மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

இப்போது நாம மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

வீட்டுல பெரியவங்க எதுக்கெடுத்தாலும் அத பண்ணாத இத பண்ணாதனு சொல்லுவாங்க.. ஆனா அதுக்கு உண்மையாலுமே அறிவியல் ரீதியா காரணம் இருக்கும். நம்ம மக்கள் கேக்கமாட்டாங்கனு அதுக்கு ஒரு கதை கட்டி விட்டுருப்பாங்க. அத பத்தி தான் இப்போ பேசப் போறோம்.

நெலவு மேல கால வெக்காத ( எங்க அம்மா அடிக்கடி சொல்றது, நான் அடிக்கடி செய்றது ;-) ):

அந்த காலத்து வீடுகளை பாத்தீங்கனா நுழைவாசல் ரொம்ப சின்னதா இருக்கும். அப்போ நெலவுலே கால வெச்சு உள்ளே போனா மண்ட டமால்னு இடிக்கும். நம்ம சொன்னா கேக்ற ஆளா? சோ... நெலவு வெக்கும் போது கொஞ்சம் காசு போட்டு கட்டி லட்சுமி ஆக்கியாச்சு. இப்போ சாமி ஆச்சே. அதனால காலை பவ்யமா தாண்டி உள்ளே போகா ஆரம்பிச்சாங்க. அதுவே இப்போ வழக்கமாகி போச்சு. இப்போ எவ்வளவோ முன்னேறி சூப்பரா பெரிய வாசல் வெச்சாலும் நாம நெலவு தாண்டி பொறோம், நெலுவு மேல நிக்கறது இல்ல... இது சொன்னாலும் எங்க அம்மா கேக்றது இல்ல.. எல்லாம் செரி ஆனாலும்னு இழுக்கறாங்க ;-)

இனி நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்லலாமே .....

ஏன் இப்படி உயரமா வைக்கராங்க ? தெருவில் இருக்கும் தூசி, சிலநேரங்களில் ஊர்வன, மழைநீர் போன்ற்வற்றை தவிர்க்கவும்.

சில சமயம் நாம எல்லாத்தயும் மூடநம்பிக்கை என்ற பார்வையில பாக்க கூடாது. சிலதுக்கு நிஜமாவே காரணம் இருக்கலாம்.

கேலண்டர் பின்னாடி பல்லி விழுந்தற்கு பலன் போட்டிருப்பாங்க பாருங்க.

அந்த மாதிரி எதையும் நீங்க நினைகிறது இல்லனா,

விழுந்த பல்லிக்கு ஒண்ணும் ஆகலையேனு மனச தேத்தீக்குங்கபா!

Don't Worry Be Happy.

எங்க மாமா wife உம் என் அக்கா ரெண்டு பேரும் 7 மாசம் கர்பமா இருக்காங்க. எஙக மாமா wife எங்க அக்காவ பார்த்தா முகத்த திருப்பிட்டு போவாங்க. :)

மாறி மாறி கிள்ளுனதுல கை புண்ணாயிடுச்சு;-(

Don't Worry Be Happy.

நாகவள்ளி

அதுக்கு வேற எதாவது காரணம் இருக்க போகுது பாருங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆண்கள் வெளியே செல்லும்போது துடைப்பம்,அம்மிக்கல் இவற்றையும் பார்க்ககூடாதுன்னு சொல்வாங்க ஏன் தெறியுமா?

ரம்யா.... வேர காரணத்துக்கு இத காரணமா சொல்றாங்க. நாம என்ன செய்யரது. correcta கணடுபுடிச்சிட்டீங்க :) . நீங்க பெரிய ஆள் தான். :)

மூடநம்பிக்கை வேண்டாம்னு இருந்தாலும் சில சமயங்களில் இந்த மாதிரி பல்லி எல்லாம் விழுந்தால் பலன் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வம் அனைவருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

நகம் கடிக்கும் போது நகத்திலுள்ள அழுக்கு, கிருமிகள் வாயின் வழியாக உடலுக்குள் செல்லும். அதனால் நோய்கள் ஏற்படும். துரும்பை கிள்ளினாலும் நகத்தில் அழுக்கு சேரும் அந்த நகத்தை கடிக்கும் போது அது வயிற்றுக்குள் போகும்.
நமக்கு உடம்பு சரியில்லாம போச்சுன்னா நம்மோட சேர்ந்து நம்மைப் பெத்தவங்களுக்கும் சிரமம் அதான் அப்படி சொல்லியிருக்காங்க.

எல்லாத்தையும் இவ்வளவு விளக்கமா சொன்னா கேட்போமா? ஆனா அப்பா அம்மா மேல எல்லா பிள்ளைகளுக்கும் பாசம் இருக்கும். அதான் அவங்களுக்கு ஆகாதுன்னு சொன்னா பிள்ளைங்க அந்த செயலைச் செய்ய யோசிக்கும். நம்ப முன்னோர்கள் ரொம்ப விவரமானவங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆ....... வாங்க வாங்க................உங்களைதான் தேடிட்டு இருந்தேன். காலைல ராதாகூட மட்டும் பேசிட்டு எஸ் ஆனவருல்ல................ என் கவிதை எப்படி பதில் சொல்லுங்கள்.

மேலும் சில பதிவுகள்