சுலப முறுக்கு சமையல் குறிப்பு - படங்களுடன் - 15028 | அறுசுவை


சுலப முறுக்கு

வழங்கியவர் : Indra.S.Pillai
தேதி : வெள்ளி, 21/05/2010 - 13:45
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4.333335
33 votes
Your rating: None

 

  • உளுந்து - ஒரு கப்
  • அரிசி மாவு - 3 - 3 1/2 கப்
  • எள் - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணெய் - பொரித்தெடுக்க

 

முறுக்கு செய்வதற்கு மேற்சொன்ன பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உளுந்தை நன்றாக கழுவி ஒன்றுக்கு மூன்று கப் தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (உளுந்து : தண்ணீர் = 1:3). வேக வைத்த உளுந்தை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் உளுந்து நன்றாக மசிந்துவிடும்.

அரைத்த உளுந்து மாவுடன், அரிசி மாவு, எள், சீரகம், வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

பிறகு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். இதில் அரிசி மாவு 3 முதல் 3 1/2 கப் அளவு தேவைப்படும்.

முறுக்கு அச்சில் பிசைந்த மாவை போட்டு முறுக்குக்காக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் முறுக்கு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்த முறுக்கை போட்டு இருப்புறமும் வேக விட்டு எடுக்கவும்.

எளிதில் செய்துவிடக்கூடிய சுலப முறுக்கு ரெடி. இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. இந்திரா அவர்கள்.இந்திரா

ஹாய் இந்திரா எப்படியிருக்கிங்க?.உங்களின் முறுக்கு குறிப்பு பார்க்கவே நல்லாஇருக்கு.என் கணவருக்கு இது ரெம்ப பிடிக்கும்.இதுக்கு புட்டு பண்ணூம்(ரெடிமேட்)அரிசிமாவு பன்படுத்தலாமா. இந்த ச்ந்தேகங்கள்தான் .pls தப்பாக நினைக்க வேண்டாம்.

ஹாய் இந்திரா!

ஹாய் இந்திரா! முறுக்கு படம் நன்றாக இருக்கின்றது.வாழ்த்துக்கள். மற்றும் உங்களிடம் ஒரு கேள்வி, உளுத்தம் பருப்பை அவித்து அரைக்கும் போது,
நன்றாக அரைக்க வேண்டாம் என்று போட்டுள்ளீர்கள். சொர, சொர என்றிருந்தால் முறுக்கு நன்றாக வருமா?
அல்லது உளுத்தம் பருப்பை நன்றாக அரைக்க வேண்டுமா? pleas பதில் தாருங்கள்.சிரமத்துக்கு மன்னிக்கணும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

முறுக்கு

இந்திரா அரிசி மாவை வருக்கவேண்டாமா நெய் வெண்ணய் சேர்க்கலாமா,சொல்லுங்கள்

life is short make it sweet.

very nice recipe .. one doubt

very nice recipe .. one doubt pls.. have to soak the urad dal and boil? or wash and boil ?

டியர் எரிக், சவுதியில்

டியர் எரிக்,
சவுதியில் இந்தியன் பொருட்கள் விற்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் சாதரணமாக பச்சரிசி மாவு வைத்திருப்பார்கள். அதை உபயோகப் படுத்தலாம். அல்லது இடியாப்ப மாவு உபயோகப் படுத்தலாம். நான் ஊரிலிருந்து சாதரண பச்சரிசியை மாவாக திரித்து கொண்டு வருவேன். அதை தான் உபயோகப் படுத்தியுள்ளேன்.
டியர் யோகராணி,
உளுந்து ஒரு சுற்று சுற்றினால் நன்றாக அரைந்துவிடும் என்று கூறியுள்ளேன். ஏற்கனவே உளுந்து வெந்திருப்பதால் சீக்கிரமாக மையாக அரைந்துவிடும்.
டியர் கீதா,
வெண்ணெய் உபயோகித்தால் அதன் மணம் முறுக்கு சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.தனி பச்சரிசி மாவை உபயோகித்தால் போதும். வறுக்கவேண்டாம்.
டியர் நின்சுபாப்பு,
உளுந்தை ஊற வைக்கவேண்டிய அவசியமில்லை. கழுவி உடனடியாக அவித்து விடலாம்.

உங்களுடைய சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சியே.எந்த சிரமமும் இல்லை. ஒரு சின்ன கப்புக்கு செய்துபாருங்கள்.

Save the Energy for the future generation

kavitha

நான் இந்த முறுக்கை ட்ரை செய்தேன்
மிகவும் நன்றாக இருக்கிறது
நன்றி இந்திரா மேடம்
நிறைய குறிப்புகளை தாங்க

என்றும் அன்புடன்,
கவிதா

டியர் கவிதா, முறுக்கு

டியர் கவிதா,
முறுக்கு செய்துப் பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. எனக்கு தெரிந்ததை நிச்சயமாக உங்களுடன் பகிர்ந்துக் கொள்வேன்.

Save the Energy for the future generation

இந்திரா

நல்ல சுலபமான குறிப்பு கொடுத்திருக்கீங்க...பாராட்டுக்கள்

நான் இன்னும் சுலபமாக செய்ய 4 பங்கு நிரப்புரா இடியாப்பமாவுடன்
ஒரு பங்குரெடிமேட் மாஷ் டால் சேர்த்து இன்சடன்டாக செய்வேன்...

அதுவும் சுவையாகவும் சுலபமாகவும் இருக்கும்..நீங்க முயற்சி

பண்ணிருக்கீங்களா?
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இந்திரா

உங்கள் முறுக்கு செய்முறை ஈசியாக இருக்கு,நிச்சயம் செய்து பார்க்கணும்.நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

indraa

இந்திரா தோழிக்கு.....முறுக்கு மிகவும் அருமை...நான் இடியப்ப மாவு பயன் படுதுனேன்....நன்றி இது போல் சுலபமாக சமையல் வகைகலை தருமாரு தால்மையுடன் கேகுரேன்