குஸ்கா

தேதி: May 20, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (20 votes)

 

பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
வெங்காயம் - ஒரு கைப்பிடி
பூண்டு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 அல்லது 3 காரத்திற்கேற்ப
புதினா - 10 இலைகள் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
தக்காளி - ஒரு சின்ன பழம்
கெட்டியான தயிர் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை - அரை பழம் (சிறியது)
நெய் - ஒரு பெரிய ஸ்பூன் அளவு
எண்ணெய் - ஒரு பெரிய ஸ்பூன் அளவு
உப்பு - தேவையான அளவு
பாசுமதி அரிசி - அரை கிலோ அல்லது 2 கப்
தண்ணீர் - ஒரு கப் அரிசிக்கு 1 3 /4 கப் தண்ணீர் (இங்கே கொடுத்துள்ள அளவுக்கு 3 1 /2 கப் தண்ணீர் சேர்க்கவும்)


 

வெங்காயத்தை மெல்லியதாக நீளமாக நறுக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அரிசியை தண்ணீரில் களைந்து ஊற வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு சூடேறியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து லேசான பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவும். பிறகு பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி இலைகள் சேர்த்து ஒரு முறை வதக்கிய பின் நறுக்கின தக்காளி மற்றும் தயிர் சேர்த்து கிளறவும். தக்காளியை மசிய வதக்கக் கூடாது.
வதக்கிய பொருட்களிலிருந்து எண்ணெய் பிரிய தொடங்கியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு எலுமிச்சைச்சாறு, உப்பு மற்றும் ஊற வைத்த அரிசியை சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது மூடி வைத்தால் சீக்கிரம் தண்ணீர் வற்றி விடும்.
கரண்டியால் கிளறும் போது தண்ணீர் அதிகம் இல்லாமல் குறைவாக இருந்தால் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
பிறகு அந்த பாத்திரத்தின் மேல் அலுமினியம் பாயில் அல்லது நியூஸ் பேப்பரை வைத்து மேலே பாத்திரத்துக்கு தகுந்தாற்போல் தட்டு வைக்கவும். அதன் மேல் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கவும்
5 நிமிடம் கழித்து கவனமாக அலுமினியம் பாயிலை எடுத்து சாதத்தை அடியிலிருந்து கிளறாமல் மேலாக கிளறி, முன்பு மூடி வைத்தது போல் வைத்து 5 நிமிடம் தம்மில் விடவும். பிறகு மீண்டும் கவனமாக அலுமினியம் பாயிலை எடுத்து சாதத்தை அடியிலிருந்து கிளறாமல் மேலாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான குஸ்கா ரெடி. குஸ்கா கொஞ்சம் மைல்டாக இருப்பதால் தாளிச்சா, ஏதாவது ஒரு கிரேவி அல்லது மட்டன் அல்லது சிக்கன் குருமாவுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும். வேண்டுமானால் முந்திரியை நெய்யில் வறுத்து இறுதியில் சேர்க்கலாம். நெய் இன்னும் அதிகமாக விரும்புவோர் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். அறுசுவை நேயர்களுக்காக திருமதி. ரிஸ்வானா ஷானுகான் அவர்கள் இந்த குறிப்பினை வழங்கியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான குறிப்பு...திருச்சி விடுதியில் தங்கி படித்தபோது அங்கு சாப்பிட்டது..ஒரு 15 வருடங்களுக்கு முன்பு அதன் பிறகு சாப்பிட்டதில்லை.....
குருமாவுடன் குஸ்கா கலக்கல் காம்பினேஷன் ...சூப்பரா இருக்குமில்ல...இதை பார்த்தவுடன்...மலரும் நினைவுகள் வந்துவிட்டது..நானும் செய்து பார்த்து சொல்கிறேன்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

குஸ்கா நான் இது மாதிரி இதுவரை செய்ததில்லை.
செய்வது மிகவும் சுலபம் போல் தெரிகின்றது. செய்து பார்க்க வேண்டியதுதான்.
நல்ல ரேசப்பி தந்த சகோதரிக்கு நன்றி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

hi இளவரசி நீங்கள் திருச்சியில் படித்தீர்களா?எங்கு படித்தீர்களென்று தெரிந்துக்கொள்ளலாமா. நானும் திருச்சிதான்.செய்து பாருங்கள் இளவரசி.basmati riceஐ விட சீரகசம்பா அரிசியில் செய்தால் இன்னும் சூப்பரா இருக்கும்.இங்கு(dubai) கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

hi yogarani
idu konjam easy and taste differentaa irukkum,try seyyungkal

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் ரிஜ்வானா நல்லா இருக்கிங்கலா.....ரொம்ப நாள் ஆகிடுசு உங்க கிட்ட பேசி.....கராமா ல ஹோட்டல் சரவணா பக்கமா வந்நிங்கனா ஒரு left கட் வரும் அதுல திரும்புன உடனே தழிழ் சந்தை கடை இருக்கு அங்கு சீரகசம்பா கிடைக்கும் நான் வாங்கிருக்கேன்...

ஹாய் ஷமிலா எப்படி இருக்கிங்க,எங்கே போனீங்கே ரொம்ப நாளா அறுசுவை பக்கமே காணோம்.மகன் நலமா,தமிழ் சந்தையில் கேட்டுவிட்டேன் அங்கே இப்போ stock இல்லை.சாரிபா தாமதமாக பதில் அனுப்புவதற்கு

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

hi
last sunday cook panninen. Really very super. thanks.
suven
japan
சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன். நீ மனிதன்

hi suven ரொம்ப சந்தோஷமாயிருக்கு செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் அனுப்பியமைக்கு.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

i love arusuvai
becz i am living alone
it's giving me more tips to cook
thanks arusuvai

Absolutely correct my dear risvana when i am in hostel every 2 days cushca
Good to remember via arusuvai

very nice

hi..
today i made ur kushka..it came out awesome..keep on giving new recipies...thank u..

everyone is the sculpture of his own lyf!!