மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

இப்போது நாம மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

வீட்டுல பெரியவங்க எதுக்கெடுத்தாலும் அத பண்ணாத இத பண்ணாதனு சொல்லுவாங்க.. ஆனா அதுக்கு உண்மையாலுமே அறிவியல் ரீதியா காரணம் இருக்கும். நம்ம மக்கள் கேக்கமாட்டாங்கனு அதுக்கு ஒரு கதை கட்டி விட்டுருப்பாங்க. அத பத்தி தான் இப்போ பேசப் போறோம்.

நெலவு மேல கால வெக்காத ( எங்க அம்மா அடிக்கடி சொல்றது, நான் அடிக்கடி செய்றது ;-) ):

அந்த காலத்து வீடுகளை பாத்தீங்கனா நுழைவாசல் ரொம்ப சின்னதா இருக்கும். அப்போ நெலவுலே கால வெச்சு உள்ளே போனா மண்ட டமால்னு இடிக்கும். நம்ம சொன்னா கேக்ற ஆளா? சோ... நெலவு வெக்கும் போது கொஞ்சம் காசு போட்டு கட்டி லட்சுமி ஆக்கியாச்சு. இப்போ சாமி ஆச்சே. அதனால காலை பவ்யமா தாண்டி உள்ளே போகா ஆரம்பிச்சாங்க. அதுவே இப்போ வழக்கமாகி போச்சு. இப்போ எவ்வளவோ முன்னேறி சூப்பரா பெரிய வாசல் வெச்சாலும் நாம நெலவு தாண்டி பொறோம், நெலுவு மேல நிக்கறது இல்ல... இது சொன்னாலும் எங்க அம்மா கேக்றது இல்ல.. எல்லாம் செரி ஆனாலும்னு இழுக்கறாங்க ;-)

இனி நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்லலாமே .....

ராசி கற்க்கள் என்று சொல்றாங்க்லே அது உண்மையா???

விக்கிரவங்களுக்கு நல்ல லாபத்தை அள்ளிக்கொடுக்கரதால
அதன் பேரு ராசிக்கற்களோ என்னமோ?

சூப்பர் கோமு

இதே கதை தான். எனக்கு பேர் சரியா ஞாபகம் இல்லாததால் சொல்ல தெரியல. நன்றி........

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சகுனம்..

சாதரணமாகவே விலங்கிற்கு சில அசாத்ய சக்திகள் இருக்கின்றன.பூமியுடன் அதிகமாக நெருங்கி இருப்பதால் அப்படி. அவைகளின் செவிக்கும், மண்ணிற்கும் தூரம் குறைவு... அதிக நேரம் தரையில் தலை வைத்து படுத்திருக்கும். எந்த ஒரு இயற்கை மாற்றம் ஏற்படும் முன்னர் பூமியில் சில மாறுதல்கள் உண்டாகும்.. அதை அதிக நேரம் பூமியில் கான்ட்டேக்ட் இருப்பதால் அவைகளால் அந்த அதிர்வை உணர முடிகிறது. அதைவிட ஊர்வனவற்றிற்கு இன்னும் அந்த உணர்வு அதிகம்.எப்படி குருடன், செவிடன் போன்றவர்களுக்கு என சில அனுமானங்கள் இருக்கிறதோ அப்படி.. அதனால் விலங்கிற்கு .இயற்கை பற்றிய அனுமானங்கள் அதிகம் இருக்கும்.. அதனால் பூனை குறுக்கே போனால் .. அந்த காரியம் தடைபடும் என மாற்றியுள்ளனர். அது அப்படி இல்லை.. மூடநம்பிக்கையிலேயே ஒரு மூடநம்பிக்கை.. பிரச்சனை வரக்கூடியது என பூனை யூகித்ததால் தான் அது குறுக்கே சென்று நம்மை போக வேண்டாம் எனக் கூறி நம் வீண் அலைச்சலை குறைக்கிறது என பூனை பற்றி நல்லவிதமாகவே நினைத்தனர். நம் மக்கள் அதை மாற்றி பூனை குறுக்கே செல்வதால் தான் காரியம் தடைபடுகிறது என்றே கூறிவிட்டனர் ;-)

மொத்ததில் எப்படியோ பூனை மீது பழி போடுவதே மூடநம்பிக்கை தான்.

எகிப்தியர்களுக்கு பூனை ஒரு கடவுளாவே இருந்தாலும், நம் மக்கள் க்ரைம், திகில் விஷயத்தில் பூனையை ஒரு நெகட்டிவ் ரோலாகவே காட்டிவிட்டனர்..

இது நான் கேட்டு அறிந்த ஒன்று.. இதற்கு வேறு காரணமும் இருக்கலாம்.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரீம்

என்னை பொறுத்தவரை ராசி கற்களும் சும்மா மூடநம்பிக்கை தான். ஒவ்வொரு ராசிக்கென கல்,நிறம், மலர், கடவுள், மிருகம், மரம் என எத்தனையோ உள்ளது.. கல் மட்டும் விலை உயர்ந்தது என்பதால் அதை மட்டும் பிடித்துக் கொண்டனர்.

ஏன் அந்த மரம், மலர் என ராசிப்படி கூறவேண்டியதுதானே.. அதெல்லாம் சீப்பாக கிடைக்கும் இல்லையா..அதான் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உணர்ந்தேன் உங்களால்..நன்றி

ஆண்கள் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போது பெண்கள் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு(தலைக்குக் குளித்து விட்டு துவட்டுதல்) நிற்கக் கூடதாம்? அப்படியா?.. ஏதவது அறிவுப்பூர்வமான விளக்கம் உண்டா இதற்கு?

சாந்தினி

நம்ம மக்கள் தலை விரித்துப் போட்டால் மூதேவி என்றும், தலை சீவி பூ வைத்து மங்களகரமா இருந்தா மகாலக்ஷ்மினும் சொல்லி வெச்சுட்டாங்க. அதனால் வந்தது தான் இது. இதெற்கென அறிவியல் காரணம் ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை எனத் தான் தோன்றுகிறது.

ஒருவர் வெளியே செல்லும் போது நல்லவிதமாக காரியத்தை முடித்து வீடு திரும்பவே அனைவரும் நினைப்போம். சைக்கலாஜிக்கலாக நல்ல ஒரு ப்ளஸ்ன்ட்டான முகத்தை பார்த்து போகிறவருக்கு ஒரு உற்சாகமும், ஃப்ரஷ்ஷும் இருக்கும்.முதல் காலை துவக்கமே ஒரு மனசுக்கு ஒரு ரிலாக்ஸேஷன் கொடுக்கும்.

அதனால் தான் அவ்வாறு கூறி வைத்தனர் ..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பொதுவாக மனசந்தோஷமும்,சங்கடமுமே காரணம். காலையில் நீ உன் சிரித்த முகத்தை கண்ணாடியில் பார்த்தால் என்ன செய்வாய்? நீயும் சிரிப்பாய்.....மாராக ஒரே ஒரு பரு இருந்தால் மனம் எவ்வளவு வருத்தப்படும்? அதுபோலத்தான் இந்தவிஷயம்.

என் பாட்டி சொல்வார்கள் நகம் கடிக்காதே, துரும்பு கிள்ளாதே, பெத்தவங்களுக்கு ஆகாது-னு அப்படினா என்ன?

மேலும் சில பதிவுகள்