மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

இப்போது நாம மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

வீட்டுல பெரியவங்க எதுக்கெடுத்தாலும் அத பண்ணாத இத பண்ணாதனு சொல்லுவாங்க.. ஆனா அதுக்கு உண்மையாலுமே அறிவியல் ரீதியா காரணம் இருக்கும். நம்ம மக்கள் கேக்கமாட்டாங்கனு அதுக்கு ஒரு கதை கட்டி விட்டுருப்பாங்க. அத பத்தி தான் இப்போ பேசப் போறோம்.

நெலவு மேல கால வெக்காத ( எங்க அம்மா அடிக்கடி சொல்றது, நான் அடிக்கடி செய்றது ;-) ):

அந்த காலத்து வீடுகளை பாத்தீங்கனா நுழைவாசல் ரொம்ப சின்னதா இருக்கும். அப்போ நெலவுலே கால வெச்சு உள்ளே போனா மண்ட டமால்னு இடிக்கும். நம்ம சொன்னா கேக்ற ஆளா? சோ... நெலவு வெக்கும் போது கொஞ்சம் காசு போட்டு கட்டி லட்சுமி ஆக்கியாச்சு. இப்போ சாமி ஆச்சே. அதனால காலை பவ்யமா தாண்டி உள்ளே போகா ஆரம்பிச்சாங்க. அதுவே இப்போ வழக்கமாகி போச்சு. இப்போ எவ்வளவோ முன்னேறி சூப்பரா பெரிய வாசல் வெச்சாலும் நாம நெலவு தாண்டி பொறோம், நெலுவு மேல நிக்கறது இல்ல... இது சொன்னாலும் எங்க அம்மா கேக்றது இல்ல.. எல்லாம் செரி ஆனாலும்னு இழுக்கறாங்க ;-)

இனி நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்லலாமே .....

வினோஜா - தவமணி அவர்கள் கூறியது சரி.. வேப்ப மரம் இரவில் ஆக்ஸிஜனை அதிக அளவில் இல்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட அளவு வெளிவிட்டுக் கொண்டே இருக்கும்.

ஷேக்.. மரங்கள் பகலில் சூரிய ஒளி முன் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளிவிடும். இரவில் ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்டை ஆக்ஸடை தான் வெளிவிடும்

அதனால் தான் பொதுவாகவே மரங்களின் கீழ் படுக்க கூடாது. புளியமரம் இரவில் அதிக அளவு கார்பன் டை ஆக்ஸைடை வெளிவிடும். வேப்ப மரம் ஆக்ஸிஜனை இரவிலும் வெளியிடும்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கண் திருஷ்டி உண்மையா?டிவியில் கயிறு அது இது என்று விளம்பரம் செய்றாங்களே.அதை பற்றிசொல்லுங்கோ???/

ரீம்..

கண் திருஷ்டி என்பது உண்மையல்ல... ஆனால் எனக்கு அது எனக்கு ஒத்து போகும்.. ஒரு நல்ல ட்ரஸ் பண்ணி ஒரு கல்யாணத்தை அட்டன்ட் செய்தால் காய்ச்சல் வரும். சைக்கலாஜிக்கலா எனத் தெரியவில்லை..

ஆனால் எண்ண அலைகளுக்கு சக்தி உள்ளது. நம்மை பார்ப்பவர் எரிச்சலுடன் பார்க்கும் போது அந்த எண்ண அலையானது தாக்க கூடும்.. இது தான் கண் திருஷ்டி காரணம் என நினைக்கிறேன்..

மேலும் கயிறு என்பதும் ஒரு சைக்கலாஜிக்கல் ட்ரீட்மன்ட் தான். என் அக்கா கயிற்றின் மேல் நம்பிக்கை வைப்பவள். அவளின் காச்சலுக்கு டாக்டரை பார்த்தும் தீர்க்க முடியவில்லை. அவள் கயிறு வேண்டுமென கேட்டாள் நானும் , மாமாவும் சேர்ந்து ஒரு சிகப்பு கயிரு எடுத்து 5 முடிச்சு போட்டு திருநீரு வைத்து ஒரு பொட்டலத்தில் கட்டி அவளிடம் கொடுத்தோம். அவளுக்கு அம்மா கட்டிவிட்டார்..அடுத்த சில மணி நேரத்தில் காச்சல் போய்விட்டது ;)

மேலும் நான் கேள்விப்பட்டது. செம்பூத்து எனும் பறவை ஒரு குறிப்பிட்ட மருத்துவ குணமுள்ள மூலிகை வேரை கண்டு அறியும் திறன் கொண்டதாம். அதற்கு மட்டுமே வேர் இருக்கும் இடமும், இந்த வேர் தான் என்பதும் தெரியுமாம்.. தன் கூட்டை அந்த வேரை கொண்டும் கட்டுமாம். இந்த கயிரு கொடுத்து திருநீர் வைத்துவிடும் ஆட்கள் அந்த கூட்டில் உள்ள வேரை கொண்டு வந்து திருநீரில் போட்டுவிடுவார்களாம்.

