மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

இப்போது நாம மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

வீட்டுல பெரியவங்க எதுக்கெடுத்தாலும் அத பண்ணாத இத பண்ணாதனு சொல்லுவாங்க.. ஆனா அதுக்கு உண்மையாலுமே அறிவியல் ரீதியா காரணம் இருக்கும். நம்ம மக்கள் கேக்கமாட்டாங்கனு அதுக்கு ஒரு கதை கட்டி விட்டுருப்பாங்க. அத பத்தி தான் இப்போ பேசப் போறோம்.

நெலவு மேல கால வெக்காத ( எங்க அம்மா அடிக்கடி சொல்றது, நான் அடிக்கடி செய்றது ;-) ):

அந்த காலத்து வீடுகளை பாத்தீங்கனா நுழைவாசல் ரொம்ப சின்னதா இருக்கும். அப்போ நெலவுலே கால வெச்சு உள்ளே போனா மண்ட டமால்னு இடிக்கும். நம்ம சொன்னா கேக்ற ஆளா? சோ... நெலவு வெக்கும் போது கொஞ்சம் காசு போட்டு கட்டி லட்சுமி ஆக்கியாச்சு. இப்போ சாமி ஆச்சே. அதனால காலை பவ்யமா தாண்டி உள்ளே போகா ஆரம்பிச்சாங்க. அதுவே இப்போ வழக்கமாகி போச்சு. இப்போ எவ்வளவோ முன்னேறி சூப்பரா பெரிய வாசல் வெச்சாலும் நாம நெலவு தாண்டி பொறோம், நெலுவு மேல நிக்கறது இல்ல... இது சொன்னாலும் எங்க அம்மா கேக்றது இல்ல.. எல்லாம் செரி ஆனாலும்னு இழுக்கறாங்க ;-)

இனி நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்லலாமே .....

ஹாய் சுதா அந்த காலத்தில் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு ஆரம்பித்து வைத்த பழக்கம் பல விதமாற்றங்களைக் கண்டு தள்ளி வைக்கும் பழக்கத்தில் வந்து நிற்கிறது.

அக்காலப் பெண்களுக்கு உடல் உழைப்பு அதிகம். மாதவிடாய்க் காலங்களில் பெண்களின் உடலும் மனமும் சோர்ந்து இருக்கும். ஓய்வும் தேவை. இதை சாதாரணமா சொன்னால் கேட்டுக்க மாட்டாங்கனுதான் தீட்டுன்னு சொல்லி தனியே இருக்க வைத்தார்கள். அப்படியாச்சும் அந்த பெண்ணுக்கு ஓய்வு கிடைக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் மட்டுமே இதன் பின்னால்.

ஆனால் இந்த தனித்தட்டு, தொட்டாலே தீட்டு அப்படீங்கறது எல்லாம் பின்னாடி வந்து ஒட்டிக்கிட்ட பழக்கங்கள். இன்று பல வீடுகளிலும் இந்த ஒதுக்கி வைக்கும் பழக்கம் இல்லை. (இருந்தால் அந்த நாட்களில் மட்டுமாவது ஓய்வு கிடைக்குமேன்னு ஏங்கற பெண்களும் உண்டு).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இனியா,,சுதா..

உங்கள் பதிலகளை இப்போது தான் கவனித்தேன்.. சுதா உங்களின் கேள்விக்கு கவி அழகா விளக்கம் கொடுத்திட்டாங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என் பொன்னு கு 8 மாதம் ஆகிறது. ஆகஸ்ட் 18 பிறந்த நாள்.சூலை மாதம் மொட்டை அடிக்கலாம் என்று நினைத்தன். ஆனால். குடும்பத்தில் என் மாமனாறுடய அப்பாவொட முதல் மனைவி இறந்து விட்டார்கள் என்று மொட்டை அடிக்க வென்டாம் என்கிறார்கள். மாமனாருடைய அம்மா இன்னும் இருக்கிறார்கள். இதோடு விட்டால் 3வது வயதில் தான் மொட்டை அடிக்கனுமாம். இப்பவே குழந்தைக்கு முடி அதிகமாக உள்ளது.நான் என்ன செய்ய??? சொல்லுஙகலென்

இதை நீங்க சின்ன சின்ன சந்தேகங்கள் இழையில் கேட்கலாம். இருந்தாலும் நீங்கள் புதுசுனு தெரியும். இந்த இழையானது தேவையில்லாத மூடநம்பிக்கை எதற்கு வந்ததுனு சும்மா நம்ம தெரிஞ்சக்கறதுக்காக தொடங்கப்பட்டது. இதில் யாருக்கும் அட்வைஸ் செய்யறது இல்லை. நம்பிக்கைங்கறது அவங்க அவங்க மனசை பொறுத்த விஷ்யம்.

என்னை கேட்டால்.. மாமனாருடைய அப்பானா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வயசானவங்க ..இறந்துட்டாங்க..ஒன்னும் செய்யமுடியாது..அதுக்கு வளர குழந்தையை ஏன் பாடுபடத்தறாங்கனு தெரியலை.. ஏற்கனவே வெயில் சுட்டு எடுக்குது.. இதில் நீங்க வேற சூலை மாதம்னு ஆகஸ்டல தான் அடிக்க நினச்சேன்னு சொல்றீங்க.. இப்ப அடிச்சா தானே மே மாசத்துல்ல பிள்ளை கொஞ்சம் நல்லா இருக்கும்.. போதாக்குறைக்கு 3 வயசுல தான் அடிக்கனுமா? இது எல்லாம் ரொம்ப ஓவர்ங்க..

வீட்டுல பக்குவமா சொல்லி மொட்டை அடிங்க.. பிரச்சனை வராம பாத்துக்கோங்க.. குழந்தை தான் முக்கியம்.. அதாவது இறந்தவரின் பிள்ளை தான் மொட்டை போடுவாங்க.. சம்மந்தமே இல்லாம பாப்பாக்கு மொட்டை போட்டா வேற கெட்டதுனு நினைப்பாங்க போல.. இல்லைனா நல்ல காரியம் உடனே எதுக்கு நினைக்கலாம்.. எனக்கு தெரிஞ்சு நிறைய பேர் அலட்டிக்காம சலூனுக்கு போயி கூட வேலைய முடிக்கறாங்க..

வீட்டுல பொறுமையா பேசி மொட்டை போடுங்க சித்ரா..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்