மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

இப்போது நாம மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

வீட்டுல பெரியவங்க எதுக்கெடுத்தாலும் அத பண்ணாத இத பண்ணாதனு சொல்லுவாங்க.. ஆனா அதுக்கு உண்மையாலுமே அறிவியல் ரீதியா காரணம் இருக்கும். நம்ம மக்கள் கேக்கமாட்டாங்கனு அதுக்கு ஒரு கதை கட்டி விட்டுருப்பாங்க. அத பத்தி தான் இப்போ பேசப் போறோம்.

நெலவு மேல கால வெக்காத ( எங்க அம்மா அடிக்கடி சொல்றது, நான் அடிக்கடி செய்றது ;-) ):

அந்த காலத்து வீடுகளை பாத்தீங்கனா நுழைவாசல் ரொம்ப சின்னதா இருக்கும். அப்போ நெலவுலே கால வெச்சு உள்ளே போனா மண்ட டமால்னு இடிக்கும். நம்ம சொன்னா கேக்ற ஆளா? சோ... நெலவு வெக்கும் போது கொஞ்சம் காசு போட்டு கட்டி லட்சுமி ஆக்கியாச்சு. இப்போ சாமி ஆச்சே. அதனால காலை பவ்யமா தாண்டி உள்ளே போகா ஆரம்பிச்சாங்க. அதுவே இப்போ வழக்கமாகி போச்சு. இப்போ எவ்வளவோ முன்னேறி சூப்பரா பெரிய வாசல் வெச்சாலும் நாம நெலவு தாண்டி பொறோம், நெலுவு மேல நிக்கறது இல்ல... இது சொன்னாலும் எங்க அம்மா கேக்றது இல்ல.. எல்லாம் செரி ஆனாலும்னு இழுக்கறாங்க ;-)

இனி நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்லலாமே .....

பொதுவா தலைய விரிச்சுபோட்டு நிக்கறது, துக்கவீட்ல இப்படி பண்றதுனால வெளிய போகும்போது இப்படி நிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்காங்க.

அது ஆண்களுக்கு அவங்க மனவோட்டத்தை (அபசகுணமா நினைக்கிறதுனால)சில சமயம் பாதிக்கலாம். வெளியே கிளம்பும் போது தடுமாற்றம் வரலாம். முக்கியமான முடிவு எடுக்கும் போது நியாபகத்துக்கு வந்து குழப்பலாம்.

அறிவியல் பூர்வமா எனக்கு தெரியல. ஆனாலும் நீங்க கேட்டதுனால கொஞ்சம் யோசிச்சதை சொல்றேன்.

வெளியே கிளம்பும்போது நீண்ட முடியினால் துவட்டும் பொழுது அவங்க முஞ்சில முடி அடிக்க நேரலாம்.

இவங்க தலைல இருக்கிற பேன், பொடுகு எல்லாம் அவங்க தலைக்கு தாவலாம்.

வெளியே கிளம்பும்போது முஞ்சியில படறதுனால கண்ணு தெரியாம கீழ விழலாம்.

அவங்க தலைல முடி இல்லாம இருக்கும்போது நாம நம்ம தலைய காமிச்சு கிண்டல் பண்றதா நினைச்சு நம்ம மேல கோபப்படாலாம்.

இதெல்லாம் தவிர்க்கறதுக்கு இப்படி பண்ணாதீங்கனு நம்ம பாட்டி சொல்லியிருக்கலாம்.

இபோதைக்கு இவ்வளவுதான் இன்னும் யோசிச்சு சொல்றேன்.

Don't Worry Be Happy.

ரேணுகா

அய்யோ.. என்ன பாத்து இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டிங்க.. நான் ஒரு குத்துமதிப்பா அடிச்சு விட்டுட்டு இருக்கேன். ;)

நகம் கடிக்காதேன்றது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.. அலுக்கு வாய்க்குள் செல்லும்.. நோய்கள் வர வாய்ப்புள்ளது. துரும்பை கிள்ளாதேனு சொல்வாங்களா? நீங்க கிள்ளி கிள்ளி குப்பை போட்டுட்டே இருந்தா பாட்டி என்ன செய்வாங்கப் பாவம் . அதானால தான்.:)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஒரு கர்ப்பிணி இன்னொரு கர்ப்பிணி ஜ பார்க்க கூடாது என்று சொல்கிறார்களே அது ஏன்?

