொருட்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 3 3/4 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கடல்பாசியை உதிர்த்து போட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அடுப்பில் வைத்து கடல்பாசி கரையும் வரை காய்ச்சவும்.
அதிலுள்ள தண்ணீர் முக்கால் டம்ளர் அளவாக வற்றியதும், காய்ச்சி வைத்திருக்கும் கடல்பாசியை மூன்று பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். அவை ஒவ்வொன்றிலும் தனித்தனியாக நன்னாரி, ரோஸ், மற்றும் பாதாம் எசன்ஸ்களை சேர்க்கவும்.
பிறகு பாதாம் பிளேக்ஸ்களை இரண்டு இரண்டு கரண்டி அளவு எடுத்து ஒவ்வொரு பாத்திரத்திலும் தூவவும். பாத்திரத்தை வெளியிலேயே வைத்திருந்து ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
நன்கு குளிர்ந்ததும் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
சுவையான மூவர்ண நட்ஸ் கடல்பாசி தயார். அறுசுவையில் 600க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலீலா அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

இது இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலங்களில் மாலை நோன்பு திறக்கும் போது செய்வது. உடலுக்கு மிகவும் குளிர்ச்சி, கொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம். வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும்.
எசன்ஸ்கள் ஊரிலிருந்து வாங்கி வந்தது, பிஸ்தா எசன்ஸ் வாங்கி சேர்த்து செய்தால் பச்சை நிறத்தில் இன்னும் கலர்ஃபுல்லாக இருக்கும். இதை பால் சேர்த்தும் செய்யலாம், கடல்பாசி ஒரு சைவ உணவு. இதை இன்னும் இளநீர், கஸ்டர்,ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். பாலுதாவிலும் சேர்த்தால் நன்றாக இருக்கும். தேவைபட்டால் மற்ற நட்ஸ் வகைகளையும் சேர்த்து கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு பார்க்க..

நானும் ஆசியாவின் குறிப்பில் உள்ளபடி ஒரு முறை செய்து பார்த்தேன்......அது கெட்டியாகவே இல்லை...என்ன தவறு என்று திரியவில்லை...அதன்பிறகு ஆசியாவிடம் அது பற்றி கேட்க சந்தர்ப்பம் வரவில்லை....அப்போது வாங்கிய மீதி பேக் அப்படியே இருக்கிறது...இது பார்த்தவுடன் மறுபடியும் முயற்சிக்க ஆசையாக உள்ளது...
ஆனால் நான் வாங்கியுள்ளது பச்சை வண்ண நிறத்தில் உள்ள அகர் அகர்...அதில் செய்யலாம்தானே..சுவை மாறுமா? என்று கொஞ்சம் சொல்லுங்கள்..
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி இது வரை பச்சை வண்ணத்தில் நான் பார்த்ததில்லை,
வெள்ளையாக நூல் போல் இருக்கும், அதை தான் மொத்தமா வாங்கி தினம் இப்படி செய்வோம்.

கெட்டியாக வரவில்லை என்றால் தண்ணீர் அதிகமாக ஊற்றி இருப்பீங்க.
தண்ணீர் அதிகமா போனா எவ்வள்வு நேரம் காய்ச்சினாலும் கெட்டியாகாது.

இது பார்த்ததும் செய்ய ஆசையாக இருக்கும் , ஆனால் சாப்பிட்டதும் சாப்பிட்டு கொண்டே இருக்கனும் போல் இருக்கும்.

Jaleelakamal

நான் luluvil தான் இந்த கடல்பாசி,Agar,Agar Gulaman Bar(Mother's best) வாங்கினேன்.

15 கிராமுக்கு 3 3/4 நீர் என்றால் எவ்வளவு மிலி என்று சொல்லமுடியுமா?

தம்ளரின் அளவை பொறுத்து மாறுபடும் என்பதால்தான் கேட்கிறேன்.

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

hi
i saw ur kadal pasi recipe... its very nice and colourful to see.
and very happy to learn its a veg recipe.
pls tell me the english name for this kadal pasi.
and where can i get it? in departmental stores...
am living in qatar. can i get it here

Its called as Agar Agar... Its available in Middle east countries even now a days we can get in India too.
It may be Green, Red, White colour... you can also use coconut Milk with this. It will taste very nice...

