மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

இப்போது நாம மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

வீட்டுல பெரியவங்க எதுக்கெடுத்தாலும் அத பண்ணாத இத பண்ணாதனு சொல்லுவாங்க.. ஆனா அதுக்கு உண்மையாலுமே அறிவியல் ரீதியா காரணம் இருக்கும். நம்ம மக்கள் கேக்கமாட்டாங்கனு அதுக்கு ஒரு கதை கட்டி விட்டுருப்பாங்க. அத பத்தி தான் இப்போ பேசப் போறோம்.

நெலவு மேல கால வெக்காத ( எங்க அம்மா அடிக்கடி சொல்றது, நான் அடிக்கடி செய்றது ;-) ):

அந்த காலத்து வீடுகளை பாத்தீங்கனா நுழைவாசல் ரொம்ப சின்னதா இருக்கும். அப்போ நெலவுலே கால வெச்சு உள்ளே போனா மண்ட டமால்னு இடிக்கும். நம்ம சொன்னா கேக்ற ஆளா? சோ... நெலவு வெக்கும் போது கொஞ்சம் காசு போட்டு கட்டி லட்சுமி ஆக்கியாச்சு. இப்போ சாமி ஆச்சே. அதனால காலை பவ்யமா தாண்டி உள்ளே போகா ஆரம்பிச்சாங்க. அதுவே இப்போ வழக்கமாகி போச்சு. இப்போ எவ்வளவோ முன்னேறி சூப்பரா பெரிய வாசல் வெச்சாலும் நாம நெலவு தாண்டி பொறோம், நெலுவு மேல நிக்கறது இல்ல... இது சொன்னாலும் எங்க அம்மா கேக்றது இல்ல.. எல்லாம் செரி ஆனாலும்னு இழுக்கறாங்க ;-)

இனி நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்லலாமே .....

வாஸ்து...இப்போது உள்ள போலி வாஸ்து ஆசாமிகள் சொல்வது உண்மையில்லை. ஆனால் நம் முன்னோர்கள் வீடு கட்டுவதற்கான சில விதிமுறைகள் வைத்திருந்தார்கள்.
நம் ஊரில் காற்று வீசும் திசை, பூமியின் கீழுள்ள நீரோட்டத்தின் திசை இவற்றையெல்லாம் கொண்டே அக்னிமூலையில் சமையல் அறை வைக்க வேண்டும்(இந்த மூலையில்தான் காற்று அடுப்பை அணைக்காமல் இருக்கும்) கன்னிமூலையில் பூஜையறை வைக்கவேண்டும் என்பது போன்ற விதிகளை வகுத்தார்கள்.

ஆனால் இப்போது எல்லாத்தையும் வியாபாரமாக்கி உண்மையான வாஸ்துவையும் போலியாக்கி விட்டார்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

லக்ஷ்மி

நீங்கள் கூறியது சரிதான்...

கவி..

நல்ல விளக்கம்..இன்றுதான் இதற்கான காரணம் தெரிந்தது. அதை போல தான் அம்மை வந்தால் வேப்பிலை சொருகி வைப்பது.. அம்மனுக்கு உகந்த மரம் என இல்லை. கிருமி நாசினி என்பதால்..

ஜேசுதாசன்

அதே போல வாஸ்துவும், பூமியின் தன்மைக்கு ஏற்ப, வீட்டின் அமைப்பை கட்டுவதே..அதனால் வாஸ்து பார்த்து கட்டுவது அறிவியல் ரீதியாக நல்ல விஷயம் தான். ஆனால் அதில் ஏமாறாமல் இருப்பது முக்கியம்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நல்ல topic ரம்யா.. :) வாஸ்து மட்டும் இல்லை. ஜோதிடமும் அற்புதமான விஷயம் தான். அந்த காலத்தில் எந்த உபகரணங்களும் இல்லமல் வெறும் observation and analysis மூலமே அனைத்தயும் வகுத்தார்கள் நம் முன்னோர்கள். they were really genius.

//அதே போல வாஸ்துவும், பூமியின் தன்மைக்கு ஏற்ப, வீட்டின் அமைப்பை கட்டுவதே..அதனால் வாஸ்து பார்த்து கட்டுவது அறிவியல் ரீதியாக நல்ல விஷயம் தான். ஆனால் அதில் ஏமாறாமல் இருப்பது முக்கியம்.//

மிக்க நன்றி ரம்யா. மிகவும் பயனுள்ள தலைப்பு. வாழ்த்துக்கள்.

ஜேசுதாசன்.
-----------------------------------------------------------------
வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் நண்பர்கள் கூட நம் வாழ்க்கையை நல்ல வழியில் திசை திருப்பமுடியும்....

பூனைக் குறுக்கே வந்தா போக கூடாது என்பது,

வெளியே கிளம்பும் போது எங்கே போறீங்க என்று கேட்க கூடாது என்பது.. இப்படி

சொல்லிக் கொண்டே போகலாம்..

சகுனம் பார்ப்பது மூட நம்பிக்கையா?

ஜேசுதாசன்.
-----------------------------------------------------------------
வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் நண்பர்கள் கூட நம் வாழ்க்கையை நல்ல வழியில் திசை திருப்பமுடியும்....

மிருகங்களால்/பட்சினிகளால் பார்க்கப் படும் சகுனங்கள் ஒரு வகையான அறிகுறி தான். அனால் தற்போதைய வாழ்கைச் சூழலில் அதையே பர்த்துக் கொண்டு எதையும் செய்யாமலும் இருக்க முடியாது. ஒத்து வருபவர்கள் எடுத்துக் கொள்ளலாம். அந்த சகுனங்களைச் சரியாக புரிந்து கொள்ள ஒரு வகையான மன வலிமையும் வேண்டும்.

