மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

இப்போது நாம மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

வீட்டுல பெரியவங்க எதுக்கெடுத்தாலும் அத பண்ணாத இத பண்ணாதனு சொல்லுவாங்க.. ஆனா அதுக்கு உண்மையாலுமே அறிவியல் ரீதியா காரணம் இருக்கும். நம்ம மக்கள் கேக்கமாட்டாங்கனு அதுக்கு ஒரு கதை கட்டி விட்டுருப்பாங்க. அத பத்தி தான் இப்போ பேசப் போறோம்.

நெலவு மேல கால வெக்காத ( எங்க அம்மா அடிக்கடி சொல்றது, நான் அடிக்கடி செய்றது ;-) ):

அந்த காலத்து வீடுகளை பாத்தீங்கனா நுழைவாசல் ரொம்ப சின்னதா இருக்கும். அப்போ நெலவுலே கால வெச்சு உள்ளே போனா மண்ட டமால்னு இடிக்கும். நம்ம சொன்னா கேக்ற ஆளா? சோ... நெலவு வெக்கும் போது கொஞ்சம் காசு போட்டு கட்டி லட்சுமி ஆக்கியாச்சு. இப்போ சாமி ஆச்சே. அதனால காலை பவ்யமா தாண்டி உள்ளே போகா ஆரம்பிச்சாங்க. அதுவே இப்போ வழக்கமாகி போச்சு. இப்போ எவ்வளவோ முன்னேறி சூப்பரா பெரிய வாசல் வெச்சாலும் நாம நெலவு தாண்டி பொறோம், நெலுவு மேல நிக்கறது இல்ல... இது சொன்னாலும் எங்க அம்மா கேக்றது இல்ல.. எல்லாம் செரி ஆனாலும்னு இழுக்கறாங்க ;-)

இனி நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்லலாமே .....


மூட நம்பிக்கைனா என்னா!?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நகம் கடிக்க கூடாது என சொல்வது:

நகம் என்பது உடலின் இறந்த செல்கள். அதை மீண்டும் வயிற்றுக்கு அனுப்பினால் உடலுக்கு கேடு விளைவிக்கும். அதனால் தான் நகம் கடிக்க பாட்டிகள் தடா போட்டுள்ளார்கள்.

கர்ப்பிணிகள் இருவர் ஒன்றாய் இருப்பது:

இருவர்களுக்குள்ளும் பொறாமை வரலாம் என்பதால். கர்ப்பிணிகள் அந்த நேரத்தில் தான் அதிகமான அரவணைப்பு பாசம் தேடுவார்கள். அந்த நேரத்தில் ஒரு பெண்ணுக்கு நாம் காட்டும் அக்கறை அடுத்த கர்ப்பிணிக்கு மனதில் சங்கடத்தை ஏற்படுத்தும்(அவர்கள் சமமாக காட்டினாலும் கூட). இது ஒரு அவர்களுக்கு ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாதலால் தான் பெரியவர்கள் அவ்வாறு சொல்லியுள்ளார்கள். இதை நானும் உணர்ந்துள்ளேன். என் அத்தை கொடுத்த விளக்கம் இவையெல்லாம்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரேணுகா

துடைப்பம், அம்மிக்கல்ல பாக்க கூடாதுன்ற விஷ்யமே இப்போ தான் தெரியும்..

கவிசிவா சொல்வாங்கனு நினைக்கறேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரேணுகா உங்கள் கவிதை நன்றாக இருந்தது. காலையில் நான் உங்களிடமும் பேசினேனே :)

துடைப்பம் அம்மிக்கல் பார்க்கக் கூடாதுங்கறதுக்கு எந்த காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என் அப்பாவிடம் பேசும் போது கேட்டுச் சொல்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கு அடுத்த சந்தேகம், முந்தையதுக்கே சொல்லவில்லை....!சரி இருக்கட்டும் புதியது மூன்றாம் பிறை பார்த்தால் கண்கள் மூடி பிடித்தவர் முகத்தில் விழிக்க வேண்டுமென்பார்கள். நான்காம் பிர்றை பார்த்தால் நாய் படாத பாடு என்பார்கள் அது ஏன்? கவிசிவா எங்கே பதில்


வாங்கோ!
எங்கள் ரேணுகாவுக்கு பதில் சொல்லுங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ரேணுகா

எங்க இருந்து யோசிக்கறீங்க.. கேள்வி தானே ஈஸியா கேட்கலாம்னா? ;)

மூன்றாம் பிறை ஒரு டைம் வரைதான் இருக்கும்னு ஒரு ரேர் கேஸ்னு சொல்றாங்களோ.. ரைமிங்கா நாலாம் பிறைய சொல்றாங்களோ.. என்னனு சரியா தெரில.. இதுல ஆமிய கேட்டு பாருங்க.. மேபி இஸ்லாம்ல ஏதாவது விளக்கம் இருக்கலாம்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இதெல்லாம் இடைச்செருகல்கள் ரேணுகா. இதற்கெல்லாம் எந்த காரணமும் இருப்பதாக என் அறிவுக்கு எட்டவில்லை. வேற யாருக்காவது தெரிந்தால் சொல்வார்கள்.

அது சரி நீங்க தருமியா? கேள்வியா கேட்டு அடுக்கறீங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!


பல்லி விழுந்த பலன் சொல்லிட்டேள்!

கில்லி விழுந்தா என்ன பலன்?

எங்க ஊர்ல பல்லி கில்லி மேல விழுந்துதானு கேக்கறா?

அதான் ............................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி

கில்லி எங்கே விழுந்ததுனு சொலுங்க )

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்