நான் பச்சைவண்ண அகர் அகர்,தேங்காய்ப்பாலோடுதான் பயன்படுத்தினேன் சுவையும் சரிவரவில்லை...
லாவண்யா கத்தாரில்..அகர் அகர் LULU,FFC யில்கிடைக்கிறது
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பச்சை வண்ணத்தில் நான் பார்த்ததில்லை, வெள்ளையாக காய்ச்சி விட்டு பச்சை வண்ணம் அல்லது தேவையான வண்ணம் கலந்து கொள்ளலாம்.

கடல்பாசி, அகர் அகர், சைனா கிராஸ்.

இது தேங்காய் பால் சேர்த்து செய்யலாம் ஆனால் பிளைனாக கட்டியாகசர்க்கரை சேர்ர்த்து காய்ச்சி விட்டு அது செட் ஆகும் போது தேங்காய் பால் சேர்க்கனும்.
ஜலீலா

Jaleelakamal

hi
today i tried this kadal pasi. the taste came out good. i did with strawberry essence. but it came out little hard. will it be soft or hard. pls reply mam . i took out from the stove after it became 3/4 tumbler.
should i take it out soon afer the agaragar melts?

லாவன்யா எந்த வித எஸன்ஸ் சேர்த்தாலும் நல்ல வரும்,பைனப்பிள் எசன்ஸ் சேர்த்து செய்யுங்கள் இன்னும் மனமும், ருசியும் அபாரமாக இருக்கும். இதுகொஞ்சம் ஹார்டாக இருந்தால் நல்ல இருக்கும்.
கடல்பாசி மெல்ட் ஆனதும் இரக்கிடலாம்.

Jaleelakamal

ஹாய் எனக்கு பாலூதா எப்படி செய்ரதுனு யரவது தயவுசெய்து சொல்ல முடியுமா

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

வீட்டிலே ஒரு ஹோட்டலா ? ஜலீலா மேடம். எப்படி இப்படி இத்தனை 612 குறிப்பு, great
சமையலுடன் தையல் கலையும் கற்று தரலாமே

shagila

பர்வீன் பாலுதா என் குறிப்பில் போட்டுள்ளேன் பார்த்து கொள்ளுங்கள்.

என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

அன்பு ஷாலி, நன்றாக இருக்கிறேன் விசாரித்தமைக்கு மிக்க நன்றி.

தையல் நேரமின்மையால் போட முடியல.

என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

ஹலோ ஜலீலா மேடம் எப்படி இருக்கீங்க? 613 குறிப்புகள் உங்களோட ஓவ்வொரு குறிப்பும் அருமை. வெஜ் & நான் வெஜ். நோன்பு நேரமா இருக்கறத்தனால பிஸியா இருக்கீங்களா? நோன்புக்கு இன்னும் புது புது ரெசிப்பியா செய்வீங்க இல்ல. இப்போதான் நித்யாவுக்கு உங்களோட மைசூர்தால் குறிப்பு ஒன்று எடுத்து கொடுத்துதேன். இந்த வருடம் நோன்பு ஸ்பெஷலா என்ன என்ன ரெசிப்பி செய்ய போறீங்க மேடம்.

http://www.arusuvai.com/tamil/node/5426

பர்வீன் இந்த லிங்கில் பாலுதா,இருக்கு,.

Jaleelakamal

அன்பு வினோஜா, நல்ல இருக்கேன். நேரமில்லாததால் எந்த குறிப்பும் போட முடியல, ஏற்கனவே நோன்பு காலத்தில் தான் ரெசிபி போட ஆரம்பித்தேன் , நான் செய்வது அனைத்தும் இதில் இருக்கும். புது ரெசிபி போட நேரமில்லை,

என்னை விசாரித்தற்கும், மசூர் தால் ரெசிபி எடுத்து கொடுத்ததற்கும் நன்றி.

என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

pachi vanna kadal paasi than naanum vaithullen. adhu nalla irukum, but naan quandity adhigamaga eduka vendum. Rose syrup serthum kadalpasi seyalaam. meendum try pannunga nalla varum. All the best.