மேலும் அந்த சகுனங்கள் இயல்பாக நடக்க வேண்டும். நாம் ஆட்கள் ஒரு சிலரைப்போல் கிளியை சிறையில் அடைத்து தானியம் தருவதாக ஆசை காட்டி ஏமற்றினால் அவை பொய் தான் சொல்லும் :)


நேக்கு புள்ளையார் சுழி போல நெறய நம்பிக்கைகள் இருக்கு!!!!! அதனால என்ன பொருத்த வரைக்கும் பொறத்தியாருக்கு கெடுதல் பண்ணாத நம்பிக்கை எல்லாமே நல்லவைதான்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வீட்டு நிலப்படியில் நிற்கவோ, உக்காரவோ கூடாது......

அதற்கு பெரியவர்கள் நரசிம்மன் கதை சொல்லுவாங்க.(கதை தெரியும் ஆனால் பேர் தெரியாது. கதை தெரிஞ்சவங்க சொல்லுங்க).

உண்மையான காரணம்:

வீட்டின் மொத்த எடையும் தாங்கிக்கொள்வது வீட்டின் நிலைபடி தான். எடையின் காரணமாக ஒரு விசை பூமி நோக்கி வரும். அந்த விசையின் குருக்கே நாம் நிற்கும் போது தலைவலி,உடல் வலி, உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் தான் அங்கு உக்கார கூடாது என்பது அறிவியல் உண்மை.

இதெல்லாம் சொன்னா நம்மலாம் கேப்போமா? அதான் சாமி கதை சொல்லி சொல்லிற்காங்க!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா நானும் பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கேன். எனக்குத்தெரிந்ததை
சொல்ரேன். பிரகலாதான்னு ஒருகுழந்த, இரண்ய கசிபு என்கிற ராட்சசனுக்கு
மகனாகப்பிரந்தான். அந்தக்குழந்தை அவ அம்மா வயிற்றில் இருக்கும் போதே
நாரதர் சொன்ன மகா விஷ்ணுவின் கதைகளைக் கேட்டு வளர்ந்தார் என்பார்கள்.
அதனால அந்தக்குழந்தை பிறக்கும் போதே நாராயணன்மேல் பக்தியோடு இருந்தது
அவ அப்பாவோ நாராயணனை வெறுத்து ஒதுக்கும் ராட்சச ஜாதி. அங்கு அவனை
மட்டுமே அனைவரும் துதித்துக்கொண்டாடவேண்டும். வேறு யாரையுமே கொண்டாடக் கூடாது என்று சட்டமே போட்டிருந்தான்.குடி மக்கள் தமக்குப் படி
அளக்கும் ராஜாவின் வார்த்தைகளை மீற முடியுமா. அனால் பிரக லாதனோ
நான் நாராயான் பெயரைத்தவிர வேறு யார் பெயரையும் சொல்லமாட்டேன் என்று
பிடிவாதமாக இருந்தான். அதற்காக கோபபட்ட ராஜா அவனைச்சிறு பையன் என்று கூட பாராமல் அனேக கொடுமைகளை அவனுக்கு செய்து வந்தான். நீ நாராயணன்பெயரை சொல்லக்கூடாது, என் பெயரைத்தான் சொல்ல வேண்டும்.
அப்படி என்ன உன் நாராயணன், என்னைவிட பலசாலியா? திற்மை சாலியா?
அமாம் அப்பா அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று பிரகலாதன் பதில் அரசனை மிகவும் கோபபடுத்தியது. அப்படி உன் நாராயணன்
தூணிலும் துரும்பிலும் இருப்பவன் என்றால் எங்கே அவனை இதோ இந்த
தூணிலிருந்து வரச்சொல் பார்க்கலாம். என்று கர்ஜனை செய்தான்.
பிரகலாதன் கன்ணை மூடி நாராயணனை துதித்து அழைக்கவும் ஸ்ரீ விஷ்ணு
நரசிம்ம மூர்த்தியாக அங்குள்ளதூணிலிருந்து வெளிப்பட்டார்.
இரன்யாட்சன், பெரிய சிவ பக்தனாக இருந்தவன் தான். சிவனை நோக்கி தவம்
செய்து, எனக்கு சாகா வரம் வேண்டும் என்றான். சிவனோ பிற்ந்தவர்களுக்கு
இறப்பும் வந்துதான் தீரும், நீ வேரு எதாவது வரம் கேள் எனவும், சரி அப்போ
என்னுடைய மரணம் மனிதனாலும் இருக்கக்கூடாது, மிருகத்தாலும் கூடாது.
காலையிலும் கூடாது. இரவிலும் கூடாது என்று வெகு சாமர்த்தியமாக
வரங்களை வாங்கி இருந்தான்.சிவனும் அப்படியே என்று வரம் கொடுத்தார்.
நம்மை யாராலும் கொல்ல முடியாது என்கிர ஆணவத்தால் அனைவரையும்
கொடுமைப்படுத்தி வந்தான்.(வீட்டுக்குள்ளும், வெளியிலும் கூட சாவு கூடாது)
அதனாலதான் விஷ்ணு பாதி சிம்ம உருவமாகவும், பாதி மனித உருவமாகவும்
அவதாரம் எடுத்ததாக புராணங்கள்சொல்கின்றன. சாய்ங்கால நேரத்தில் நிலைப்படியில் உக்காந்து ராட்சசனை மடியில் போட்டுக்கொண்டு அவனை
சம்காரம் செய்ததாக புராணம். அதனால வாசப்படிகலில் உக்காக்கூடாது என்று
சொல் வழக்கு வந்திருக்கலாம்.


நேக்கும் அப்படிதான் தோணறது!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்