மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

இப்போது நாம மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

வீட்டுல பெரியவங்க எதுக்கெடுத்தாலும் அத பண்ணாத இத பண்ணாதனு சொல்லுவாங்க.. ஆனா அதுக்கு உண்மையாலுமே அறிவியல் ரீதியா காரணம் இருக்கும். நம்ம மக்கள் கேக்கமாட்டாங்கனு அதுக்கு ஒரு கதை கட்டி விட்டுருப்பாங்க. அத பத்தி தான் இப்போ பேசப் போறோம்.

நெலவு மேல கால வெக்காத ( எங்க அம்மா அடிக்கடி சொல்றது, நான் அடிக்கடி செய்றது ;-) ):

அந்த காலத்து வீடுகளை பாத்தீங்கனா நுழைவாசல் ரொம்ப சின்னதா இருக்கும். அப்போ நெலவுலே கால வெச்சு உள்ளே போனா மண்ட டமால்னு இடிக்கும். நம்ம சொன்னா கேக்ற ஆளா? சோ... நெலவு வெக்கும் போது கொஞ்சம் காசு போட்டு கட்டி லட்சுமி ஆக்கியாச்சு. இப்போ சாமி ஆச்சே. அதனால காலை பவ்யமா தாண்டி உள்ளே போகா ஆரம்பிச்சாங்க. அதுவே இப்போ வழக்கமாகி போச்சு. இப்போ எவ்வளவோ முன்னேறி சூப்பரா பெரிய வாசல் வெச்சாலும் நாம நெலவு தாண்டி பொறோம், நெலுவு மேல நிக்கறது இல்ல... இது சொன்னாலும் எங்க அம்மா கேக்றது இல்ல.. எல்லாம் செரி ஆனாலும்னு இழுக்கறாங்க ;-)

இனி நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்லலாமே .....


//கில்லி எங்கே விழுந்ததுனு சொலுங்க )//

அதெல்லாம் சொல்லமாத்தேனே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நான் கேள்விபட்ட வரைக்கும் வேப்பமரத்தனடியில் படுத்தால் பேய் அடித்துவிடுமாம்!அற்வியல் ரீதியாக வேப்பமரம் இரவுநேரத்தில் ஆக்சிஜனை வெளியிடுவதில்லை..அதனாலேயே மூச்சு முட்டி இறக்க வாய்ப்பு அதிகம்!
பிறகு பார்த்தால் நல்ல நேரம் கெட்டநேரம்..இதுவும் நம்மில் பரவலாக காணப்படும் மூடநம்பிக்கையில் ஒன்று.
இறைவன் படைத்ததில் நல்ல நேரம் கெட்டநேரம் எது?எனது திருமணம்கூட எம்கண்டத்தில் நடந்தது என திருமணத்திற்கு வந்திருந்த இந்து நண்பர் ஒருவர் சொன்னார்..(ஒன்னும் நடக்கல)
சுனாமி கூட நல்ல நேரத்தில்தான் நடந்திருக்கும்..சில திருமணங்கள்,சடங்குகள்,பிரசவங்கள் எல்லாமே சில நேரங்களில் கெட்ட நேரத்தில் நடந்திருக்கும்....

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

சொல்லாம பலன் எப்படி தெரியும்.. ? மாமி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)


சரி சரி சொல்றேன் ”விழுந்த எடம் தலை” போறுமா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஷேக் வேப்பமரம் இரவுநேரத்தில் ஆக்சிஜனை வெளியிடுவதில்லை சொல்லி இருக்கீங்க. தவமணி அண்ணா இயற்கை தோட்டம் த்ரெட் சொன்னது.//இன்னும் இடம் இருந்தால் வேப்ப மரம் ஒன்றை வையுங்கள் அதுதான் இரவிலும் கூட ஆக்ஜிஜனை வெளியிடுகிறது. இதுவும் நம்மாழ்வார் சொன்னது//. இதுல எது சரி.

மாமி

உண்மையாவா? கில்லி அங்கே விழுந்தா பலன் ஏதும் இருக்காது.. தலைல அடி தான் விழும் ;( .. பலன் என்னனா.. அடி சரியா விழலைனா அது உங்களுக்கு நல்ல டைம் தான் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

"வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாட போகும்போது சொல்லிவைப்பாங்க
உந்தன்வீரத்தை கொலுந்திலேயே கிள்ளி வைப்பாங்க"

வினோஜா மேடம் நான் நினைக்கிறேன் அது வேப்பமரந்தான் என்று,இல்லையென்றால் புளியமரம்..ரெண்டில் ஒன்று..உங்கள் பதிவால் நானே குழம்பிவிட்டேன்...ரம்யாமேடம் நீங்களே இதுக்கும் நடுவர்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அது புளிய மரம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!


அப்படிதான் போலிருக்கு!

விழுந்தது பக்கத்தாத்து மாமி தலேலை!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நன்றி கவிசிவா மேடம்..இல்லையென்றால் என்னை வினோஜாமேடம் கேள்வியால் ஒரு வேள்வி செய்ய வைத்திருப்பார்கள்.கொஞ்சம் குழம்பிவிட்டேன்..தவமணி அண்ணா...வெரி சாரி ...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்