Parkkavae kalarfulla irukku. Ungal punniyaththil nangal thinamum nall rusiyaa sappiduroom. Romba nandri.

Try and try again until you reach the target.

Anitha

பார்க்கவே உங்க குறிப்பு ரொம்ப அழகா சாப்பிடனும்போல தோணுது.. கடற்பாசி கிடைத்தால் கண்டிப்பா செய்து பார்த்துவிடுகிறேன்... நான் jelly readymade mix வாங்கி தான் செய்வேன். கடற்பாசி என்று தனியாக கிடைப்பது தெரியாது... என்பையனுக்கு பிடித்த உணவு.. மிக்க நன்றி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வணக்கம்.
நான் உங்கள் புதிய தோழி. நலமா?
எனக்கு உங்களுடன் பேச ரொம்ப நாளாக ஆசை

அக்கா உங்களோட சமையல் குறிப்புகள் எல்லாமே ரொம்ப நன்றாக உள்ளது. நான் சாம்பர் பொடி, இட்டிலிபொடி, சென்னை சிக்கன் பிரியாணிசெய்தேன் மிகவும் நன்றாக உள்ளது. எங்க வீட்டில் இப்ப எல்லாம் உங்க சமையல் குறிப்பில் பார்த்து செய்கிறேன் எல்லாம் நன்றாக உள்ளது.
உங்களுக்கு நன்றி. உங்களிடம் நான் நட்பு வைத்துகொள்ள ஆசைபடுகிறேன். நீங்கள் தாளிகா, எலு எல்லாம் நட்புவைத்துள்ளீர்கள் அதேபோல் நானுமிருக்க ஆசைபடுகிறேன்.

வாழு இல்லை வாழவிடு

ஜலீலா அக்கா,
கடல் பாசி வாங்கி உங்க குறிப்பை செய்துட்டேன்.உங்க குறிப்பை பார்த்ததுல இருந்து,நானும் ஒரு வருஷமா கடல் பாசியை தேடி,கண்டு பிடிச்சு,இப்ப தான் வாங்கி செய்து சாப்பிட்டேன்.ரோஸ்மில்க் சிரப் சேர்த்து செய்தேன்.எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.குறிப்புக்கு நன்றி.

மிக்க நன்றி adhirama

செய்து பார்த்தீங்களா?என் குறிப்புகளை செய்து பார்பப்து ரொம்ப சந்தோஷ்ம், மறக்கமால் வந்து கருத்திட்டதற்கும் மிக நன்றி

பாத்திமா நன்றி

ஜலீலா

Jaleelakamal

ராதா ஹரி செய்து ஜெல்லிவேறு இது வேறு செய்து பார்த்து விட்டு சொல்லுஙக்ள்

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

ஜலீலா

Jaleelakamal

லதா வெங்டேஷ்வரன்
-- , மன்றத்தில் வர நேரம் கிடைககமாட்டுங்கிறது, இங்கு என் குறிப்பின் கீழ் பதிவு போட்டு வையுங்கள் முடிந்த போது வந்து பார்க்கிறேன் .

தளிகா, மர்லி, ராஹு, ஜேமாமி, அதிரா எல்லாம் பேசினோம் ஆனால் இப்ப யாரும் வருவதில்லை, அவரவர் பிசியாகி விட்டார்கள்.

ஜலீலா

Jaleelakamal

சுமி செஷியன் என் குறிப்புகல் பல செய்து பார்த்து இருக்கீங்க
ரொம்ப சந்தோஷம்.
மறக்காம எல்ல்லாத்துக்கும் கருத்து தெரிவியுங்கள், எனக்கும் பேச ரொம்ப ஆசை தான் நேரம் கிடைக்க வில்லை.

ஜலீலா

Jaleelakamal

கண்ணாடி மாதிரி பளபளனு பாக்கவே சூப்பர்.. கலரபத்தி கேக்கவா வேணும். அசத்துங்க ஜலீலாக்கா

KEEP SMILING ALWAYS :-)

jaleela nanum dubailathan ullen puthu tholi nan neenga engayirukinga ungaloda dish ellame super