அந்த வேருடன் கலந்த திருநீர் மருத்துவ குணம் பெற்று உடல் உபாதையை போக்கும் என படித்தும் உள்ளேன்..

மற்ற படி நம்பிக்கை எல்லாம்.. சும்மா.. தனிநபரை பொருத்தது.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனக்கு இந்த திருஷ்டியில் நம்பிக்கை இல்லை ஆனால் அம்மா சொல்லுவாங்க எல்லா பார்வையும் ஒரே மாதிரி இருக்காதுன்னு.அந்த பறவை விஷயம் ஆச்சரியமாக இருக்கு
இதை பற்றி இப்போது தான் கேள்விபடுகிறேன்.நான் டெலிஷாப்பிங்கில் சொல்றாங்களே அதை பற்றி கேட்டேன்

டெலிஷாப்பிங்கில் வரும் எந்த பொருளையுமே நான் நம்புவது இல்லை(எல்லாம் ஒரு வெஜிட்டபிள் கட்டர் வாங்கி நொந்த அனுபவம்தான்). அதிலும் இந்த கயிறு தகடு இதெல்லாம் ஏமாற்று வேலைதான்.

மற்ற படி கண் திருஷ்டி பற்றி என்னுடைய எண்ணங்களும் ரம்யாவுடையதே.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரீம்

டெலிஷாப்பிங்கில் இதை பற்றி வருவதே இப்போது தான் கேள்விபடுகிறேன்.. நானும் டெலிஷாப்பிங்கை நம்பவது இல்லை

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

விருந்தும் மருந்தும் பற்றி கதைப்பகுதியில் உள்ளதற்கு எனக்குத் தெரிந்த விளக்கம் இங்கே :-). அங்கேயே சொல்லலாம்னா எனக்கு கதைகள் படிப்பதில் ஏனோ விருப்பம் இல்லை :(. கதையைப் படிக்காமல் அங்கே கருத்து சொல்லக்கூடாதில்லையா அதான் :)

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்தான் என்பதன் பொருள்

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் விருந்து சாப்பாடு சாப்பிட்டால் உடல்நிலைக்கேடு வரும். அதனால் மூன்று நாட்களுக்கு மேல் விருந்து வேண்டாம்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மருந்து உட்கொண்ட பின்னும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றால் அந்த மருந்தை உடல் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து கொடுத்தாலும் பயன் இல்லை என்று சொல்வதற்கே மருந்தும் மூன்று நாட்களுக்கு மேல் வேண்டாம் என்றார்கள்.

இதுதான் விருந்தும் மருந்தும் மூன்றுநாள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆஹா என்ன ஒரு விளக்கம்.கதை எழுதும்முன் உங்களிடன் கேட்டுவிட்டு எழுதியிருக்கலாம் போல..

ஆனால் நான் கொஞ்சம் சின்னப் பையன் சார்..சொல்லாபோனா கல்யாணம் ஆன பிறகு இதுவரை யாருக்கும் அப்படி விருந்து வைத்தது கிடையாது...அந்த கதை எனது அனுபவம் அல்ல...ஆனால் கதையில் நடந்ததுபோல் என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

ஆஹவே விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பதை பயன்படுத்தி எழுதினேன்.நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அய்யோ சகோ ஷேக் நான் உங்கள் கதையைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே. விருந்து மருந்தும் மூன்று நாள் என்பதற்கான உண்மையான பொருளை மட்டுமே சொன்னேன் வேறொன்றுமில்லை.

எனக்கு கதையெல்லாம் எழுத வராது. அதைப்பற்றி கருத்து சொல்லவும் தெரியாது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!


’நாந்தான் மினியாம்மா!

இன்னாடாது இப்பொ இன்னாத்துக்கு இவ வந்து இன்னாத்தை பேச பொறானு பாக்குறீங்களா?

இன்னாமோ மூட நம்பிக்கைனு ஒரு திரேட்டு ஓபென் பன்னிக்கிறீங்களாமே!

மாமி ஊட்டாண்டை பேசிக்கினுருந்தாங்கோ!

நான் மாமிக்கு டிமிக்கி கொடுத்துட்டு ஒங்ககூட சில பல வெசயம் சொல்லாங்காட்டியும் வந்துக்குறேன்!

அமங்கலி பொம்மினாட்டி எதுரல வந்தா ஆவாதுனு சொல்லிக்கினே இருப்பங்கோ
அக்கிரகாரத்து பொம்மினாடிங்கோ!

பாவம் அதுங்களே புருசனை பறி கொடுத்துட்டு இன்னா பன்னுறதுனு தெரியாம சங்கட பட்டுகினுருக்குதுங்கோ!

அதே பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளைனு சொல்லுதுங்கோ!

இன்னா அநியாமாருக்கு!

நீங்க ஏதோ பட்டி தலைவியா இருந்தீங்களாம்!மாமி அடிக்கடி ஒன்கல பத்தி சொல்லிகினேருப்பாங்கோ!

இந்தாமாறி சொல்லுரவங்களை இன்னா பன்னுலாம்னு நீங்களே சொல்லிடுங்கோ!

மாமி வராப்புல இருக்கு !

நான் அப்புரமா வரேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்