நகம் கடிக்கறது, துரும்பு கிள்றது கண்டிப்பா பெத்தவங்களுக்கு ஆகாது.

பின்ன என்ன நீங்க நகத்தைகடிச்சு, துரும்பு கிள்ளி அது வயித்துல போயி செப்டிக் ஆச்சுனா செலவு செஞ்சு நம்மளக் காப்பாத்தறது நம்ம பெத்தவங்க தானே. அதனாலதான் பாட்டி அக்கறையா சொல்லியிருப்பாங்க.

உங்களுக்கு ஆகாதுனா நீங்க கேக்க மாட்டீங்க. அம்மா, அப்பாக்கு ஒண்ணுன்னா கேட்டுக்குவோம் இல்ல. அந்த லாஜிக்குதான்.

தோழிஸ் வேற எதாவது காரணம் இருந்தா சொல்லுங்கபா.

Don't Worry Be Happy.

என்னப்பா இது , நீங்களே உக்காந்து யோசிச்சு பாருங்க. உங்களுக்கே புரியும்.

அவங்க ரெண்டுபேரும் கம்பேர் பண்ணிக்குவாங்க. அய்யோ நம்ம வயிரு இன்னும் சின்னதாவே இருக்கே! அவங்க நல்லா குண்டாயிருக்காங்களே!
அவங்களுக்கு நம்மல மாதிரி கால வீங்களையேனு குழம்புவோம் இல்லையா?

அதனால வேற எதாவது பிரச்சனை, சாப்பிடமுடியாம , தூங்கமுடியாம கஷ்டப்படுவோம். இதெல்லாம் தவிர்க்கறதுக்கு இப்படி சொல்லியிருப்பாங்க.

Don't Worry Be Happy.

நாகவள்ளி.

நீங்க சொல்றது சரிதான்.. நானும் கேள்வி பட்டிருக்கேன்.

ஒரு வேலை ரெண்டும் சும்மா இருக்காம உக்காந்து வயிறோட அளவை கம்பேர் பண்ணி பாத்து தேவை இல்லாதத பேசி குழம்பலாம்..

என்ன பேச போறாங்க மீறி மீறி, எனக்கும் வாந்தி, நீ நல்லா சாப்டுவியா? டெலிவரி நெனச்சா பயமா இருக்கு அது இதுனு கொஞ்ச நஞ்ச தையிரியமும் போயிடும்னு ரெண்டு அம்மணிகளை ஒட்டுக்கா மீட் பண்ண விட்றது இல்ல. ஒருத்தர் சொல்ல கேட்டு மற்றொருவர்க்கு இல்லாத பயம், அலர்ஜி கூட ஏற்பட வாய்ப்புள்ளது. ஏதும் இல்லாம பெரியவங்க சொல்லி வைக்க மாட்டாங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹேய் ஜெயலக்ஷ்மி

சேம் பின்ச்.. ;) என்ன மாதிரியே பதில் சொல்லி இருக்கீங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நேற்று என் right wrist இல் பல்லி விழந்தது.. அதற்கு என் பலன்.. யாரவது சொல்லுங்கப்பா... Plss.........

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

ஆமா இல்ல!!!! சரியா சொன்னிங்க பா:)

யசோதா

மூடநம்பிக்கை வேண்டாம்னு போயிட்டு இருக்க இழைல போய் இப்படி கேக்கறீங்களே ;)

அதெல்லாம் பாத்து குழம்பாதிங்க.. இருந்தாலும் உங்க ஆறுதலுக்கு இப்போ தான் பாத்தேன்.. நல்லதுனு தான் போட்டு இருக்கு..

பல்லி தான் பாவம் பலன் பாக்கனும்.. நீங்க கொன்னுட்டா ? ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்